ஊட்டி: "தரமான உற்பத்திக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை, தரமான தங்கத்துக்கு பி.ஐ.எஸ்., ஹால் மார்க் என்ற அடையாளத்தை பார்த்து வாங்கி பயன்பெற வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது.கூடலூர் நகர்வோர் மனித வள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய-மக்கள் மையம் சார்பில் கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகளுக்கு, தரக் கட்டுப்பாடு விழிப்புணர்வு பயிற்சி முகாம், ஊட்டி மக்கள் மையத்தில் நடத்தப்பட்டது.
மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம், கூட்டமைப்பு செயலர் வீரபாண்டியன், முன்னிலை வகித்தனர்.
ராஜராஜன் வரவேற்றார்.இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைவன மண்டல இயக்குனர் ராஜேந்திரன், சிறப்பு விருந்தினராக பேசுகையில்,"" தரமான பொருட்கள் மட்டுமே, நாம் கொடுக்கும் பணத்துக்கு உரிய பயனை தருகிறது. தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்து திருப்தி அடைந்தால் மட்டுமே, தர முத்திரை, தர குறியீட்டு எண், நிறுவன பதிவு எண் வழங்கப்படும். ஐ.எஸ்.ஐ., முத்திரை மற்றும் தர குறியீட்டு எண், நிறுவன எண் ஆகியவற்றை, பொருள் மற்றும் உறைகளில் பதிவு செய்ய வேண்டும்.
தரமற்ற பொருட்கள், போலி முத்திரைகளை கண்டறிந்தால், உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். தரமான உற்பத்திக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை, தரமான தங்கத்துக்கு பி.ஐ.எஸ்., ஹால் மார்க் என்ற அடையாளத்தை பார்த்து வாங்கி பயன்பெற வேண்டும்,'' என்றார்.
மாரிமுத்து, சுப்ரமணி, செல்வராஜ், கணேசன், கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக