அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 6 அக்டோபர், 2010

இந்தியர்களுக்கான சமவிகித உணவு பற்றிய குறிப்புகள்

சமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்
1.      மக்களை நல்ல சுகாதாரமான உடல் நலனை பேணவைத்தல். 2.     கர்ப்பிணி  மற்றும்  தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஊட்ட    அளவு பட்டியல் அளித்தல். 3.     பிறந்த குழந்தையின் எடை அதிகரிப்பு மற்றும் அந்தந்த பருவத்திற்கேற்றவாறு வளர்ச்சியை ஊக்குவித்தல். 4.     ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து, அதன் பற்றாக்குறையினால்        ஏற்படும் நோய்கள் தவிர்த்தல். 5.     வயது வந்தோரின் நலனைப் பராமரித்து, ஆயுட் காலத்தை அதிகரித்தல்.

பல்வேறு வளர்ச்சி பருவங்களும், திட்ட உணவின் முக்கியத்துவமும்
வயதான முதியவர்கள் :   சுறுசுறுப்புடனும், நலமாகவும் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த, கொழுப்பு குறைவான உணவு அளித்தல். கர்ப்பிணி பெண்கள்   :    கர்ப்பிணி பெண்கள் நல்ல முறையில் பிரசவம் அடைந்து, பால் கொடுப்பதற்கு ஏற்ற வகையில்,  நலனைக் காக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும்  வகையில் நோய்களைத்  தடுக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவளித்தல். விடலைப் பருவத்தினர் : எலும்பு  வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் அளித்தல். குழந்தைகள்:  குழந்தைகளின் வளர்ச்சி, உடல் பராமரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான சக்தி நிறைந்த, உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள். கைக் குழந்தைகள் : வளர்ச்சிக்கும் ஏனைய உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற வகையில்  தாய்ப்பால் மற்றும் சக்தி நிறைந்த உணவுகள்.

உணவுப் பட்டியல் குறிப்புகள்
1.       ஊட்டச் சத்துள்ள, திட்ட உணவு உட்கொள்ள பல்வேறு உணவு        வகைகளைத் தேர்வு செய்தல். 2.      கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கூடுதல்       உணவும், அதிக கவனமும் தேவை. 3.      பிறந்த குழந்தைக்கு 4-6 மாதத்திற்கு தாய்ப்பால் மிகவும் அவசியம்.       இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். 4.      குழந்தைக்கு திட உணவுகளை 4-6 மாதத்தில் இருந்து துவங்க வேண்டும். 5.      குழந்தைகளும், விடலைப் பருவத்தினரும் நல்ல உடல் நலனைப் பெறவும்        நோய்களை எதிர்க்கவும், போதுமான அளவு ஊட்ட உணவு  உட்கொள்ளவும். 6.      கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவும். 7.      சமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிசங்களைக் குறைவாகப்   பயன்படுத்தவும் வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றைக்        குறைவாகப் பயன்படுத்தவும். 8.      உடல் பருமன் மற்றும் அதிக எடையைத் தவிாக்க அதிகமாக      உணவு உட்கொள்ளக் கூடாது.   உடல் பயிற்சி செய்து உடல் எடையைப் பராமரிக்கவும். 9.      மிதமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 10.     சுத்தமான, பாதுகாப்பான உணவை உட்கொள்ளவும். 11.      சுகாதாரமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சமையல்       முறைகளையும் பின்பற்ற வேண்டும். 12.     அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மிதமான அளவு         பானங்கள் குடிக்கவும். 13.     பதப்படுத்தப்பட்ட,  டின்னில் அடைத்த உணவுகளை கவனமாக உட்கொள்ளவும்.  குறைவான அளவு சக்கரையை சோக்கவும். 14.     வயதானோர்கள், தங்களை சுறுசுறுப்பாகவும், நன்றாகவும்        வைத்துக்      கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவை  உண்ணவும்.

ஊட்டம் நிறைந்த திட்ட உணவை, பல்வேறு உணவுகள் மூலம் தேர்வு செய்ய வேண்டும்
  • நல்ல நிலையான வாழ்வு வாழ ஊட்டச்சத்து அடிப்படைத் தேவையாகும்.
  • பல்வகை உணவுமுறை, வாழ்கைக்கு மட்டுமின்றி, ஊட்டச்சத்திற்கும், உடல் நலத்திற்கும் அவசியம்.
  • அனைத்து உணவு வகைகளிலும் இருந்து தயார் செய்யப்படும் திட்ட உணவில், தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறுகளில் அதிகமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • நல்ல தரமான புரதம் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) நிறைந்த பாலை, கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும்  பெண்களுக்கான திட்ட உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் மற்றும் முந்திரி பருப்புகளில் அதிக அளவு சக்தி உள்ளது.
  • முட்டை, மாமிச உணவுகள் மற்றும் மீன் ஆகியன திட்ட உணவின் தரத்தை உயர்த்துகின்றன.  எனினும் சைவ உணவு உண்பவர்கள் தானியங்கள், பயறுகள் மற்றும் பால் பொருட்களில் இருந்து அனைத்து வகை ஊட்டச்சத்துகளையும் பெறலாம்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமினும் தாது உப்புகளும் உள்ளன.
  • வயது, இனம், உடல்நிலை, வேலை ஆகியவற்றிற்கேற்ப உணவைத் தேர்வு செய்யவும்.
  • தானியங்கள், பயறுகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றைக் கலந்து உண்ணவும்.  சக்தி பற்றாக்குறையை ஈடுசெய்ய, வெல்லம் / சக்கரை அல்லது சமையல் எண்ணெய்  சேர்க்கவும்.
  • அதிக அளவு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கவும்.
  • கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்ட உணவில், பால், முட்டை மற்றும் மாமிச உணவுகளை சேர்க்கவும்.
  • முதிர்ந்த பருவம் வந்தோருக்கு, குறைந்த அளவு கொழுப்புள்ள புரதம் நிறைந்த, மீன், பயறுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றைச் சேர்க்கவும்
  • நல்ல சுகாதார உணவு பழக்க வழக்கங்களையும் முறையான உடற் பயிற்சியையும் பின்பற்றவும்.


கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கூடுதல் உணவும், கவனிப்பும் அவசியம்
  • கர்ப்ப காலத்தில், உடல் செயற்பாட்டிற்கு அதிக அளவு ஊட்டச்சத்து தேவை.  வயிற்றில் உள்ள குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் உணவு அவசியம்.
  • பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலில் உள்ள கொழுப்பை அதிகப்படுத்தி, தேவைப்படும் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்கின்றனர்.
  • பால் கொடுக்கும் பெண்களுக்கு, அதிக அளவு பால் சுரக்கவும், உடல் நலனைக் காக்கவும் கூடுதல் உணவு தேவை.  இரும்பு சத்து நிறைந்த உணவை  உட்கொள்ளவும்.
  • ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
  • இரும்புச் சத்து பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
  • பெரும்பாலும், கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • இரும்புச் சத்து பற்றாக்குறையினால் மகப்பேறு காலத்தில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.  மேலும் குழந்தைகளின் எடை குறைகிறது.
  • குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
  • பயறுகள், உலர் பழங்கள் மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.
  • மாமிசக் கறி, மீன், கோழிக் கறி போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது.
  • தாவரங்களில் குறைவான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது.  ஆனால் மாமிச உணவுகளில் அதிகமாக உள்ளது.
  • வைட்டமின் 'சி' அதிகமுள்ள பெருநெல்லி, கொய்யா, ஆரஞ்சு வகை பழங்கள் ஆகியன, தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை கிடைக்கச் செய்கின்றன.
  • டீ இரும்புச் சத்துடன் ஓட்டிக்கொண்டு அவற்றை கிடைக்காமல் செய்கின்றது.  எனவே சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிடும் பொழுதோ, சாப்பிட்டவுடனோ அவற்றை உட்கொள்ளக் கூடாது.
  • கர்ப்பகாலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் பொழுதும் அதிகமான உணவு உட்கொள்ளவும்.
  • முழு தானியங்கள், முளைக்கட்டிய தானியங்கள், புளித்த உணவுகள் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
  • பால் / மாமிசம் / முட்டை உட்கொள்ளவும்.
  • அதிக அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும்.
  • மூடபழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் தவிர்க்கவும்.
  • மதுபானங்கள் மற்றும் புகையிலை உபயோகிக்கக் கூடாது.  பரிந்துரையின்படி மட்டும் மருந்துகள் உட்கொள்ளவும்.
  • 14-16 வார கர்ப்பத்தில், இரும்பு, போலியேட் மற்றும் கால்சியம் நிறைந்த உணவை சேர்த்து பால் கொடுக்கும் பொழுதும் தொடரவும்.
போலியேட் நிறைந்த உணவு சாப்பிடவும்
  • ஹீமோகுளோபின் உற்பத்திக்கு போலிக் அமிலம் தேவை.
  • இதன்பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
  • கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவு போலிக் அமிலம் தேவை.
  • போலிக் அமிலம் பிறக்கும் குழந்தையின் எடையை அதிகரிப்பதோடு, பிறப்பு குறைகளையும் குறைக்கிறது.
  • பச்சைக் காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், ஈரல் ஆகியவற்றில் அதிக அளவு போலிக் அமிலம் உள்ளது.


குழந்தை பிறந்த 4-6 மாதங்களுக்கு கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்கவும். இரண்டு வருடம் வரை தொடரவும்
  • குழந்தைகளின் சாதாரண வளர்ச்சிக்கு, தாய்ப்பால் இயற்கையான, சுகாதாரமான, முழு உணவாகும்.
  • குழந்தை முதலில் உண்ணும் தாய்ப்பாலில், ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு காரணிகளும் அதிகமாக உள்ளதால் கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும்.
  • தாய்ப்பால் கொடுப்பதன் முலம் நோய் தொற்றைக் குறைக்கலாம்.
  • இதனால் குழந்தைக்கும் / தாய்க்கும் பாசமும் இணைப்பும் வலுப்பெறுகிறது.
  • குழந்தை பிறப்பை நீட்டிப்பு செய்கிறது.  (மாத விலக்கை  நீட்டிக்கிறது)
  • கர்ப்பப்பை திரும்ப பழைய நிலையை அடைய தாய்ப்பால் கொடுத்தல் உதவுகிறது.
  • தாய்ப் பால் கொடுக்கும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
  • குழந்தை பிறந்தவுடன் 1 மணிநேரத்தில் தாய்பால் கொடுக்கவும்.  சீம்பாலை வெறியேற்றக் கூடாது.
  • குறைந்தது 4-6 மாதத்திற்கு கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்கவும்.
  • இதர உணவு கொடுத்தாலும், இரண்டு வருடம் வரை தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரலாம்.
  • பால் சுரப்பை அதிகப்படுத்த, அடிக்கடியும், தேவைப்படும் பொழுதும் தாய்ப்பால் கொடுக்கவும்.
  • கர்ப்ப காலத்திலும் அதன்பிறகும் தாய்ப் பால் கொடுக்கும் காலத்திலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணவும்.
  • புகையிலை (புகைபிடித்தல், மென்னுதல்) மது பானங்கள், மற்றும் மருந்துகளை பால் கொடுக்கும் காலத்தில் உபயோகிக்கக் கூடாது.
  • தாய்ப்பால் கொடுப்பதற்கு நல்ல குடும்ப ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.


இதர கூடுதல் உணவுகளை கைக்குழந்தைகளுக்கு 4 முதல் 6 மாதத்தில் தொடரலாம்.
  • 4-6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பால் மட்டும் இருந்தால் போதாது. எனவே குழந்தைககுக்கு கூடுதல் உணவை 4-6 மாதத்தில் கொடுக்கலாம். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதைத் தொ வும்.
  • இளம் குழந்தைகளுக்கு, இவ்வாறு கூடுதல் உணவின் மூலம், சத்துக்குறை நோய்களைத் தடுக்கலாம்.
  • குழந்தைகளுக்கும் தயாரிக்கும் உணவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் செய்யவும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
  • 4-6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் மட்டும் குழந்தைக்கு பற்றாது.
  • தாய்ப் பாலுடன் கூடுதல் உணவுகளையும் 4-6 மாத வயதில் கொடுக்கத் துவங்கலாம்.
  • கூடுதல் உணவளிப்பதைத் தாமதிக்கக் கூடாது.
  • குறைந்த விலையில், வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவைக் கொடுக்கலாம்.
  • ஒரு நாளுக்கு 5-6 முறை கொடுக்கவும்.
  • பழங்களையும் நன்கு சமைந்த காய்கறிகளையும் கொடுக்கலாம்.
  • சுகாதாரமான முறையில் உணவைத் தயார் செய்ய வேண்டும்.
தாய்ப்பால் பற்றவில்லை என்றால் என்ன செய்யலாம்?
  • தாய்ப்பால் பற்றவில்லை என்றால், மாட்டுப்பால் அல்லது குழந்தைகளுக்கான பவுடர்களைக் கொடுக்கலாம். குழந்தைக்கு கொடுக்கும் முன்பு, நன்றாக காய்ச்சிவிட வேண்டும். முதலில் துவங்கும் பொழுது சமஅளவு தண்ணீர் கலக்கவும்.
  • 4 வாரத்தில் முழு பால் கொடுக்கலாம்.
  • மாட்டுப்பால் கொடுக்கும் பொழுதும், கூடுதல் உணவு மூலம் இரும்பு மற்றும் வைட்டமின் 'சி' கொடுக்கவும்.
  • ஒரு நாளுக்கு 120-180 மி.லி பாலை, ஓவ்வொரு முறையும், 1 டீஸ்பூன் சக்கரையுடன், 6-8 முறை கொடுக்க வேண்டும்.
  • கடைகளில் உள்ள குழந்தை உணவைப் பயன்படுத்தினால் அட்டையில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றவும்.
  • குழந்தைகளுக்கு கொடுக்கப் பயன்படுத்தும் கப், ஸ்பூன், பாட்டில் மற்றும் நிப்பிள் போன்றவற்றை சுத்தமாக அதிக கவனத்துடன் பயன்படுத்தவும்.
  • உடல் பருமனைத் தடுக்க, அளவுக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது.
  • வீட்டில் தயார் செய்யும் குழந்தை  உணவுகளைப் கொடுக்கலாம்.  எனினும் வசதி இருப்பின் கடையில் கிடைக்கும் குழந்தை உணவுகளை கொடுக்கலாம்.


குழந்தைகள் மற்றும் விடலை பருவத்தினர், உடல் நலனுக்கு நோய் எதிர்ப்பிற்காகவும் தேவையான அளவு திட்ட உணவு உட்கொள்ளவும்
  • நல்ல வளர்ச்சிக்கும் உடல் பராமரிப்பிற்கும், ஊட்டச்சத்துள்ள உணவு மிகவும் அவசியம்.
  • குழந்தைப் பருவத்தில் திட்ட உணவு கொடுப்பதன் முலம், பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை நோய்களைத் தவிர்க்கலாம்.
  • நோய் தொற்றுகளும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும், குழந்தைகளுக்கு நோய்களையும், இறப்பையும் நேரச் செய்கின்றன.
  • நோயுற்ற காலங்களில் குழந்தைகள் அதிக அளவில் ஊட்டச்சத்துள்ள உணவினை, உடல் பராமாப்பிற்காக உட்கொள்ள வேண்டும்.
கால்சியம் நிறைந்த உணவு சாப்பிடவும்
  • உடல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம்.
  • கால்சியம், எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
  • எலும்பு தேய்மானம் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும்.
  • கர்பிணி மற்றும் தாய்ப் பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள், வயதானோர் ஆகியோருக்கு கால்சியம் அவசியம்.
  • பால், தயிர் மற்றும் கொட்டைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது.
  • ராகி மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது.
  • உடற்பயிற்சி, எலும்புகளில் இருந்து இழக்கும் கால்சியத்தை குறைக்கிறது.
  • தாய்ப்பாலுடன், சிறிதளவு மெதுமெதுப்பான தானியம், பயறுகள் கலந்த உணவை நன்கு சமைத்து கொடுக்கவும்.
  • சமைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் கொடுப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவும்.
  • அதிகமான அளவு பால் மற்றும் பால் பொருட்களை, குழந்தைகளுக்கும், விடலைப் பருவத்தினருக்கும் கொடுக்கவும்.
  • அதிகமாக உண்பதையும், தனிப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதையும் தடுக்கவும்.
உடல் சலம் சரியில்லாத நேரத்தில்
  • குழந்தையை பட்டினி போடக் கூடாது. சக்தி நிறைந்த தானியம் / பயறுகள் நிறைந்த உணவை பால் மற்றும் சமைத்த காய்கறிகளுடன் கலந்து கொடுக்கவும்.
  • குறைந்த அளவில், அடிக்கடி கொடுக்கவும்.
  • தாய்ப் பால் கொடுப்பதைத் தொடரவும்.
  • அதிக அளவு நீர் ஆகாரம் (உடல் நலமில்லாதபோது) கொடுக்கவும்.
  • வயிற்றுப் போக்கின் போது ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்ய ஏதாவது நீர் ஆகாரம் கொடுக்கவும்.


பச்சைக் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடவும்
  • சாதாரண திட்ட உணவு முழுமைபெறவும், சுவையாக இருக்கவும், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளில், நார்ச்சத்துகளும் கண் பார்வைக்கான ஒளி வேதிப்பொருட்களும் உள்ளன.
  • கீரைகள், காய்கறிகள் (மஞ்சள் / ஆரஞ்சு) மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் முலம் நுண்ணுாட்டக் குறைபாட்டினால் ஏற்படும் சத்துக்குறைவு நோய்கள் மற்றும் நெடுநாள் நோய்களைத் தவிர்க்கலாம்.
வைட்டமின் 'ஏ'   நிறைந்துள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிடவும்
  • கண் பார்வைக்கு வைட்டமின் 'ஏ' தேவை.
  • வைட்டமின் 'ஏ' குறைபாடு, மாலைக்கண் நோய் மற்றும் கண்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • அதிகமான வைட்டமின் 'ஏ' குறைபாடு இருப்பின், இளங் குழந்தைகளுக்கு கண் குருடாகிவிடும்.
  • குழந்தைப் பருவங்களால் ஏற்படும், வயிற்றுப்போக்கு, அம்மை, மூச்சுக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்களினால் வைட்டமின் 'ஏ' உட்கிரகித்தல் குறைகிறது.
  • பால், முட்டை, ஈரல் மற்றும் மாமிச உணவுகளில் வைட்டமின் 'ஏ' உள்ளது.
  • தாவர பொருட்களில், வைட்டமின் 'ஏ', பீட்டா கெரோடின் வடிவில் உள்ளது.
  • அடர் பச்சைக் கீரை வகைகளான முருங்கைக் கீரை, தண்டுக் கீரை, வெந்தய கீரை, பருப்புக் கீரை மற்றும் பழங்கள், கேரட், மஞ்சள் பூசணி, மாம்பழம், பப்பாளி ஆகியவற்றில் அதிக அளவில் கரோட்டின் உள்ளது.
  • அன்றாட உணவில் பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை பச்சையாக சாப்பிடவும்.
  • வீட்டுக் காய்கறித் தோட்டத்தில், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவும்.
  • பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்து சமைத்து உண்ணவும்.  பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட இதனைக் கொடுக்கலாம்.


சமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிச உணவுகளை குறைந்த அளவிலும், வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை எப்பொழுதாவதும் பயன்படுத்தவும்
  • கொழுப்பு மற்றும் எண்ணெய்களில் அதிக அளவு சக்தி உள்ளது.
  • கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின், கொழுப்பில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மூலம் உட்கிரகித்தல் திறனை அதிகப்படுத்துகிறது.
  • உடலுக்குத் தேவையான செயலாக்க பொருட்கள் உருவாக்கத்திற்கு கொழுப்பு பயன்படுகிறது.
  • அதிக அளவு கலோரிகள் உள்ள கொழுப்பு உணவுகள் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது.
  • அதிக கொழுப்புச் சத்துள்ள உணவை உண்ணும் பொழுது உடல் பருமனாவதோடு, இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.
  • வாழ்வின் முற்பகுதியில் அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணவும்.
  • போதுமான அளவு உணவை மட்டும் உண்ணவும்.
  • ஓன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணைகளை பயன்படுத்தவும்.
  • வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும்.
  • லினோலெனிக் அமிலம் நிறைந்த (பயறுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், வெந்தயம், கடுகு) உணவு பயன்படுத்தவும்.
  • ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றிற்கு பதிலாக அடிக்கடி மீன் சாப்பிடவும்.
அதிக எடை போடுவது உடல் பருமனாவது ஆகியவற்றை தடுக்கஅளவுக்கு அதிகமாக   சாப்பிடக் கூடாது.  உடல் எடையைப் பராமரிக்க முறையான உடற்பயிற்சி அவசியம் 
  • உடலில் அதிக அளவு கொழுப்பு படிவதால் உடல் பருமன் ஏற்படுகிறது.
  • உடல் பருமனால் பலவிதமான உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, சீக்கீரம் மரணத்தை வரவழைக்கிறது.
  • இதனால் இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு டிரை கிளிசரைடுகள் அதிகரிக்கிறது.  இருதய நோய்கள், நீரழிவு, சிறுநீரகக் கற்கள், சிலவகைப் புற்று நோய்கள் ஏற்படுகிறது.
  • அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுவதால் மட்டும் பருமன் ஏற்படுதில்லை. மனரீதியான சமுக விளைவுகளும் உண்டு.
  • மெதுவாக நிதானமாக உடல் எடையைக் குறைக்கவும்
  • அதிகமாக விரதம் இருப்பதினால், பல உடல் நலக் கேடுகள் வருகின்றன.
  • உங்களது உடல் செயல்பாட்டு அளவை ஈடுசெய்ய பல வகை உணவுகளை உட்கொள்ளவும்.
  • குறைவான அளவு உணவை முறையான இடைவெளியில் சாப்படவும்.
  • சக்கரை, கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள் மற்றும் மதுபானங்களை நிறுத்தவும்.
  • குறைவான கொழுப்புள்ள பாலை பயன்படுத்தவும்.
நல்ல உடல் நலத்திற்கான குறிப்புகள்
  • முறையாக  உடற்பயிற்சி செய்யவும்.
  • புகைபிடித்தல், புகையிலை சாப்பிடுதல், மதுஅருந்துதல் ஆகியவற்றை தவிர்க்கவும்.
  • அடிக்கடி இரத்தத்தின்  குளுக்கோஸ், கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை 30 வருடத்திற்கு மேல் பரிசோதனை செய்து கொள்ளவும்.
  • சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • அழுத்தத்தை குறைக்கும் யுக்திகளை செய்யவும் (யோகா மற்றும் தியானம்).
  • குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடவும்.



உப்பைக் குறைவாக பயன்படுத்தவும்
  • செல்களில் உள்ள திரவங்களில் மின் பகுப்பானாக உள்ளது.
  • நரப்பு கடத்தியாகவும், உடலில் உள்ள திரவ சமன்படுத்தியாகவும் பயன்படுகிறது.
  • சோடியம் சமன்பாடடைப் பொருத்து சிறுநீரகம் செயல்படுகிறது.
  • அதிகம் உப்பு சேர்ப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, வயிற்றுப் புற்றுநோயும் ஏற்படுகிறது.
  • எல்லா உணவுகளிலும் சோடியச்சத்து உள்ளதால், குறைவான அளவு உப்பு பயன்படுத்தவும்.
  • பொட்டாசியம் உட்கொள்வதைப் பொருத்து, சோடியம் உட்கொள்ளவும்.
  • சின்ன வயதிலிருந்தே, உப்பு குறைவாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை உருவாக்கவும்.
  • குறைவான உப்புள்ள உணவை சுவைக்கக் கற்றுக் கொள்ளவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான அப்பளம், ஊறுகாய், சாஸ், கெச்சப், தொக்கு, பாலாடை,  மீன் உண்பதை குறைக்கவும்.
  • பொட்டாசியம் சத்து பெற அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடவும்.
  • ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பு பயன்படுத்தவும்.
ஐயோடின் உள்ள உணவை அதிகமாக சாப்பிடவும் / ஐயோடின்ஏற்றப்பட்ட உப்பை பயன்படுத்தவும்
  • தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதற்கு ஐயோடின் தேவை.
  • உடல் வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் தைராய்டு ஹார்மோன் தேவை.
  • ஐயோடின் பற்றாக்குறையினால், தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்படுகிறது.
  • தண்ணீரிலும், உணவிலும் ஐயோடின் இல்லாததால் ஐயோடின் குறைபாடு அறிகுறிகள் ஏற்படுகிறது.
  • கர்ப காலத்தில் ஐயோடின் பற்றாக்குறை ஏற்படின், குறைபிரசவம், கருச்சிதைவு, கிரிட்டினிசம் ஏற்படுகிறது.
  • ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பு சாப்பிடுவதன் மூலம் உடலிற்கு அதிக அளவு ஐயோடின் கிடைக்கிறது.

சாப்பிடும் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்
  • நல்ல உடல் நலத்தைப் பராமரிக்க, சுத்தமான தரமான உணவை உண்ணவும்.
  • உணவுகளில் இயற்கையாக காணப்படும் விஷத்தன்மை, சுற்றுச்சூழல் தொற்றுகள், கலப்படங்கள் ஆகியன உடல் நலத்திற்கு கேடு தருவன ஆகும்.
  • சுத்தமில்லாத உணவை உண்ணுவதால், உணவு முலம் வரக்கூடிய நோய்கள் தாக்குகின்றன.
  • நல்ல தரமான, உணவு பொருட்களை கவனமாக பரிசோதித்து வாங்கவும்.
  • பயன்படுத்தும் முன்பு, காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவவும்.
  • பச்சையான மற்றும் சமைத்த உணவு பொருட்களை நுண்ணுயிர், எலி மற்றும் பூச்சித்தாக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • உண்ணும் வரை, எளிதில் கெட்டுப்போகக் கூடிய பொருட்களை குளிர்பதனப் பெட்டியில் சேமிக்கவும்.
  • சுய சுகாதார முறைகளைக் கையாண்டு, சமைக்கும் மற்றும் சேமிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்கவும்.

சுகாதார வாழ்விற்காக பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்களும், சமையல் முறைகளும்
  • உணவுப் பழக்கங்களை கலாச்சாரம் பெரிதும் பாதிக்கிறது.
  • உணவு பற்றிய நம்பிக்கைகள், ஊட்டச்சத்தையும், சுகாதாரத்தையும் பாதிக்கிறது.
  • சமைப்பதன் முலம் உணவு சுவையாவதோடு,  சுலபமான செரிமானம் ஆகிறது.
  • தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்கிருமிகள், சமைக்கும் பொழுது அழிந்து விடுகின்றது.
  • முறையாக சமைக்காவிடில் சத்துகள் இழப்பு ஏற்படும்.
  • அதிகமான  வெப்பத்தில் சமைக்கும் பொழுது, சத்துகள் அழிவதோடு நச்சுப் பொருட்களும் உருவாகிறது.
  • உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய முட நம்பிக்கைகளை தவிர்க்கவும்.
  • சமைக்கும் முன்பு, உணவு தானியங்களை அடிக்கடி கழுவக் கூடாது.
  • காய்கறிகளை வெட்டிய பிறகு கழுவக் கூடாது.
  • வெட்டிய காய்கறிகளை நீண்ட நேரம் தண்ணீரில்  ஊற வைக்கக் கூடாது.
  • வேகவைத்த எஞ்சிய நீரை வெளியேற்றக் கூடாது.
  • சமைக்கும் பொழுது மூடி வைத்து சமைக்கவும்.
  • அதிகமாக சுடுதல் / வறுத்தலுக்கு பதிலாக குக்கர் / நீர் ஆவி கொண்டு சமைக்கவும்.
  • முளைத்த தானியங்கள் / புளித்த உணவுகள் உண்ணவும்.
  • பயறுகள் மற்றும் காய்கறிகள் சமைக்கும் பொழுது சோடா பயன்படுத்தக் கூடாது.
  • எஞ்சிய எண்ணெயை அடிக்கடி சூடு ஏற்றக்கூடாது.


அதிகமாக தண்ணீர் குடிக்கவும், அளவாக தேனீர், காப்பி மற்றும் இதர பானங்கள் அருந்தவும்
  • மனித உடலில் தண்ணீர் முக்கால் அங்கம் வகிக்கிறது. 
  • பானங்கள் தாகத்தை தனிப்பதோடு, உடலுக்கு தேவைப்படும் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
  • சில பானங்கள் ஊட்டச்சத்து தருகின்றன. மற்றவை ஊக்கிகளாகப் பயன்படுகிறது.
  • பால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, ஊட்டச்சத்து நிறைந்த பானம் ஆகும்.
  • உடலில் தேவைப்படும், அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • தண்ணீரின் சுத்தமற்ற நிலையில் இருந்தால், கொதிக்க வைத்த தண்ணீர் அருந்தவும்.
  • ஒரு நாளுக்கு 250 மிலி கொதித்த / காய்ச்சிய பால் குடிக்கவும்.
  • கார்பனேட் ஏற்றப்பட்ட பானங்கள் அருந்துவதற்கு பதிலாக இயற்கையான பழச்சாறுகள் குடிக்கவும்.
  • மதுஅருந்தக் கூடாது.  குடிப்பழக்கம் இருப்போர் குறைவாக அருந்தவும்.


பதப்படுத்தப்பட்ட உண்பதற்கு தயாராக உள்ள உணவுகளை கவனமாகப் பயன்படுத்தவும். சக்கரையை மிகக் குறைவாக பயன்படுத்தவும்
  • நகர மயமாக்குதலினால், மக்களின் பதன்படுத்தப்பட்ட உணவுகள் உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது.
  • எனவே பாரம்பரிய முறையில் சமைக்கும் பழக்கத்தை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மாற்றி வருகின்றன.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளில் தேவையற்ற கலப்படங்கள் உள்ளது.
  • நுண்ணுாட்டச் சத்துகள் சேர்க்கப்படவில்லை எனில், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சரியான ஊட்டச்சத்துகள் இல்லை.
  • பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளாகிய சர்க்கரையில் கலோரிகள் இல்லை.
  • வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளையே உண்ணவும்.
  • பதப்படுத்தப்பட்ட திண்பண்டங்களை, சாப்பிடும் நேரத்தில் தவிர்க்கவும்.
  • கலோரி இல்லாத உணவுப் பொருட்களாகிய சக்கரை மற்றும் பதப்படுத்தப்ட்ட உணவு உண்பதை குறைத்துக் கொள்ளவும்.
  • நுண்ணுாட்டம் சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்ணவும்.
  • உடலில், உணவு அடிட்டீவ்ஸின் அளவை குறைவாக பராமரிக்க, குறைவான அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்ணவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை பயன்படுத்தும் முன்னர், டப்பாக்களில்  உள்ள பயன்படுத்தும் கடைசி நாள் போன்றவற்றை பார்க்கவும்.



உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள முதியவர்கள் நுண்ணூட்டம் நிறைந்த உணவு உண்ணவும்
  • முதியவர்களுக்கு குறைவான கலோரிகள் இருந்தால் போதும்.  உணவு உட்கொள்ளும் அளவு, உடல் செயல்பாடு, நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், முதியவர்களுக்கு நோய்கள் அதிகமாக வருகிறது.
  • முறையான உணவு பழக்கங்களும், உடற் பயிற்சியும் வயதாவதைக் குறைக்கிறது.
  • வயாதான பொழுது வரும் நோய்களைத் தடுக்க, முதியவர்களுக்கு அதிக அளவில்  கால்சியம், இரும்பு, சிங்க் மற்றும் வைட்டமின் 'ஏ' அதிகமாகத் தேவை.
  • உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பலவகையான  நுண்ணுாட்டம் நிறைந்த உணவுகள் உண்ணவும்.
  • உட்கொள்ளும் உணவிற்கேற்ப உடற்பயிற்சி செய்யவும்.
  • ஒரு நாளுக்குரிய உணவை, அதிகமாக பிரித்து உண்ணவும்.
  • பொறித்த உப்பு, மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
  • முறையாக உடற்பயிற்சி செய்யவும்


திங்கள், 4 அக்டோபர், 2010

இன்று சர்வ தேச விலங்குகள் தினம்

 விலங்குகளை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்., 4ம் நாள் சர்வதேச விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

வன ஆர்வலரும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருமான பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரிவன் நினைவுநாளை குறிப்பிடும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1931ம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இத்தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. தற்போது இத்தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பாலூட்டிகளுக்கு மட்டுமே காதுமடல்கள் இருக்கும். விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு "நாய்' சிம்பன்சியால் கண்ணாடியில் முகம்பார்த்து தன்னை தெரிந்து கொள்ள முடியும். சிப்பி தன் வாழ்நாளில் பலமுறை ஆணாகவும் பெண்ணாகவும் மாறிக் கொள்ள முடியும்.
பூனைகளுக்கு இனிப்பு சுவை தெரியாது யானைகளுக்கு பார்வை கருப்பு வெள்ளைதான். ஒரு கண்ணை திறந்து கொண்டே டால்பினால் தூங்க முடியும். ஒரு எறும்பால் தன்னைவிட 50 மடங்கு எடையை தூக்க முடியும். மனிதனின் நாசியை விட நாய்களுக்கு ஆயிரம் மடங்கு திறன் அதிகம். நத்தை மூன்று ஆண்டுகளுக்கு கூட தூங்கும். ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் டம்ளர் பால் வழங்கும்.




அழிந்து வரும் இந்திய விலங்குகள்

கங்கை சுறா

இந்தியாவில் ஓடும் கங்கை நதியில் அதிகமாக வாழும் ஒருவகை சுறா மீன். இது ஹூக்ளி, பிரம்மபுத்திரா, மகாநதி போன்ற ஆறுகளிலும் வாழ்கின்றன. நீண்ட மூக்கு மற்றும் சிறிய கண்களை உடைய தோற்றம் கொண்டது. சுமார் 7 அடி நீளம் உடையது. இது மிகவும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது.

காண்டாமிருகம்

சுமத்ரான் காண்டாமிருகம் 5 அடி உயரம் கொண்டது. தலை முதல் பின்புறம் வரை 10 அடி நீளம் கொண்டது. இது இந்தியா, இந்தோனேசியா, பூடான், மியான்மர் , வங்கதேசம் ஆகிய நாடுகளில் சதுப்புநிலக் காடுகள், மழைக்காடுகள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. பழங்கள், செடிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. 275க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இவை உள்ளன.

ஆலிவ் ரிட்லி

பசிபிக் பெருங்கடலில் பெருமளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழ்கின்றன. இந்திய பெருங்கடல், ஜப்பான், நியூசிலாந்து, அட்லாண்டிக் கடல் போன்ற 80 நாடுகளின் கடல் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. 60 முதல் 70 செ.மீ நீளமுடையது. இமயமலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

ஆசிய கருப்பு கரடிகள்

உயரம் 7 அடி. நகங்கள் 4.4 இன்ச் நீளம். எடை 90 கிலோ முதல் 120 கிலோ வரை. தாவரங்கள், பழங்களை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் உடல் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்காக வேட்டையாடப்படுகின்றன. மனிதர்களைத் தாக்கும் திறனை இவை பெற்றிருந்தாலும் கூட, மனிதர்களால்தான் இவை தாக்கப்படுகின்றன.

நீலகிரி வரையாடு

தமிழகத்தில் நீலகிரி மலை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வரையாடுயாகள் வாழ்கின்றன. இது 4 ஆயிரம் அடிக்கு மேல் உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. வரையாடுகள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று. வெப்பமான நேரங்களில் பாறை இடுக்களில் ஓய்வெடுக்கும். கேரளாவின் இரவிக்குளம் தேசியப் பூங்காவில் சுமார் ஆயிரம் வரையாடுகள் வாழ்கின்றன.

சிங்க வால் குரங்குகள்

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. இதன் வால் சிங்கத்தின் வாலைப் போல உள்ளதால் இது சிங்கவால் குரங்கு என அழைக்கப்படுகிறது. இதன் உடம்பில் உள்ள முடிகள் கருப்பு நிறத்தில் இருக்கும். தலையைச் சுற்றி பொன்னிற, சாம்பல் நிற முடியைக் கொண் டிருக்கும். தலை முதல் வால் வரையிலான நீளம் 40 செ.மீ. முதல் 60 செ.மீ., வரை இருக்கும். இதன் சராசரி ஆயுள் காலம் 20 ஆண்டு. மனிதர் களிடமிருந்து தனித்து வாழும் குணம் படைத்தவை. தற்போது களக்காடு - முண்டந்துறை சரணாலயத்தில் அதிகமாகக் காணப்படு கின்றன.

சிங்கங்கள்

ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் தேசிய வனவிலங்குப் பூங்கா பகுதியில் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. குஜராத் அரசின் தகவலின் படி, 411 ஆசிய சிங்கங்கள் கிர் வனப்பகுதியில் வாழ்கின்றன. இது 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின் 361 ஆக இருந்தது தற்போது 52 அதிகரித் துள்ளது.

பாண்டா

பாண்டா அதிகளவில் உண்பது மூங்கில் களைத்தான். முட்டை, சிறிய பறவைகள், சிறிய பாலூட்டிகள் போன்ற வற்றையும் உணவாக உட்கொள்கின்றன. இது மனிதர்கள் வசிக்காத இடத்தில் தனியே வாழும் தன்மை உடையது. உலகில் 800க்கும் மேற்பட்ட வன விலங்கு பூங்காக்களில் வாழ்கின்றன.

புலிகள்

நமது நாட்டின் தேசிய விலங்கு புலி. ஆனால் இதன் நிலை இன்று ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது 1411 புலிகள் மட்டுமே வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தவிர வங்கதேசத்தில் 200, நேபாளத்தில் 155, பூடானில் 60 என்ற எண்ணிக்கையில் புலிகள் வாழ்கின்றன. புலிகள் எண்ணிக்கை சீராக இருந்தால்தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் மேய்ச்சல் விலங்குகள் அதிகப்படியாக பெருகி, காடுகளின் வளம் குறையும்.

யானைகள்

உலகில் உள்ள விலங்குகளில் மிகப்பெரியதும், நீண்ட நாள் வாழக்கூடிய உயிரினம் யானைகள். தற்போது ஆப்ரிக்கா புதர்வெளி யானைகள், ஆப்ரிக்க காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் ஆகியவை மற்றுமே உலகில் வாழ்கின்றன. ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் வாழ்கின்றன. யானைகளின் எண்ணிக்கை நல்ல நிலையில் இருந்தாலும் கூட காடுகளை மனிதன் ஆக்கிரமிப்பதாலும், இதன் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சில நேரங்களில் இவை ரயில்களில் அடிபட்டு இறக்க நேரிடுகின்றன. 

தமிழ்நாடு அறக்கட்தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், உப்பட்டியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளர் டாக்டர்.அமராவதி ராஜன், ஒருங்கிணைப்பாளர் மங்கை, கண் பரிசோதகர்கள் நாகூர்கனி, முத்துராஜ், கவிதா உட்பட மருத்துவக் குழுவினர், பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்பட்டனர்.  முகாம் ஏற்பாடுகளை, நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி தலைமையில் தனிஸ்லாஸ் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டனர்டளை, நீலகிரி பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், உப்பட்டியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளர் டாக்டர்.அமராவதி ராஜன், ஒருங்கிணைப்பாளர் மங்கை, கண் பரிசோதகர்கள் நாகூர்கனி, முத்துராஜ், கவிதா உட்பட மருத்துவக் குழுவினர், பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்பட்டனர்.  முகாம் ஏற்பாடுகளை, நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி தலைமையில் தனிஸ்லாஸ் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டனர்









நுகர்வோர்  பாதுகாப்பு சங்கம்

வனத்தை பாதுகாக்கா விட்டால்,

 "வனத்தை பாதுகாக்கா விட்டால், எதிர்கால சந்ததிகள் நோய்களால் பாதிக்கப்படுவர்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய  மக்கள் மையம் சார்பில் 
 பந்தலூர் வணிக வளாகம் முன், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  சிவலிங்கம் வரவேற்றார்.
தலைவர் சிவசுப்ரமணியம்   தலைமை வகித்துப் பேசியதாவது: சூரிய ஒளியில் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களும், அகச்சிவப்பு கதிர்களும் கலந்திருக்கின்றன. இவற்றை பூமிக்குள் ஊடுருவ விடாமல் தடுப்பது தான் ஓசோன் படலம். ஆனால் வன அழிப்பு, தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சுக்காற்று, பிளாஸ்டிக்கை எரிப்பதால் எழும் புகை மண்டலம் ஆகியவற்றால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின் படி, உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு 20 முதல் 30 லட்சம் பேர், தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், இதில் 20 சதவீதம் பேர், ஆபத்தான சூரிய ஒளிக்கதிர்களால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது. மனிதர்கள் மட்டுமல்லாது தாவரங்கள், வன விலங்குகள் என அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. 
இதனால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையிலும், ஓசோன் படலத்தை பாதுகாக்கும் வகையிலும், கடந்த 1987 செப்., 16ம் தேதி, கனடாவில் ஓசோன் படலத்தை அழிக்கும் நச்சுகளுக்கு எதிராக உடன்படிக்கை ஒன்றை, ஐ.நா., சபை தாக்கல் செய்தது. 24 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஏற்று, ஓசோன் படலத்தை காக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது. வனங்களை பாதுகாப்பதன் மூலம், பல பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததிகள் பல நோய்களிலிருந்து தாக்கப்படாமல் பாதுகாக்கப்படுவர். 
விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரத்தை, பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி வெளியிட்டார். பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தண்டபாணி, ஸ்டீபன், அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பிரதீப், ஜெயம் பவுண்டேசன் நிர்வாகிகள் கண்ணதாசன், விஜயகுமாரி, சங்க நிர்வாகிகள் அசோக்குமார், செல்வி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

உரிமைகளை தெரிந்து கொண்டால், சமூகத்தில் ஏமாற்றப்படுவதிலிருந்து விடுபடலாம்

 "கடமை மற்றும் உரிமைகளை தெரிந்து கொண்டால், சமூகத்தில் ஏமாற்றப்படுவதிலிருந்து விடுபடலாம்,'' என, நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய  மக்கள் மையம் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. சங்க ஆலோசகர் சில்வஸ்டார் வரவேற்றார். தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது:
கடந்த 1896ம் ஆண்டு, அமெரிக்காவில் நுகர்வோர் சங்கம் துவக்கப்பட்டு, 1973ல், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி நுகர்வோர் தினத்தை அறிமுகப்படுத்தினார். 1986ம் ஆண்டு, இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் துவக்கப்பட்டது.  பொதுமக்களிடையே மட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையேயும் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக, கூடலூர், பந்தலூர் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், நுகர்வோர் விழிப்புணர்வு தின போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.  நுகர்வோர் விழிப்புணர்வு முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே, மக்கள் தெளிவு பெறுவர்,'' என்றார். 


வக்கீல் ஜெயசீலன் பேசுகையில், ""ஏமாற்றப்படும் நுகர்வோர், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய வக்கீலை நாட வேண்டியதில்லை. தக்க ஆதாரங்களுடன், தானாகவே சென்று புகாரை பதிவு செய்தால் உரிய தீர்வு காணப்படும். கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள பல மளிகைக் கடைகளில், வாங்கும் பொருட்களுக்கு "பில்' தரப்படாத நிலையில், நுகர்வோர் பாதிக்கப்படும்போது, புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எந்தப் பொருளை வாங்கினாலும், "பில்' பெற மறக்கக் கூடாது.  மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், தேசிய குறைதீர் ஆணையங்களில், பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப வழக்குப்பதிவு செய்து பயன்பெறலாம்,'' என்றார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் சம்பத், சிறப்பு அழைப்பாளராக பேசுகையில்,  ""விளம்பரங்களால் மனித சமுதாயம் ஈர்க்கப்பட்டு, ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். பாதுகாப்பு, தேர்ந்தெடுத்தல், முறையிடுவது, குறை தீர்ப்பது, கல்வி உட்பட உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள, நுகர்வோர் முன்வர வேண்டும். விழிப்புடன் மற்றும் ஈடுபாட்டுடன் இருப்பது, தேவைக்கு அதிகமான நுகர்வை தவிர்ப்பது, தவறு செய்யும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் குறித்து புகார் செய்வது, நுகர்வோரின் கடமையாக உள்ளது.  தரமானப் பொருட்களையும், சேவைகளையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளவும், நுகர்வோர் நலனை பாதுகாக்க ஒன்றாக குரல் கொடுக்கவும் முன்வரும் போது, ஏமாற்றத்திலிருந்து விடுபடலாம்,'' என்றார்.  


வருவாய் ஆய்வாளர் சிக் அனுமான், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, ராஜன், ஐயாவு, ஆசிரியர் சூரியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வியாழன், 30 செப்டம்பர், 2010

"எதிர்கால சமுதாயம் ஜொலிக்க இயற்கையை காக்க வேண்டும்'


""எதிர்கால சமுதாயம் சிறப்பாக இருக்க, இயற்கையை பாதுகாக்க வேண்டும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், நுந்தளா கிராமத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். 

பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""தரமான வாழ்வுக்கு தரமான பொருட்களே உதவும். தர முத்திரைகளைப் பார்த்து, பொருட்ளை வாங்க வேண்டும். சேமிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்வது அவசியம். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, தபால் நிலையங்களில் முதலீடு செய்தால், பாதுகாப்பு, நம்பகத் தன்மை, உரிய வட்டித் தொகை கிடைக்கும்; முதலீடு செய்யும் முன் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும்,'' என்றார். 

மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், ""வாங்கும் பொருட்களுக்கு "பில்' பெற வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, தேவையான தகவல்களை கேட்டுப் பெற முடியும். நமது உரிமையை, எப்போதும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. மனித உரிமைகள் மீறப்பட்டால், மனித உரிமை ஆணையத்தை அணுக வேண்டும்,'' என்றார். 

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""புவி வெப்பத்தால், விவசாயம் உட்பட பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  ரசாயன உரங்களின் பயன்பாடால், உணவுப் பொருட்களில் விஷத் தன்மை அதிகரிக்கிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது, திடக்கழிவு மேலாண்மையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம், இயற்கையை பாதுகாக்க முடியும்,'' என்றார். 

"நுகர்வோர் கருத்துக்கள்' என்ற தலைப்பில், மாணவன் வினித் பேசினார்.

என்.எஸ்.எஸ்., மாணவர்கள், நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.  மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். ஓவிய ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.

புதன், 29 செப்டம்பர், 2010

ஸ்ரீமதுரை இலவச கண் சிகிச்சை முகாம்





  தேசிய நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை ஸ்ரீமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.  வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார்.  நுகர்வோர் மைய ஓருங்கிணைப்பாளர் சிவ சுப்பிரமணி, மங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  146 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.  12 பேர் கண் புறை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கண்தான விழிப்புணர்வு முகாம்

 தேவாலாவிலுள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேசிய கண்தான வார விழாவை முன்னிட்டு கூடலூர் கோட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சார்பில் நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு முகாமிற்கு தலைவர் சிவசுப்பிரமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத் துறையின் உதவி கோட்டப் பொறியாளர் டி.செல்வன் கண்தான விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிரியைகள் நிரஞ்சலாதேவி, தவமணி, ரேவதி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முருகன் நன்றி கூறினார்.

புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை


புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை 

உதகை, பிப். 28: நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் பகுதியில் வசித்துவரும் புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
 நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்டத்தை உள்ளடக்கிய பல பகுதிகளில் இந்து புலயன் பிரிவை சார்ந்தோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் பரம்பரை பரம்பரையாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருப்பதுடன், அரசின் சார்பில் குடும்ப அட்டை பெற்று நிலவரி மற்றும் வீட்டு வரி என அனைத்து வரிகளையும் செலுத்தி வருகின்றனர். அரசு பள்ளிகளில் கல்வி கற்றும், இதர அரசு சலுகைகளையும் பெற்று வந்துள்ளனர்.
 இவர்கள் இந்து புலயன் என்ற இனத்தை சேர்ந்த மலையாளத்தை தாய்மொழியாக கொண்டாலும், தமிழகத்தையே தாய் மண்ணாகக் கொண்டவர்கள். இவர்களது சாதியினம் தமிழக அரசின் மாநில சாதிகள் பட்டியலில் எஸ்சி பட்டியலிலேயே இடம் பெற்றுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்ட அளவிலான சாதிகள் பட்டியலிலும் எஸ்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கேரள மாநிலத்திலும் இதே பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
 ஆனால், இவர்களுக்கு பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதே பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு கடந்த 1989ம் ஆண்டு வரை கூடலூரில் எஸ்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை கேட்டால் முறையான பதில் அளிப்பதில்லை. அண்மையில் சேரம்பாடி பகுதியை சேர்ந்த சதானந்தன் என்பவர் தனது மகளின் மேல் கல்விக்காக சாதி சான்றிதழ் கேட்டபோது உரிய சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
 இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விளக்கம் கேட்டபோது இடம் பெயர்ந்தவர்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வை வருவாய்த்துறையினர்தான் மேற்கொள்ள வேண்டும். சதானந்தனுக்கு எஸ்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளபோது, அவரது மகளுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்படாதது வியப்புக்குரியதாக உள்ளது.
 பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமாலேயே தாங்களாகவே முடிவெடுத்து அரசு ஆணை என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, இப்பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேனிலும் கலப்படமாம் ஜாக்கிரதை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி : சந்தையில், பிரபல பிராண்டுகளின் பெயர்களில் விற்பனை செய்யப்படும் தேனில் கலப்படம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களில், நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியது தேன். இது, மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தேனுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனை பல்வேறு நிறுவனங்களும், பாட்டிலில் அடைத்து, தங்கள் பிராண்டுகள் பெயரில் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அந்த தேனில், ரசாயனப் பொருட்கள், தேவைக்கு அதிகமாக கலக்கப்படுவதாக, ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் 10 பிரபல பிராண்டுகளின் தேன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பிராண்டையும், சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பிராண்டையும் வரவழைத்து ஆய்வு செய்தனர். அதில், அளவுக்கு அதிகமாக, "ஆக்சிடெட்டாசைக்ளின் ' உள்ளிட்ட "ஆன்ட்டிபயாடிக்' மருந்துகள் தேவைக்கு அதிகமாக கலக்கப்பட்டுள்ளது தெரிந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ கிராம் தேனில், 3.7 மைக்ரோ கிராம் முதல் 250 மைக்ரோகிராம் வரை ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக, ஒரு ஸ்பூன் தேன் அதாவது 20 கிராம் தேனில், 5 மைக்ரோ கிராம் ஆன்ட்டிபாடிக் மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக, நோய் ஏற்பட்டால், மனிதர்கள் சாதாரணமாக 500 மைக்ரோ கிராம் ஆன்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், தேனில் கலக்கப்படும் ஆன்ட்டிபயாடிக், இதனை விட ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இந்த கலப்பட தேனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இரத்த சம்பந்தமான நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், தேனீ வளர்ப்பவர்களும், ராணி தேனீ அதிக முட்டைகள் இடுவதற்காக கூடுகளில், ஆன்ட்டிபயாடிக்கை பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து பெறப்படும் தேனும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தராவிட்டால் வறுமையை ஒழிக்க 50 ஆண்டாகும்


லண்டனைச் சேர்ந்த, "ஆக்ஷன் எய்டு'என்ற நிறுவனம், "பசியுடன் போரிடுவது யார்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கடந்த 1990 - 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் தனிநபர் வருமானம், கணிசமாக அதிகரித்தது. இருந்தாலும், வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. தாராளமயமாக்கல் கொள்கையை இந்திய அரசு முழு வீச்சில் செயல்படுத்திய அதே காலத்தில், வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையும் அதற்கு இணையாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள குழந்தைகளில் 43 சதவீதம் குழந்தைகள், போதிய ஊட்டச் சத்து இல்லாமல் பாதிக்கபட்டுள்ளனர். 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசின் பட்ஜெட்டில் விவசாய துறைக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதுமே இதற்கு முக்கிய காரணம். விவசாய துறையில்,பெருமளவில் முதலீடு செய்யப்படாததால்,  தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும், அது தேவைக்கு ஏற்ப இல்லை.விவசாய துறையில் நீண்ட கால முதலீடும் போதிய அளவில் இல்லை.

இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. நிலச் சீர்திருத்தம் போன்ற விஷயங்களும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தியாவில் தற்போது நிலவும் வறுமையை பாதியாக குறைப்பதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.பொது வினியோக திட்டத்தில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். விளை நிலங்கள், ரியஸ் எஸ்டேட் துறையினரால் கபளீகரம் ஆவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு,  நிலச்சீர்திருத்த திட்டத்தை விரைவு படுத்துவதன் மூலமும் வறுமையை குறைக்க முடியும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த, "ஆக்ஷன் எய்டு'என்ற நிறுவனம், "பசியுடன் போரிடுவது யார்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கடந்த 1990 - 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் தனிநபர் வருமானம், கணிசமாக அதிகரித்தது. இருந்தாலும், வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. தாராளமயமாக்கல் கொள்கையை இந்திய அரசு முழு வீச்சில் செயல்படுத்திய அதே காலத்தில், வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையும் அதற்கு இணையாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள குழந்தைகளில் 43 சதவீதம் குழந்தைகள், போதிய ஊட்டச் சத்து இல்லாமல் பாதிக்கபட்டுள்ளனர். 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசின் பட்ஜெட்டில் விவசாய துறைக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதுமே இதற்கு முக்கிய காரணம். விவசாய துறையில்,பெருமளவில் முதலீடு செய்யப்படாததால்,  தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும், அது தேவைக்கு ஏற்ப இல்லை.விவசாய துறையில் நீண்ட கால முதலீடும் போதிய அளவில் இல்லை.

இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. நிலச் சீர்திருத்தம் போன்ற விஷயங்களும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், இந்தியாவில் தற்போது நிலவும் வறுமையை பாதியாக குறைப்பதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.பொது வினியோக திட்டத்தில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். விளை நிலங்கள், ரியஸ் எஸ்டேட் துறையினரால் கபளீகரம் ஆவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு,  நிலச்சீர்திருத்த திட்டத்தை விரைவு படுத்துவதன் மூலமும் வறுமையை குறைக்க முடியும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் ஏழு நாட்கள் சிறப்பு முகாம், நேற்று நுந்தளா கிராமத்தில் துவக்கப்பட்டது.

திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா மேற்பார்வையில், ஹெத்தையம்மன் கோவில் செல்லும் பாதை, பள்ளி செல்லும் பாதை, மயானத்துக்கு செல்லும் பாதை, அண்ணா நகரில் நடைபாதை மற்றும் கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அட்டுபாயில் முலுக்கா மேஸ்திரி நஞ்சன் பொதுநல அறக்கட்டளை மற்றும் ஊட்டி லயன்ஸ் சங்கத்துடன், இலவச எலும்பு மற்றும் மூட்டு, பொதுநல மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. கோவையை சேர்ந்த டாக்டர்கள் சதீஷ் குமார், ராமலிங்கம், ராமசந்திரன், விவேகானந்தன் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

மாவட்ட நுகர்வோர் சங்கப் பொறுப்பாளர்கள் சிவசுப்ரமணியுடன் இணைந்து, நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம்,
ஊட்டி தலைமை நிலைய டாக்டர்கள் சாந்தகுமார், திலீப் தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட உள்ளன. முகாம் ஏற்பாடுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மையப்பன் ஆலோசனையின் படி, தலைமை ஆசிரியர் செவணன், மாவட்ட தொடர்பு அலுவலர் இளமுருகன், லயன்ஸ் சங்க தலைவர் டெரன்ச் ராஜேஷ், ஓவிய ஆசிரியர் பழனியப்பன் உட்பட பலர் மேற்கொண்டுள்ளனர்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குறையும் பஸ்களால் அதிகக்கும் பிரச்னை! கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் அவதி

கூடலூர் அரசுப் போக்குவரத்து கிளையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் வாகனங்களை நாட வேண்டிய நிலைக்கு, பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் டான்டீ அரசு தேயிலைத் தோட்டம், தனியார் தோட்ட நிறுவனங்களோடு, ஏராளமான சிறு விவசாயிகள் உள்ளனர். கூடலூர் தொகுதியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,வாக இருந்த மில்லருக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,வாக உள்ள ராமசந்திரனுக்கு, கதர்வாரியத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை கூடலூர் தொகுதி பெற்றிருந்தும், மக்களின் போக்குவரத்து தேவை, போதியளவு நிறைவேற்றப்படாமல் உள்ளது. 34 வழித்தடங்களுடன் துவக்கப்பட்ட கூடலூர் போக்குவரத்து கிளையில், 2000ம் ஆண்டில் 54 ஆக உயர்த்தப்பட்டது; தற்போது 48 வழித்தடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இயக்கப்படும் பஸ்களும், பழைய பஸ்களாக உள்ளதால், அவ்வப்போது பாதி வழியில் பழுதாகி, பொதுமக்கள் அவதிப்பட வேண்டியுள்ளது.
போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் தனியார் வாகன உரிமையாளர்களும், எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி, பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு பஸ்சில் 3.50 கொடுத்து பயணிக்கும் இடத்துக்கு, தனியார் வாகனங்களில் 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பல நேரங்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டும், குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ் இயக்கப்படாததால், காலை நேரத்தில் பள்ளிக்கும், மாலையில் வீட்டுக்கும் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மாறியது வழித்தடம்: பந்தலூரிலிருந்து சேலத்துக்கு, காலை 10.00 மணிக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில வாரங்கள் வரை, வாரத்துக்கு சில நாட்கள் மட்டுமே பந்தலூர் வந்துச் சென்ற இந்த பஸ், தற்போது நாடுகாணியிலிருந்து சேலத்துக்கு இயக்கப்படுகிறது.

பந்தலூரில் காத்திருப்போர், கூடலூர், ஊட்டி சென்று, சேலம், ஈரோடு பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் முறையாக பஸ் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், அமைச்சர்கள், போக்குவரத்து கழகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்களின் போக்குவரத்து தேவை குறித்து செவிமடுத்து நடவடிக்கை எடுத்தால், தேர்தல் சமயத்தில் இப்பிரச்னை எதிரொலிக்காது என எதிர்பார்க்கலாம்.

இன்று சர்வதேச ஓசோன் தினம் sep 16

சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது ஓசோன் படலம். இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்., 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

ஓசோன்: ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்து ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.

விளைவுகள்: கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓசோன் படலம் பாதிக் கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் கடல்நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்படும். இமய மலையில் உள்ள பனிக் கட்டிகள் உருகும். புற ஊதா கதிர்களால் தோல் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஓசோனின் எதிரி எச்.சி.எப்.சி.,: ஓசோனில் துளை ஏற்படுத்தக் கூடிய, குளோரோபுளூரோ கார்பன்களுக்கு (சி.எப்.சி.,) நாம் விடை கொடுத்துவிட்டோம். ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகள் சி.எப்.சி.,யின் உற்பத்தி, வினியோகம் மற்றும் பயன் படுத்துதல் ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தி விட்டன. ஏர்கண்டிஷனர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப்பெட்டிகள், தீ அணைப்பான்கள், ஸ்பிரேக்கள் உள்ளிட்ட அழுத்தப்பட்ட திரவம், வாயுக்களை வெளி யேற்றும் கருவிகளில் சி.எப்.சி., பயன்படுத்தப் பட்டது. இந்த சி.எப்.சி.,க்கு மாற்றுப் பொருளாக ஹைட்ரோ குளோரோபுளூரோ  கார்பன்கள் (எச்.சி.எப்.சி.,) பயன்படுத்தப்படுகின்றன. சி.எப்.சி.,யின் மாற்றுப் பொருளான எச்.சி.எப்.சி.,யில் 40 வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஓசோனை பாதிக்கக் கூடியவைதான். ஆகவே, இவற்றையும் பல்வேறு கட்டங்களில் பயன் பாட்டிலிருந்து நீக்கவிட, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓசோனாக்ஷன் அலுவலகம் கருதுகிறது. இதற்கான கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான சட்டமியற்றும் வழிமுறைகளை இந்நிறுவனம் நாடுகளுக்கு அளிக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, ஓசோன்செல், 2008ம் ஆண்டிலிருந்தே சி.எப்.சி., வெளியேற்றத்தை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது எச்.சி.எப்.சி.,யையும் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஓசோன் படலம் காக்கப் படும் பட்சத்தில், மோசமான வானிலை விளைவுகள் தடுக்கப்படும்.

பாதுகாப்பது எப்படி? * அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்- டை- ஆக்சøடு அளவை குறைக் கலாம்.

* சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பங்களை மட்டும் பயன் படுத்தவேண்டும்.

* ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

* பருவநிலை மாறுபாடு குறித்த உறுதியான திட்டங்களை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து செயல் படுத்த வேண்டும்.

* ஓசோனின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாக்க இந்நாளில் முயற்சி எடுக்க வேண்டும்

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஊட்டி : "தேவைகளை குறைந்து எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்' என, நுகர்வோர் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. எமரால்டு ஹைட்ஸ் மகளிர்  கல்லூரியில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன் பேசுகையில், "

"பொருட்களை வாங்க விளம்பரம் தூண்டுகிறது. விலையை பற்றி யோசிக்காமல், தேவைக்கும் அதிகமான பொருட்களை வாங்கி குவிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடம்பர பொருட்களை வாங்க கடன், லஞ்சம், வரதட்சணை தலைதூக்குகிறது. பிளாஸ்டிக் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
பொருட்களை வாங்கும் போது, தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். உணவு கலாச்சாரம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. தேவைகளை குறைத்து எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்; நாம் எச்சரிக்கையாக இருந்து, மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்க தூண்ட வேண்டும்,'' என்றார்.