9.அரசு சலுகைகளுக்கு லஞ்சம் கொடுக்காதீங்க... அலுவலகத்தை தொடர்பு கொள்ள அழைப்பு
குன்னூர் : ""உடல் ஊனமுற்ற, மன வளர்ச்சி குன்றியோர் லஞ்சம் கொடுத்து அரசு சலுகைகளை பெற வேண்டாம்,'' என, மாவட்ட உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை அலுவலர் கூறினார்.நீலகிரி மாவட்ட மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தின் மூன்றாம் ஆண்டு விழா, அருவங்காடு பாய்ஸ்கம்பெனி தூய ஆரோக்கிய அன்னை தேவாலய பங்கு மண்டபத்தில் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை அலுவலர் விக்டர் மரியஜோசப் தலைமை வகித்து பேசுகையில், ""உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றியோர் அரசின் சலுகைகளை பெற, உடல் ஊனமுற்றோர் மாவட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். உதவிகள் பெற லஞ்சம் கொடுக்க தேவையில்லை; லஞ்சம் கொடுத்து ஏமாற வேண்டாம்,'' என்றார். குன்னூர் டி.எஸ்.பி., தர்மராஜ் பேசுகையில், ""மனவளர்ச்சி குன்றியோர் மன தைரியம், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; வாழ்க்கையை சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோரின் ஊக்குவிப்பு மிக அவசியம்.மன வளர்ச்சி குன்றிய தங்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, தெய்வ பக்தி என்ற உணவை ஊட்ட தவறக் கூடாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை திருட்டு தொழிலில் ஈடுபடுத்துதல், பிச்சை எடுக்க வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட செய்யக் கூடாது,'' என்றார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரி துணை முதல்வர் கிறிஸ்டி, குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் சகோதரி.ஷீலா பேசினர். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், பெரியவர்களுக்கு குளிர்கால ஆடை, பள்ளி சீருடை, கம்பளி, போர்வை, பனியன், வேட்டி, புடவை, பாத்திரம் உட்பட பொருட்கள் வழங்கப்பட்டன. குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவியர், பாய்ஸ்கம்பெனி புனித கிளமென்ட் துவக்கப் பள்ளி, லவ்டேல் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சர்வதேச மனித உரிமைகள் கழக அமைப்பாளர் ராமகிருஷ்ணன், ஆப்பிள் பீ பகுதி நலச்சங்க தலைவர் அந்தோணிசாமி, வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு உறுப்பினர் வினோத்குமார், நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் தலைவர் சிவசுப்ரமணியம், பொதுச் செயலர் வீரபாண்டியன், கிளைத் தலைவர் டேவிட் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை, வடிவேல் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட மனவளர்ச்சி குன்றியோர் சங்கத் தலைவி இந்திரா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நன்றி தினமலர் 28 02 2010
நுகர்வோர்
- முகப்பு
- நுகர்வோர் சட்டம்
- environment
- awarness programme photos
- NEWS
- மக்கள் ஆலோசனை மையம்
- கண் தானம்
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- consumer links
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
- cchep nilgiris
- NEAC
- ► 2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
- ▼ 2011 (184) ▼ January ► December
அன்புடன் வரவேற்கின்றோம்
you are welcome to our web page
எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்
Please give your GOOD IDEAS FOR DEVELOPING THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPSகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
நுகர்வோர் பாதுகாப்பு போட்டி வென்றவர்களுக்கு சான்றிதழ்
2.நுகர்வோர் பாதுகாப்பு போட்டி வென்றவர்களுக்கு சான்றிதழ்
பந்தலூர் : நுகர்வோர் பாதுகாப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
பொன்னானி ஜி.டி.ஆர்., பள்ளியில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. உதவி ஆசிரியர் முருகன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசுகையில், ""ஏட்டுக் கல்வியை மட்டுமல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் தெரிந்துக் கொள்ள, சமூக நல அமைப்புகள் சார்பில் பள்ளிகளில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது, மாணவர்களுக்கு பயனாக உள்ளது,'' என்றார்.
டாக்டர் கதிரவன் பேசுகையில், ""நுகர்வோரின் கடமை மற்றும் உரிமை குறித்து மாணவப் பருவத்திலேயே தெரிந்துக் கொள்ள, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது, விழிப்புணர்வை ஏற்படுத்தும்,'' என்றார்.
உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரம்யா, மையத் தலைவர் சிவசுப்ரமணியம், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மைய நிர்வாகிகள் கணேசன், முருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் ரவிகுமார் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர் 28 .02 .2010
Top
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
Online edition of India's National Newspaper
Tuesday, Feb 23, 2010
ePaper
Mobile/PDA Version
Tamil Nadu - Udhagamandalam
Signature campaign to help mentally challenged persons in Udhagamandalam
Special Correspondent
Udhagamandalam: With efforts made to get mentally challenged persons off the streets going in vain, members of the Udhavum Karangal, the Public Awareness Association of Udhagamandalam and the Centre for Consumer Awareness, Human Rights and Environmental Protection, Gudalur took to the streets on Monday and organised a signature campaign opposite the District Collectorate.
Lamenting that of late the number of mentally challenged persons had increased considerably, the Secretary, Public Awareness Association of Udhagamandalam, G. Janardhanan, said that the objective of the campaign was to enhance awareness among the people about the problem.
Though taking them off the streets would benefit them and the public, nothing tangible had been done till now despite repeated representations, he said.Drug addicts
Stating that practically all the mentally challenged persons had been brought from the plains, he said that the number of drug addicts was also rising. If action was not taken by the authorities concerned, the matter would be taken up with the human rights authorities.
The Secretary, Udhavum Karangal, Suresh Kumar, said that in a popular vacation destination like Ooty such a problem should not be allowed to get out of hand.
The President, Centre for Consumer Awareness, Human Rights and Environmental Protection, S. Sivasubramaniam, said that mentally challenged persons from Karnataka and Kerala were brought by their relatives to Gudalur and abandoned. The issue should be treated with the seriousness it deserves.
Printer friendly page
Send this article to Friends by E-Mail
THANKS BY
THE HINDU
23/02/2010
--------------------------------------------------------------------------------
nature drive held
AIADMK district secretary, 12 others arrested
Signature campaign to help mentally challenged persons in Udhagamandalam
Power supply to be disrupted
Award presented
South India tea contest at Coonoor
Archives
Yesterday's Issue
The Hindu Group: Home
About Us
Copyright
Copyright © 2010, The Hindu. Republication or redissemination of the contents of this screen are expressly prohibited without the written consent of The Hindu

திங்கள், 22 பிப்ரவரி, 2010
நுகர்வோர் அமைப்புக்கள் சார்பில்
பள்ளியில் நுகர்வோர் கருத்தரங்கு
ஊட்டி, பிப். 22:கூடலூர்
நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள் சார்பில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியை நடத்தியது. ‘உயிரை கொல்லும் உணவு கலப்படம்‘ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு கட்டுரை எழுதினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிழ்கள் வழங்கும் விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவராஜ் வரவேற்றார்.
நெஸ்ட் அறக்கட்டளை நிறுவனர் சிவதாஸ் முன்னிலை வகித்தார்.
ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தனன் கலந்துக் கொண்டு பேசியதாவது:
உணவுப் பொருட்கள் அனைத்தும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு எண்ணெய்களில் பாமாயில் கலப்படம் செய்யப்படுகிறது. பாலில் கார்பனேட், ஹைட்ராக்சைடு, ரசாயன கழிவுகள் போன்றவை கலக்கப்படுகிறது. தேயிலை தூளில் முந்திரி, புளியங்கொட்டை தோல்களின் துகள்கள் கலந்து விற்கப்படுகிறது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், வாதம் போன்ற நோய்கள் தாக்குகின்றன. சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பழங்களில் மண்புழுதிகள், வாகன புகை படிவதால் நோய் ஏற்டுகிறது. எனவே உணவு கலப்படத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் கலப்படம் இல்லாத உணவை உட்கொண்டு உடல் நலத்தை காத்துக் கொள்ள வேண்டும்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசுப்பிரமணியம் பேசியதாவது:
உணவே உனது மருந்தாகட்டும், மருந்தே உனது உணவாகட்டும் என்ற முதுமொழிக்கேற்ப நமது உணவு அமைவதில்லை. நமது உணவு தரமானதாக, சுகாதாரமானதாக சரியான விலையில் கிடைக்க வேண்டும். பாதுகாப்பான, தரமான உணவு உண்ணாவிட்டால் நம்மால் சரியாக சிந்திக்கவும், செயல்படவும், அமைதியாக வாழவும் முடியாது. கலப்படம் பல வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது. உணவு கலப்படத்தை தடுக்க அரசு பல சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கலப்பட பொருட்கள் விற்பனை செய்வதை கண்டால் உடனடியாக மாவட்ட கலெக்டர், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர், துணை இயக்குநர், ஊரக நலம், நகாராட்சி நல அலுவலருக்கு புகார் தெரிவிக்க வேண்டும் அல்லது தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளில் புகார் தெரிவிக்கலாம். உணவுப் பொருட்கள் வாங்கும் போதே தரம், தேதி, எடை, காலவதி தேதி அதிலுள்ள சத்துகள் குறித்து அறிந்து கொண்டு வாங்க வேண்டும். உணவு பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் 2006 நடைமுறைப்டுத்தினால் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு சிவசுப்பிரமணியம் பேசினார்.
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தேவர்சோலை நுகர்வோர் சங்க தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் சிதம்பரநாதன், காத்தாடி மட்டம் நுகர்வோர் சங்க துணை தலைவர் பாபு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
Thanks to Dinakaran 22-02-10 Ooty
கலப்படத்தால் நோய்; dinamalar news 22-02-10
4.கலப்படத்தால் நோய்; பாராமல் விட்டால் பாதிக்கும் மெய்! பொருட்களை பார்த்து வாங்க பழகிக்கோங்க...
ஊட்டி : "கலப்பட பொருட்களை உட்கொள்வதால் புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது' என அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டது.உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள் சார்பில், "உயிரைக் கொல்லும் உணவுக் கலப்படம்' என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த 60 பேர் கட்டுரை எழுதி அனுப்பினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட நுகர்வோர் குழு கூட்டமைப்பு, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்து பேசுகையில், ""உணவுக் கலப்படத்தால் மக்கள் பாதிக்கின்றனர்; பல உணவுப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிப்பதை அறியாமலே பயன்படுத்துகிறோம். இவற்றை அறிந்துக் கொள்வதுடன், போதை வஸ்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் பேசுகையில், ""அரிசியில் கல், மண், கோதுமையில் எர்காட், ஊமத்தை விதைகள், கேழ்வரகில் மணல், செயற்கை நிறங்கள், ரவை, கோதுமை, அரிசி மாவுகளில் மரவள்ளி மற்றும் கிழங்கு மாவு, பருப்பு வகைகளில் நச்சுசாயம், வனஸ்பதியில் உருளைக் கிழங்கு மாவு, தேயிலை தூளில் முந்திரி மற்றும் புளியங்கொட்டை தூள் உட்பட பல பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. சாலையோரங்களில் விற்கப்படும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் வாகனப் புகை, மண்புழுதி படிந்திருக்கும். கலப்பட பொருட்களை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது,'' என்றார்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது: தரமாக, சுகாதாரமாக, சரியான விலையில் உணவு கிடைக்க வேண்டும். பாதுகாப்பான தரமான உணவு உண்ணாவிட்டால், நம்மால் சரியாக சிந்திக்கவும், செயல்படவும், அமைதியாகவும் வாழ முடியாது. உணவுக் கலப்பட தடை சட்டம் 1954ன் படி, கலப்படம் செய்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை விட, விற்பவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்.உணவுப் பொருட்கள் வாங்கும் போது தரம், தேதி, எடை, காலாவதி, அதில் உள்ள சத்துக்கள் குறித்து அறிந்து வாங்க வேண்டும். உணவுப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் 2006ஐ நடைமுறைபடுத்தினால் பயன் கிடைக்கும். கலப்பட பொருட்கள் விற்பது தெரிந்தால், மாவட்ட கலெக்டர், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர், துணை இயக்குநர், ஊரக நலம், நகராட்சி நகர் நல அலுவலர், தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் பேசினார்."நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் பேசுகையில், ""ரசாயன உரங்களால், உணவில் ரசாயன தன்மை சேர்ந்து தாய்ப்பாலில் கூட விஷத்தன்மை அடைகிறது. கீரை, பருப்பு, வேர்கடலை, கொண்டை கடலை போன்ற புரத சத்து உணவுகள், பேரிச்சம்பழம், முருங்கை, வல்லாரை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள், நமது உடலுக்கு பல்வேறு சத்துகளை அளிக்கிறது. மனமும், உடலும் அமைதியாக இருக்க தியானப் பயிற்சி அவசியம். கடைகளில் விற்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களை விட சத்தான தரமான உணவே, உடலையும், மனதையும் தரமானதாக மாற்றும். இயற்கையாக கிடைக்க கூடிய கீரை, நெல்லி, பழ வகைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஆறு முதல் 8ம் வகுப்பு பிரிவில், கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளி மாணவி ஷீபா, கோத்தகிரி ரிவர்சைடு பள்ளி மாணவன் தக்ஷின், பிக்கட்டி பிரியதர்ஷினி பள்ளி மாணவி மனிஷா லாவண்யா முதல் மூன்று பரிசு பெற்றனர். பிளஸ் 1 பிரிவில், காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியின் மஞ்சுளா, சபரி, சரண்யா, ராகுல் முதல் மூன்று பரிசு பெற்றனர். ஊட்டி பிரீக்ஸ் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் சாமி ஜஸ்னா, ரிவர்சைடு பள்ளி மாணவன் நித்தேசுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தேவர்சோலை நுகர்வோர் சங்கத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் சிதம்பரநாதன், காத்தாடிமட்டம் நுகர்வோர் சங்க துணைத் தலைவர் பாபு, ஆசிரியர்கள் மோகனன் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்
nanri dinamalar 22-02-2010

|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||
|
|
||||||
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)