அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 11 ஆகஸ்ட், 2010

'வரும் முன் காப்போம்' திட்டத்தில்...தொய்வு! சிறப்பு டாக்டர்கள் வருகை குறைவு

         ஆரம்பத்தில் நன்றாக செயல் பட்டு வந்த, "வரும் முன் காப்போம்' திட்டத்தில், தற்போது சிறப்பு மருத்துவர்களின் வருகைக் குறைவால் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கென்று தனியாக டாக்டர்கள் குழுவை நியமித்தால், முதல்வரின் நோக்கம் நிறைவேறும்.
         தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், "வரும் முன் காப்போம்' திட்டத்தை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். இத்திட்டத் தின்படி, 5,000 மக்கள் தொகை கொண்ட ஒரு துணை சுகாதார நிலையத்துக்கு, ஒரு முகாம் நடத்தப்பட வேண்டும். முகாமில் கலந்து கொள்ளும் நோயாளிகளுக்கு சிறப்பு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.
        சிறப்பு முகாமில், பொது மருத்துவம், ரத்த சோகை, சர்க்கரை நோய், இரைப்பை, குடல் நோய், மனநோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண் நோய்கள், மகளிர் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம், சித்த மருத்துவம் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்களால், மருத் துவ பரிசோதனை செய்து, இலவச சிகிச்சை வழங்கப்படும்.
  கருவுற்ற பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி., ரத்த அழுத்த பரிசோதனை, ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, கொழுப் பின் அளவு, சர்க்கரையின் அளவு என இலவச பரிசோதனையும் இந்த முகாமில் செய்யப்படும். ஆரம்பத்தில், வரும் முன் காப்போம் திட்டம் மிகச் சிறப்பாக நடந்து வந்தது. அனைத்து முகாம்களிலும் ஒவ்வொரு துறைகளிலும் இருந்து சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
         கண், எலும்பு, தோல், பல், காது, மூக்கு, தொண்டை என ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள், கிராம மக்களுக்கு மருத் துவ பரிசோதனை நடத்தினர். முகாம் நடக்கும் இடத்துக்கே மருத்துவ பரிசோதனை கருவிகளை கொண்டு வந்து நோயாளிகளுக்கு சோதனைகள் நடந்தன.
         சிறப்பு மருத்துவர்கள், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வருவர். காலை 9 மணிக்கு துவங்கும் முகாம், மாலை வரை நடக்கும். தற்போது, இந்தத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. மருத்துவ முகாமுக்கு, குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டுமே சிறப்பு மருத்துவர்கள் வருகின்றனர்;
           அதிக எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவர்கள் வருவதில்லை. மாவட்ட மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், சிறப்பு மருத்துவர்கள், அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஒரு துணை சுகாதார நிலையத்தில், மருத்துவ முகாம் நடக்கும்போது, அந்த வட்டாரத்தில் உள்ள பிற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
      இதனால் அந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. அந்தப் பகுதி மக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது டாக் டர்கள் இல்லாததால் பாதிக்கப்படுகின்றனர். வரும் முன் காப்போம் திட்டத் தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.
           அப்போது தான், இத்திட்டத் தைக் கொண்டு வந்ததற்கான முதல்வர் கருணாநிதியின் நோக் கம் நிறைவேறும். இத்திட்டத்துக்கென்று தனியாக டாக்டர்கள் குழுவை நியமிக்க வேண்டும். இந்த டாக்டர்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. சிறப்பு மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு கிராமப்புற மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பணியை மட்டுமே இவர்கள் செய்ய வேண்டும்.
             ஒவ்வொரு துணை சுகாதார மாவட்டத்துக்கும் இந்தக் குழு நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் ரத்தப் பரிசோதனை செய்வதற்கான கருவி, ஸ்கேன், பயிற்சி பெற்ற ஆய்வுக்கூட நிபுணர் போன்ற வசதிகளை படிப்படியாக கொண்டு வந்தால், அந்தப் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
           ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு, தேவைப்படும்பட்சத்தில் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்லலாம். இத்திட்டத்துக்கு கிராமப்புற மக்கள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தால், அதன் நிறை, குறைகள் தெரியவரும்.
         திட்டத்தை நிறைவேற்றும் டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களின் கருத்துக்களைப் பெற்று, திட்டத்தை முனைப்புடன் அரசு செயல்படுத்தலாம்.

நடவடிக்கை  எடுக்குமா  அரசு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக