ஹால்மார்க் முத்திரை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
பதிவு செய்த நேரம்:2012-04-09 11:05:15ஊட்டி:கூடலூர்
நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தங்க நகைகள் ஹால்மார்க் முத்திரை
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது.
இந்திய
தரக்கட்டுபாட்டு அமைவனம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத்துறை மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு
மையம் ஆகியவை சார்பில் தங்க நகைகள் ஹால்மார்க் முத்திரை குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள ஆக்ஸ்போர்ட் ஆசிரியர் பயிற்சி
நிலையத்தில் நடந்தது. ஆசிரியர் பயிற்சி நிலைய முதல்வர் ராமசந்திரன்
முன்னிலை வகித்தார்.
ஆக்ஸ்போர்ட் நிறுவனம் அருகில் நடந்த பேரணியை தனி
வட்டாட்சியர் இரியன், செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து
பொதுமக்கள் மத்தியில் தங்க நகைகள் மீது ஹால்மார்க் முத்திரை குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் விழிப்புணர்வு
கலைநிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர்
பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில், இன்றைய
சூழலில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக
தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் தேவை
அதிகரித்து கொண்டே செல்கிறது. தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தில் கலப்பு
அதிகரித்து வருகிறது. இதனை அடையாளம் காணவும், கொடுக்கும் பணத்திற்கு முழு
மதிப்பு பெறவும் ஹால்மார்க் உத்திரவாதம் அளிக்கிறது எனவே தங்கம் வாங்கும்
மக்கள் தங்கள் வாங்கும் நகையில் ஹால்மார்க் முத்திரை உள்ளதா என பார்த்து
வாங்க வேண்டும் என்றார்.
குடிமக்கள் நுகர்வோர் மன்ற மண்டல
ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் பேசுகையில், தங்கத்தின் தரத்தினை அறிய
இந்திய தரக்கட்டுபாட்டு அமைவனம் ஹால்மார்க் முத்திரையை வழங்குகிறது.
தங்க
நகை வாங்கும் போது 916 தரக்குறியீடு மற்றும் ஹால்மார்க் முத்திரை மற்றும்
கடையின் முத்திரை உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டும் என்றார். தொடர்ந்து
ஹால்மார்க்கின் அவசியம், தங்கநகை வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய
விஷயங்கள், தரமான தங்கம் உள்ளிட்டவற்றை குறித்து ஆக்ஸ்போர்ட் ஆசிரியர்
பயிற்சி மாணவிகள் குறு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகளுக்கு சான்றிழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்சி நிலைய மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர்

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்சி நிலைய மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர்கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்