அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

சேவை குறைபாடுடன் பொருட்கள் வழங்கினால்... இருக்கவே இருக்கு... நுகர்வோர் குறைதீர் மன்றம்


 "சேவை குறைபாடுடன் பொருட்களை வழங்கினால், நுகர்வோர் குறைதீர் மன்றம் மூலம் தீர்வு காணலாம்' என, நுகர்வோருக்கு அழைப்பு

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், கல்வி மையம் சார்பில், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்ற 2வது ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 

மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டீன் வரவேற்றார். 

பள்ளி தலைமை ஆசிரியை செலீன் பேசுகையில், ""நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை, மாணவ, மாணவியர் பயன்படுத்தி, எதிர்கால வாழ்வை வளமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என்றார். 


சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நெல்லியாளம் நகர மன்றத் தலைவர் காசிலிங்கம்,


""இதுபோன்ற மன்றங்களில், பெயரளவுக்கு மட்டுமே ஈடுபடாமல், முழுமையாக பயன்படுத்தி, தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

 
நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""விளம்பர மோகத்தால் கவரப்பட்டுள்ள இன்றைய நாகரீக உலகில், மக்களின் தேவை அதிகரிப்பதால், ஏமாற்றும் செயல்கள் தலைதூக்குகின்றன. விளம்பரத்தை பார்த்து ஏமாறாமல், தனது தேவை எதுவோ அதற்கேற்ப, போலித்தனமில்லாத பொருட்களை நுகரத் துவங்கினால், சிறந்த நுகர்வோராக வாழ இயலும்,'' என்றார். 

 
தலைமையிட துணை தாசில்தார் குமார்ராஜா பேசுகையில், ""பணத்தை கொடுத்து பொருட்கள் வாங்கும்போது, அதற்குரிய மதிப்பு உள்ளதா? என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். 

ஏமாற்றும் நோக்கில் சேவை குறைபாடுடன் பொருட்களை வழங்கினால், நுகர்வோர் குறைதீர் மன்றம் மூலம் தீர்வு காணலாம். நுகர்வோர் மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்ட மாணவர்கள், நுகர்வோர் உரிமைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

 நுகர்வோர் உரிமைகள் குறித்து, பந்தலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் விஜயசிங்கம் பேசினார்

 பொட்டலப் பொருட்களில் ஏமாற்றுதல் குறித்து, டாக்டர்.சதீஷ், பேசினார் 


மருத்துவத் துறையும்-நுகர்வோரும் குறித்து டாக்டர்.கதிரவன், பேசினார்



 "மாணவர்களும்-நுகர்வோரும்' குறித்து, பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சித்தானந்த், 



 ஓய்வுபெற்ற ஆசிரியர் பெள்ளு   பேசினார் 

நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி கணேசன், பேசினார்  




மாணவர் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சுகைனா நன்றி கூறினார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக