விலங்குகளை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்., 4ம் நாள் சர்வதேச விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வன ஆர்வலரும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருமான பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரிவன் நினைவுநாளை குறிப்பிடும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1931ம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இத்தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. தற்போது இத்தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பாலூட்டிகளுக்கு மட்டுமே காதுமடல்கள் இருக்கும். விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு "நாய்' சிம்பன்சியால் கண்ணாடியில் முகம்பார்த்து தன்னை தெரிந்து கொள்ள முடியும். சிப்பி தன் வாழ்நாளில் பலமுறை ஆணாகவும் பெண்ணாகவும் மாறிக் கொள்ள முடியும்.
பூனைகளுக்கு இனிப்பு சுவை தெரியாது யானைகளுக்கு பார்வை கருப்பு வெள்ளைதான். ஒரு கண்ணை திறந்து கொண்டே டால்பினால் தூங்க முடியும். ஒரு எறும்பால் தன்னைவிட 50 மடங்கு எடையை தூக்க முடியும். மனிதனின் நாசியை விட நாய்களுக்கு ஆயிரம் மடங்கு திறன் அதிகம். நத்தை மூன்று ஆண்டுகளுக்கு கூட தூங்கும். ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் டம்ளர் பால் வழங்கும்.
அழிந்து வரும் இந்திய விலங்குகள்
கங்கை சுறா
இந்தியாவில் ஓடும் கங்கை நதியில் அதிகமாக வாழும் ஒருவகை சுறா மீன். இது ஹூக்ளி, பிரம்மபுத்திரா, மகாநதி போன்ற ஆறுகளிலும் வாழ்கின்றன. நீண்ட மூக்கு மற்றும் சிறிய கண்களை உடைய தோற்றம் கொண்டது. சுமார் 7 அடி நீளம் உடையது. இது மிகவும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது.
காண்டாமிருகம்
சுமத்ரான் காண்டாமிருகம் 5 அடி உயரம் கொண்டது. தலை முதல் பின்புறம் வரை 10 அடி நீளம் கொண்டது. இது இந்தியா, இந்தோனேசியா, பூடான், மியான்மர் , வங்கதேசம் ஆகிய நாடுகளில் சதுப்புநிலக் காடுகள், மழைக்காடுகள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. பழங்கள், செடிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. 275க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இவை உள்ளன.
ஆலிவ் ரிட்லி
பசிபிக் பெருங்கடலில் பெருமளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழ்கின்றன. இந்திய பெருங்கடல், ஜப்பான், நியூசிலாந்து, அட்லாண்டிக் கடல் போன்ற 80 நாடுகளின் கடல் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. 60 முதல் 70 செ.மீ நீளமுடையது. இமயமலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
ஆசிய கருப்பு கரடிகள்
உயரம் 7 அடி. நகங்கள் 4.4 இன்ச் நீளம். எடை 90 கிலோ முதல் 120 கிலோ வரை. தாவரங்கள், பழங்களை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் உடல் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்காக வேட்டையாடப்படுகின்றன. மனிதர்களைத் தாக்கும் திறனை இவை பெற்றிருந்தாலும் கூட, மனிதர்களால்தான் இவை தாக்கப்படுகின்றன.
நீலகிரி வரையாடு
தமிழகத்தில் நீலகிரி மலை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வரையாடுயாகள் வாழ்கின்றன. இது 4 ஆயிரம் அடிக்கு மேல் உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. வரையாடுகள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று. வெப்பமான நேரங்களில் பாறை இடுக்களில் ஓய்வெடுக்கும். கேரளாவின் இரவிக்குளம் தேசியப் பூங்காவில் சுமார் ஆயிரம் வரையாடுகள் வாழ்கின்றன.
சிங்க வால் குரங்குகள்
இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. இதன் வால் சிங்கத்தின் வாலைப் போல உள்ளதால் இது சிங்கவால் குரங்கு என அழைக்கப்படுகிறது. இதன் உடம்பில் உள்ள முடிகள் கருப்பு நிறத்தில் இருக்கும். தலையைச் சுற்றி பொன்னிற, சாம்பல் நிற முடியைக் கொண் டிருக்கும். தலை முதல் வால் வரையிலான நீளம் 40 செ.மீ. முதல் 60 செ.மீ., வரை இருக்கும். இதன் சராசரி ஆயுள் காலம் 20 ஆண்டு. மனிதர் களிடமிருந்து தனித்து வாழும் குணம் படைத்தவை. தற்போது களக்காடு - முண்டந்துறை சரணாலயத்தில் அதிகமாகக் காணப்படு கின்றன.
சிங்கங்கள்
ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் தேசிய வனவிலங்குப் பூங்கா பகுதியில் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. குஜராத் அரசின் தகவலின் படி, 411 ஆசிய சிங்கங்கள் கிர் வனப்பகுதியில் வாழ்கின்றன. இது 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின் 361 ஆக இருந்தது தற்போது 52 அதிகரித் துள்ளது.
பாண்டா
பாண்டா அதிகளவில் உண்பது மூங்கில் களைத்தான். முட்டை, சிறிய பறவைகள், சிறிய பாலூட்டிகள் போன்ற வற்றையும் உணவாக உட்கொள்கின்றன. இது மனிதர்கள் வசிக்காத இடத்தில் தனியே வாழும் தன்மை உடையது. உலகில் 800க்கும் மேற்பட்ட வன விலங்கு பூங்காக்களில் வாழ்கின்றன.
புலிகள்
நமது நாட்டின் தேசிய விலங்கு புலி. ஆனால் இதன் நிலை இன்று ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது 1411 புலிகள் மட்டுமே வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தவிர வங்கதேசத்தில் 200, நேபாளத்தில் 155, பூடானில் 60 என்ற எண்ணிக்கையில் புலிகள் வாழ்கின்றன. புலிகள் எண்ணிக்கை சீராக இருந்தால்தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் மேய்ச்சல் விலங்குகள் அதிகப்படியாக பெருகி, காடுகளின் வளம் குறையும்.
யானைகள்
உலகில் உள்ள விலங்குகளில் மிகப்பெரியதும், நீண்ட நாள் வாழக்கூடிய உயிரினம் யானைகள். தற்போது ஆப்ரிக்கா புதர்வெளி யானைகள், ஆப்ரிக்க காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் ஆகியவை மற்றுமே உலகில் வாழ்கின்றன. ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் வாழ்கின்றன. யானைகளின் எண்ணிக்கை நல்ல நிலையில் இருந்தாலும் கூட காடுகளை மனிதன் ஆக்கிரமிப்பதாலும், இதன் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சில நேரங்களில் இவை ரயில்களில் அடிபட்டு இறக்க நேரிடுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக