நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்-மக்கள் மையங்கள் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.ஊட்டியில், மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்.கூட்டமைப்பு தலைவரும், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவருமான சிவசுப்ரமணியம், கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். மைய நிர்வாகி ராஜன் வரவேற்றார்.
சமையல் காஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
கூட்டமைப்பு மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், வசம்பள்ளம் நுகர்வோர் சங்கம், கிராம நுகர்வோர் மன்றங்கள், தேவர்சோலா நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், மக்கள் மையங்கள் சார்பில், மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, சுப்ரமணி, வீரபாண்டி, கூட்டமைப்பு நிர்வாகிகள் செல்வராஜ், வீரமணி, சுந்தரலிங்கம், கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள், சத்யசீலன், கவிதா, மஞ்சுளா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ், ராஜேஷ், சீதாலட்சுமி, சிவகுமார், கணேஷன், மருதமுத்து பங்கேற்றனர். கோகிலா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக