ஊட்டி : "தேவைகளை குறைந்து எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்' என, நுகர்வோர் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன் பேசுகையில், "
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன் பேசுகையில், "
"பொருட்களை வாங்க விளம்பரம் தூண்டுகிறது. விலையை பற்றி யோசிக்காமல், தேவைக்கும் அதிகமான பொருட்களை வாங்கி குவிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடம்பர பொருட்களை வாங்க கடன், லஞ்சம், வரதட்சணை தலைதூக்குகிறது. பிளாஸ்டிக் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
பொருட்களை வாங்கும் போது, தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். உணவு கலாச்சாரம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. தேவைகளை குறைத்து எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்; நாம் எச்சரிக்கையாக இருந்து, மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்க தூண்ட வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக