உலகில் பார்வை இழந்தோருக்க வழிகாட்டும் தினம் இன்று கடைபிக்கப்படுகிறது,. சாலைகள், பள்ளிகள் , கல்லூரிகள், பொது இடங்கள், பார்க்கிங் பகுதிகள், கூட்ட நெரிசலான வீதிகள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்ல அலுவகங்கள் என பல இடங்களுக்கு பார்வையிழந்தவர்கள் எவ்வாறு சிரமப்படுகின்றனர் என்பதை உணர்ந்து அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்.
என்ன செய்யலாம்
* பார்வையற்றவர்கள் தாமாக முன்வந்து நம்மிடம் உதவி கேட்க முடியாது. எனவே நாமே முன்வந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.
* சாலையை கடக்கும் போது அவர்களுக்கு உதவி செய்யலாம். வாகனத்தில் செல்பவர்கள் பார்வையற்றவர்கள் சாலையை கடந்து செல்லும் வரை பொறுமை காக்க வேண்டும்.
* நெரிசலான இடங்கள் மற்றும் வீதிகளில், பார்வையற்றவர்களை நாம் கவனமாக அழைத்து செல்ல வேண்டும்.
* சாலைகளில் முடிந்தவரை எங்கு நடைபாதை கிராசிங் உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்தவும்.
* கட்டடங்களில் உள்ள படிகளில் ஏறும் போதும், இறங்கும் போதும் கவனமாக அவர்களை கூட்டிச் செல்ல வேண்டும்.
* பார்வையற்றவர்களிடம் பேசும்போது மிகவும் சத்தமாக பேச வேண்டாம். பார்வையற்றவர்களாக இருப்பதனால் அவர்களுக்கு காது கேட்கும் திறனும் குறைவாக இருக்கும் என்று அர்த்தமில்லை.
* விழியிழந்தோர்கள் பஸ் அல்லது ரயில்களில் ஏறும் போது அவர்கள் முதலில் ஏறும் வகையில் வழிவிட வேண்டும். மேலும் அவர்களுக்கென சிறப்பு இருக்கைகளையும் ஒதுக்கி தர வேண்டும்.
* நாம் பயன்படுத்தும் பொருட்களில் பார்வையற்றவர்களுக்கு ஏற்ப சிறப்பு பொருட்களை தயாரிக்கலாம்.
இன்று பார்வை தினம்
அக்டோபர் 09,2008,
ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வியாழனை உலக பார்வை தினமாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. பார்வை இழப்பு பற்றிய முறையான விழிப்புணர்வு இல்லையெனில் வரும் 2020ம் ஆண்டுக்குள் உலகில் ஏறத்தாழ 8 கோடிப்பேர் பார்வையற்றவர்களாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஏறத்தாழ உலகம் முழுவதும் 32.5 கோடிப்பேருக்கு கடுமையான பார்வைக்குறைபாடு உள்ளது.
இவற்றில் 4.5 கோடிப்பேர் முழுமையாக பார்வை இழந்தவர்கள். 13 கோடிப்பேருக்கு பார்வைத் திறன் குறைபாடு உள்ளது. 15 கோடிப்பேர் கண்ணாடி அணிய தொடங்கினால் பார்வை குறைபாட்டில் இருந்து மீள முடியும். பார்வை குறைபாடு உடையவர்களில் ஏறத்தாழ 90 சதவீதம் பேர் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். மாறும் வாழ்க்கைமுறை, வயதானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது போன்றவற்றால் பார்வை குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
உலகில் பார்வை இழந்தவர்களில் ஏறத்தாழ 80 சதவீதம் பேர் 50 வயதை கடந்தவர்கள். முதியவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளவும் கண்பார்வை குறைபாடு தடையாக அமைகிறது. கண் பார்வையை இழக்க நேர்வதை 75 சதவீதம் வரை தடுக்க முடியும். எனினும் இது குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. கண்தானம் செய்வது குறித்த தயக்கங்களும், பார்வையற்றோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். பார்வையை இழப்பை சந்திப்பவர்களில் பெண்கள் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக