நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள். அவரது பிறந்த தினமான அக்., 2ம் தேதி, ஐ.நா., அமைப்பால் "சர்வதேச அகிம்சை தினமாக' அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், வன்முறையற்ற வாழ்க்கை போன்றவற்றின் முக்கியத் துவத்தை மக்களுக்கு உணர்த்து வதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அகிம்சை: சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி, சுவாமி சிவானந்தா போன்றவர்கள் அகிம்சையின் வழிமுறையை மக்களுக்கு போதித்தனர். தங்களது உரிமைகளை, கோரிக்கைகளை, உணர்வுகளை வன்முறை வழியில் நடத்தாமல் அறவழியில் செல்வதே அகிம்சை. இதனால் யாருக்கும் துன்பமோ, காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படக்கூடாது என்பது தான் இதன் முக்கிய நோக்கம்.
உலகிற்கு வழிகாட்டி: இத்தகைய சக்தி மிக்க அகிம்சா போராட்டத்தை தான் மகாத்மா காந்தி, இந்திய அரசியலில் மேற்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார். மேலும் அகிம்சை வழியில் போராடிய முதல் தலைவர் என்ற பெருமையும் பெற்றார். அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா, தன்னை கவர்ந்த தலைவர் என கூறியது மகாத்மா காந்தியை தான். மேலும் மகாத்மா பின்பற்றிய அகிம்சை முறை தான் தற்போதைய உலகுக்கு அவசியம் என்றும் ஒபாமா வலியுறுத் துகிறார். இத்தகைய உன்னதமான அகிம்சையை உலகுக்கு எடுத்துக் காட்டிய மகாத்மாவின் வழியை இன்று முதல் அனைவரும் பின்பற்ற இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்.
மகாத்மா, எங்கள் ஆத்மா
ஓ தேசப்பிதாவே, சக ஆத்மாக்களுள்
தேடுகின்றோம் உன்னை இன்று.
தரிசிக்க முடியவில்லை, ஒருவரிடமும்
தேடுகின்றோம் உன்னை இன்று.
தரிசிக்க முடியவில்லை, ஒருவரிடமும்
ஆடம்பரம் வெறுத்து ஆடையை குறைத்தாய் அன்று
ஆடை வேண்டுவோருக்கு அது கிடைக்கவில்லை இன்று
ஆடை வேண்டுவோருக்கு அது கிடைக்கவில்லை இன்று
உப்புக்கு வரி நீக்க தண்டி யாத்திரை அன்று
குடிநீருக்காக தண்ணீர் யாத்திரை இன்று
குடிநீருக்காக தண்ணீர் யாத்திரை இன்று
ஆட்டுப்பாலும்,வேர்கடலையும் போய்விட்டது
ஆடம்பர உணவின் ஆதிக்கமாகி விட்டது
ஆடம்பர உணவின் ஆதிக்கமாகி விட்டது
அன்றைய தியாக யாத்திரைகள்
இன்றைய பாஷன் பரேடுகளாகி விட்டன
இன்றைய பாஷன் பரேடுகளாகி விட்டன
அமைதி கூட்டங்களும் ஆலய வழிபாடும் கூட
""ஆயுதம் ஏந்திய துணையுடன்தான் இன்று''
""ஆயுதம் ஏந்திய துணையுடன்தான் இன்று''
சுதந்திரம் காக்க பாரதம் வந்தாய் அன்று
தங்கள் சுதந்திரம் காக்க வெளிநாடு செல்கின்றனர் பலர், இன்று.
தங்கள் சுதந்திரம் காக்க வெளிநாடு செல்கின்றனர் பலர், இன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக