அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 13 ஜூலை, 2010

கவுரவத்தின் பெயரில் காவு கொடுக்கும் கொடூரம்


கவுரவக்

கொலைகள் & மொழி மாச்சரியமின்றி எல்லா ஊடகங்களிலும் இடம்பிடித்து விட்ட தலைப்புச் செய்தி. குடும்ப கவுரவத்திற்கு எதிராக நடந்துக் கொண்டார்கள் என்பதற்காக தொப்புள் கொடி உறவையே அறுத்துக் கொள்வதற்கு பெயர்தான் கவுரவக் கொலை. உயிரை கொல்லும் கொலைக் குற்றத்திற்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்த முயல்வது சமூக கட்டமைப்பின் அவலம்.

வடமாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஒரே சாதிக்காரர்களாக இருந்தாலும், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்துக் கொள்ள தடை இருக்கிறது. காரணம் ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர, சகோதரிகள். மீறித் திருமணம் செய்தால் ‘காப் பஞ்சாயத்து’ மூலம் தண்டனை உண்டு. பெரும்பாலும் பிரிந்து விட உத்தரவிடுகிறது. கல்யாணம் முடிந்த பிறகு எப்படி பிரிவது? முடிவு மரணத் தண்டனை. சாதி மாறி திருமணம் செய்பவர்களுக்கும் இப்படி தண்டனைகள் உண்டு. இது ஒன்றும் புதிதல்ல, அந்த மாநிலங்களில் காலம் காலமாக நடந்துக் கொண்டிருக்கும் குற்றம். இப்போதுதான் ஊடக வெளிச்சத்தில் சிக்கியுள்ளன.

தமிழகத்திலும் கவுரவக் கொலைகள் உண்டு. ஆனால் கோத்திரத்தின் பெயரால் அல்ல; சாதியின் பெயரால். வேறு சாதியில் திருமணம் செய்த பெண்களை கொன்று போட்ட நிகழ்வுகள் கடந்த ஒராண்டில் மட்டும் 20 பதிவாகி உள்ளன. பெரும்பாலும் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்ததால் நிகழ்த்தப்பட்ட கொலைகள். சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையில் நடந்த கொடூரக் கொலைக்கு மட்டும் வசதி வேறுபாடு காரணம்.

மதம் மாறி திருமணம் செய்பவர்களை கொலை செய்வதும் நாடு முழுவதும் நடந்து வருவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரே மதமாக இருந்தாலும் சாதி மாறி திருமணம் செய்வதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த விவரங்கள் வெளியில் தெரிந்த பிறகு தொண்டு நிறுவனங்களும், தேசிய மகளிர் ஆணையமும் கள ஆய்வில் இறங்கி புள்ளிவிவரங்களை சேகரிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 1000 பேர் கவுரவக் கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் இவர்கள். இந்த 1000 பேரில் கருவாய் இருந்த உயிர்கள் கணக்கில் சேரவில்லை.

இதன் தீவிரத்தை உணர்ந்து ‘சக்தி வாகினி’ என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இப்பிரச்னை குறித்து மத்திய அரசும், 8 மாநில அரசுகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜூன் 21ம் தேதிதான் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி, ‘‘கவுரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். அதற்கான சட்டமுன்வடிவு தயார்” என்று கூறியுள்ளார். ‘‘இந்த காட்டுமிராண்டிதனமான கொலைகளை தடுக்க சட்டம் போடுவதுடன் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் அவசியம்’’ என்கிறது மக்கள் கண்காணிப்பகம் போன்ற சமூக அமைப்பு.

கருணைக் கொலைக்கே அனுமதியில்லாத நாட்டில் கவுரவக் கொலைகளை எப்படி அனுமதிப்பது?

கவுரவத்தின் பெயரில் காவு கொடுக்கும் கொடூரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக