ஊட்டி : நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் நினைவு தினம், வீர வணக்க நாளாக, ஊட்டி பாரத் வியாசா வித்யாலயா பள்ளியில் அனுஷ்டிக்கப்பட்டது.
ஆசிரியை வசுமதி வரவேற்றார். விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜியின் உருவப்படத்துக்கு, மாணவ, மாணவியர் மலரஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் குமரன் பேசுகையில், ""தேசப் போராட்ட வரலாறு 98 சதவீதம் மறைக்கப்பட்டு, 2 சதவீதம் மட்டும் தான் பள்ளி, கல்லூரிகளின் பாடங்களில் உள்ளது,'' என்றார்.
நெஸ்ட்' அமைப்பாளர் சிவதாஸ் கூறுகையில், ""ஆன்ம பலம், படைபலம், மக்கள் சக்தி என்று அளவற்ற ஆற்றல் உடையவர் நேதாஜி; இவரது வாழ்க்கையை மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்
. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம், "தேசிய ஒழுக்கக் கல்வி இல்லாததால், தனி மனித சீர்கேடு, சமூக தீமைகள் பெருக காரணம்,'' என்றார். ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் பேசினார்.
"தேசமே விழித்தெழு' என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்ற பெற்றவர்களுக்கு, "உதவும் கரங்கள்' அமைப்பை சேர்ந்த சுரேஷ்குமார் பரிசு வழங்கினார். ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக