அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 11 ஆகஸ்ட், 2010

ஜி.எச்., வசதிக்கு தவறினால் அறவழிப் போராட்டம் : தயாராகும் கூடலூர் நுகர்வோர் மைய-மக்கள் மையம்

 "பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர தவறினால், அறவழிப் போராட்டம் நடத்தப்படும்'

ஏழை, எளிய மக்களின் மருத்துவச் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவமனைகளின் பராமரிப்புக்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டும், பல மருத்துவமனைகள் கண்டுகொள்ளப்படாமல் தான் உள்ளன. போதிய டாக்டர் பணியிடம், உபகரணங்கள் இல்லாதது உட்பட பல காரணங்களால், குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் பலர், தனியார் மருத்துவமனைகளை நாடி கூடுதலாக செலவழிக்க வேண்டியுள்ளது. பந்தலூரில் செயல்படும் அரசு மருத்துவமனையும் இதில் இடம் பிடித்துள்ளது; பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்தவில்லை என்றால் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தலூரில் செயல்படும் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய-மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு:

பந்தலூரில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பந்தலூர் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்ட பின், தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த போது பணிபுரிந்த 6 டாக்டர்கள், தரம் உயர்த்தப்பட்ட பின் மாறுதல் பெற்று சென்று விட்டனர்; பொதுமக்களின் வலியுறுத்தலுக்கு பின், ஒருவர் பணியமர்த்தப்பட்டார். மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன், ஈ.சி.ஜி., பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்கு செயல்பாடின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தலா 40 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளதுடன், சவக்கிடங்கு, கவுன்சிலிங். பயோமெடிக்கல், கழிப்பறைகள், ஆம்புலன்ஸ் ஷெட் பயன்படுத்தாமல் பாழடைந்து வருகிறது.மாதந்தோறும் குடும்ப நல அறுவை சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பகலில் மட்டுமே பணியில் டாக்டர் உள்ளார். இரவில் டாக்டர் இல்லாததால், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் அவசரச் சிகிச்சைக்கு, கேரளா மாநில தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது.
மையம் சார்பில், ரத்ததான முகாம் நடத்த முன்வந்தாலும், மருத்துவமனையில் அதற்கான ஒத்துழைப்பு மற்றும் வசதிகள் இல்லாததால், ரத்ததானம் அளிக்க முன்வருபவர்கள், முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பந்தலூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர் பணியிடத்தை நிரப்பவும், மகப்பேறு மருத்துவர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய-மக்கள் மையம் சார்பில் அமைதி வழி அறப்போராட்டம் நடத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக