- வரையறை உயிரியல் பல் வகைமை
வரையறை
உயிரியல் பல்வகைமை என்பது சூழலியல் முறைகள் மரபணுக்கள் அல்லது புவியின் அனைத்து பகுதிகள் போன்ற வேறுபட்ட சூழ்நிலை முறைகளில் வாழுகின்ற உயிரினங்களாகும். உயிரியல் பல்வகையை உயிரியல் முறையின் நிலையை அளவீட உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் மில்லியன் பல்வகை உயிரியனங்கள் புவியில் உள்ளது. அதாவது கிட்டதட்ட 3.5 பில்லியன் வருடங்களின் மதிப்பீட்டு படி உயிரினங்கள் உள்ளது.
பல்லுயிர் பெருக்கம் என்னது உயிரியியல் அமைப்பின் படி வேறுபட்ட வாரிக்கை சூழ்நிலை முறைகளை கொண்ட உயிரினங்களாகும்.
உயிரியியலறிஞர்களின் படி பல்லுயிர் பெருக்கம் (அ) உயிரியல் பல்வகைமை என்பது. “மொத்த மரபணுக்கள் வகைகள் மற்றும் சூழியியல் முறைகள் போன்றவையாகும். மேலும் இது பெரும்பாலான சந்தர்பங்களை விளக்குகிறது. அத்துடன் மூன்ஞ நிலைகளை இனங்காணுகிறது.
- மரபியற் பெருக்கம் / பல்வகைமை
- இனப் பெருக்கம் / பல்வகைமை
- சூழ்நிலை மண்டல பெருக்கம்
மரபியற் பெருக்கம் (அ) பல்வகைமை என்பது ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலையாகும். இது மரபியியல் மாற்றத்தில் இருந்து வேறுபட்டதாகும்.
வேளாண்மை தொடர்பு
மனிதர்கள், பண்ணை (விளைநிலம்) யை தொடங்குவதற்கு முன் அவர்கள் விளைச்சலை பெருக்கக்கூடிய பயிர்களை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவை ஒரு பயிர் சாகுபடி மற்றும் மரபியல் ஒற்றுமையுடைய பயிர்கள் போன்றவற்றை வழிவகுக்கிறது குறைந்தபட்ச அல்லது மரபியற் பெருக்கமற்ற பயிர்கள் எளிதில் தாக்கக்கூடிய நோய்களினால் எளிதில் தாக்கப்படுகிறது. இந்த பயிர்களின் நோய்கள் நுண்ணுயிர்களால் ஏற்பட்டு இருப்பின் பயிர் இனத்தை முற்றிலுமாக தாக்கி அழித்துவிடுகின்றது. நுண்ணுயிர்களால் எளிதில் தாக்கப்படும் மரபியற் பெருக்கத்தை மனிதர்கள் விளைச்சலுக்காக தேர்ந்தெடுக்கும் போது பயிர்கள் முற்றிலுமாக நுண்ணுயிர் நோய்களால் தாக்கபட்டு அழிக்கப்படுகிறது.
அயர்லாந்தில் அபகீர்த்தியுள்ள உருளைக்கிழங்கு பஞ்சம் இதற்கு ஒரு சம்பவமாகும். புதிய உருளைக்கிழங்குகள் இனப்பெருக்கத்தால் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் சில நேரங்களில் பெற்றோரின் பகுதியிலிருந்து உருவாக்கப்படுகின்றது மற்றும் ஒரு உருளைக்கிழங்கின் நகலில் இருந்து அனைத்து பயிர்கள் உருவாக்கப்படுவதால் அனைத்தும் எளிதில் தாக்கக்கூடிய நோய்களுக்கு ஏற்றதாக அமைகிறது. 1840 ல் அயர்லாந்து மக்கள் உணவுக்காக உருளைக்கிழங்கை பொருத்தே இருந்தனர். உருளைக்கிழங்கின் ஒரு வகை ரகமான “லம்பர்” ரகத்தை பயிரிட்டனர் இந்த ரகம் எலியால் தாக்கக்கூடிய அதாவது பைடோப்தோரா இன்ஃபென்டன்ஸ் (phytophthora infestans) என்ற நோய்க்கு ஏற்றதாக இருந்தது. இதனால் பெரும்பாலான உருளைக்கிழங்கு அழிந்து பத்தாயிரம் மக்கள் உணவில்லாமல் மடிந்தனர்.
மரபியற் பல்வகைமையின் தேக்கத்தை சமாளி
உலகமானது பல்வேறு வழிகளில் மரபியற் பல்வகைமையை பாதுகாப்பது அல்லது அதிகரிப்பது போன்றவற்றை கையாளுகிறது. பெருங்கடலின் மிதப்பிகள். கடலின் வைரஸ்கள் மிதப்பிகளை தாக்கி மற்ற உயிரினங்களின் மரபணுக்களை எடுத்துக்கொள்கிறது. ஒரு செல்லின் மரபணுவை கொண்ட வைரஸ் ஆனது மற்றவை தாக்கி மரபியற் பண்பாட்டை பிறகு மாற்றுகிறது மிதப்புகள் இருந்த பகுதியின் தொகையை பாதுகாப்பது மற்றும் கற்பனை செய்ய முடியாத சுற்றுப்புறச்சூழலின் மாற்றம் போன்றவற்றை பராமரிக்க உதவுகிறது.
பயமுறுத்தும் இனங்களில் சிறுத்தைபுலியும் ஒன்றாகும். இதன் மரபியற் பல்வகைமை மிகக்குறைவாகும். எனவே இனப்பெருக்கத்தின் குறைவான விந்தணு உள்ளது. 5 சதவிகித சிறுத்தைபுலிகள் உயிருடன் இருக்கிறது. பத்தாயிரம் வடங்களுக்கு முன்னரே சிறுத்தைப்புலியின் ஒரு இனமான ஜீபேட்டஸ் அழிந்து விட்டது. சிறுத்தை இனமானது அதன் இனப்பெருக்கத்தில் வளர்ச்சி தடை இருப்பதால் இவைகள் அவைகளின் இனத்திற்கு உள்இனப்பெருக்கம் செய்கின்றது.
மரபியல் பல்வகைமையின் அளவீடு:
மரபியல் பல்வகைமையின் எண்ணிக்கையானது சில எளிமையான அளவீடுகள் மூலம் மதிப்பீடப்படுகிறது.
- மரபணு பல்வகைமை என்னும் மரபகராதியின் பல்லுருவாக்கத்திற்கு இடையேயுள்ள சரிசிகிதமாகும்
- வேறுபட்ட காரணிகள்
- அல்லீல்கள்
இனப் பல்வகைமை என்பது பகுதியிலுள்ள இனத்தின் எண்ணிக்கை மற்றும் அதன் தொடர்புடைய வளம் போன்றவற்றின் பொருளடக்கமாகும். இந்த இனப் பல்வகைமை பல்வேறு வகைகளில் உதவுகிறது.
இந்த இனப் பல்வகைமையின் பொதுவான பொருடக்கம் “சிம்சன்ஸ் டைவர்சிட்டி இன்டெக்ஸ்” ஆகும்.
(எ.கா)
D = (n/N)2
n - என்பது குறிப்பிட்ட இனத்தின் மொத்த உயிரினங்கள்
N - என்பது அனைத்து இனத்தின் மொத்த உயிரினங்கள்
D - என்பது பல்வகைமையின் பதிப்பு. இதன் மதிப்பு 0 மற்றும் 1 க்கு இடையே வேறுபடும். 1 ஆக இருந்தால் சூழ்நிலை மண்டலத்தில் மிக அதிக திறனை கொண்டதாக இருக்கும்.
இனப்பல்லகைமையினால் சிறிய வளைவு மனிதர்களிடம் இருக்கும். இதற்கு முக்கிய காரணங்கள் பின்வருமாறு
- இருப்பிடமானது அழிந்து விடுதல் மாற்றம் அடைதல் அல்லது துண்டு துண்டாகுதல்
- வெளிநாட்டு இனத்தின் அறிமுகம்
- மிகையான அறுவடை
- உலக வானிலை மாற்றம்
சூழ்நிலை மண்டலத்தின் நிலையை பொருத்து பகுதியில் ஏற்படும் பல்வகைமையாகும். இது உயிரியல் பல்வகைமையிலிருந்து வேறுபட்டதாகும்.
- அளவீடு மற்றும் பகிர்மானம்
அளவீடு மற்றும் பகிர்மானம்அளவீடு
உயிரியல் பல்வகைமை ஒரு பரந்த அடிப்படை ஆதலால் அதன் அளவீட்டிற்காக பல முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தகவல்களை கொண்டு வகுக்கப்படும். சுற்றுப்புற சூழல் வல்லுநர்கள் நடைமுறையில் இதன் அளவீட்டை அந்த பகுதியில் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு பங்களிக்கும் வகையில் அளவிட வேண்டும். மற்றவர்களுக்கு சுற்றுச்சுழல் நிலைப்படுத்தப்படும் முறையில் மக்கள் ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் உபயோகிக்கும் வகையில் உள்ள சாத்தியக்கூறுகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
வட துருவத்தின் அருகில் ஆர்க்டிக் பெருங்கடலின் கடல் பனியில் உள்ள பனிக்கரடிகள்.
உயிரியல் வல்லுநர்கள் விவாதம் செய்வது என்னவெனில் இம்முறை அளவீடு பலவகையான மரபணுக்களை கொண்டுள்ளது என்பதால் எந்த மரபணு பயனளிப்பது என்பதை கண்டறிவது கடினம் ஆதலால் பாதுகாப்பான சூழலிற்கு அதனோடு தொடர்பு கொண்ட மரபணுக்களின் நிழலையை கருத்தில் கொள்ள வேண்டும் சூழலியன் வல்லுநர்களுக்கு இம்முறை தடங்கள் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஏனெனில் அது சூழலியல் தொடர்பினை தடுக்கின்றது.
உயிரியல் பல்வகைமையானது அந்த புவியியல் பகுதியில் உள்ள வகைப்பாட்டின் செறிவினை கொண்டு வரைவு செய்யப்படுகிறது. விட்டேக்கர் என்பவர் சிற்றின பல்வகைமையை அளவீடு செய்யும் மூன்று முறைகளை வகுத்தார்.
- சிற்றின செறிவு
- சிம்ஸன் குறியீடு
- சன்னன் - வீயன்னர் குறியீடு
- ஆல்பா பல்வகைமை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி இனம் மற்றும் சூழலிடத்தில் உள்ள வகைப்பாட்டின் எண்ணிக்கையை கூட்டி அளவீடு செய்யப்படுகின்றது
- பீட்டா பல்வகைமை என்பது சூழிலடங்களுக்கு இடையே உள்ள சிற்றின வகைமையாகும். இது ஒவ்வோர் சூழிலடங்களுக்கு இடையே உள்ள சிற்றின வகைப்பாட்டின் எண்ணிக்கையை ஒப்பிடுதல் மூலம் அளவீடு செய்யப்படும்
- காமா பல்வகைமை என்பது ஒரு பகுதியில் உள்ள பல்வேறு சூழிலிடங்களில் ஒட்டு மொத்த வகைமையில் அளவீடு ஆகும்.
உயிரியல் பல்வகைமை உலகில் ஒரு சீராக பகிர்ந்து இல்லை. அது பொதுவாக வெப்ப மண்டலம் மற்றும் கேப்ஃபளோரிஸ்டிக் மாகாணம் போன்ற இடங்களில் பலவகைப்படடது. துருவ எல்லைகளில் கவனித்தால் சில வகை உயிரினங்களே காணப்படும். தாவர மற்றும் விலங்கினங்களின் பல்வகைமை அங்குள்ள சுற்றுச்சூழல் கடல்மட்ட உயரம் மற்றும் பிற சிற்றனங்களின் இருப்பு போன்றவற்றை கொண்டு அமையும்.
சுவிஸ் ஆல்பஸ் (தேசிய பூங்கா) வில் உள்ள ஊசி இலை காடுகள்
2006 ம் வருடம் உலகின் சிற்றினங்களில் பல எண்ணிக்கைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டது. அரியது (அ) அழியும் அபாயம் உள்ளது (அ) அழியும் அச்சத்தில் உள்ளது மேலும் பல வல்லுநர்கள் சிற்றினங்களின் மில்லியன் எண்ணிக்கையில் அழியும் அபாயத்தில் உள்ளது எனவும் அவை முறையாக கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். IUCN (ஐயுசிஎன்) ன் சிகப்பு பட்டியலில் உள்ள 40, 177 சிற்றினங்களில் 40 சதவிகிதம் (16, 119 சிற்றினம்) அழியும் அச்சத்தில் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகை முதல் துருவங்கள் வரையில் பல்வகைமை குறைந்தாலும் இதே போல் நீர்நிலை சூழிடலங்கள் மற்றும் கடல்களிலும் உள்ளது என்பது நிரூபிக்கப்படாமல் உள்ளது. மேலும் கடல் வாழ் சூழிடலத்தில் உயர நிலநோக்கோட்டில் பல்வகைமை அதிகரிக்கின்றது. வெப்பமண்டலங்கள் மற்றும் துருவு எல்லைகளில் உள்ள பல்வகைமை பற்றிய தகவல் குறைவாக உள்ளதால் இதனை பற்றிய அறிவியல் பூர்வமான முடிவு செய்வது தடையாக உள்ளது. பல்வகைமையின் முக்கிய தளம் (hot spot) என்பது அதிக அளவு அங்கேயே நிறர்தரமாக இருக்கக்கூடிய சிற்றினங்கள் கொண்ட இடமாகும். டாக்டர் .நார்மன் மேயர்ஸ் என்பவரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வகையை முக்கிய தளங்கள் பற்றிய கட்டுரைகள் “தி எண்விரான்மென்டலிஸ்ட்” என்ற ஆராய்ச்சி மலரில் வெளியிடப்பட்டது. இந்த தளங்களின் அருகிலேயே அதிகமான மனிதர்களின் வாழிடம் அமைந்துள்ளது. இத்தளங்கள் வெப்ப மண்டலங்களிலேயே காடுகளாக அதிகம் உள்ளன.
ப்ரேசிலில் உள்ள அட்லாண்டிக் காடு பல்வகைமையின் முக்கிய தனமாகும். இங்கு 20,000 தாவர சிற்றினங்கள் 1350 எலும்பு கொண்ட விலங்கினங்கள் மில்லியன் கணக்கில் பூச்சி இனங்கள் ஆகியவை உள்ளன. இவற்றுள் 50 சதவிகிதம் கூட உலகின் எங்கும் காணமுடியவில்லை மடகாஸ்கர் தீவில் உள்ள சருகு இலையுதிர் காடுகள் மற்றும் தாழ்ந்த மழைக் காடுகள் ஆகியவை அதிகமாக பல்வகையை கொண்ட சிற்றினங்கள் கொண்டுள்ளது. இந்த தீவு ஆப்ரிகா கண்டத்திலிருந்து 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதால் ஆப்ரிக்கா காடுகளில் உள்ள உயிரினங்களின் வேறுபட்ட சிற்றினங்கள் இங்கே தோன்றியுள்ளன. அதிக பல்வகைமை கொண்ட தளங்கள் அனைத்தும் முக்கிய வாழிடங்களில் ஒத்துப்போகும் தன்மையை வளர்த்துக் கொண்டவைகளில் இருந்தே தோன்றியது உதாரணமாக வட ஐரோப்பாவின் மக்கு மண் இவ்வகையில் தோன்றியது தான்.
பரிமாணம்
நான்கு மில்லியன் வருடங்களாக ஏற்படும் பரிமான வளர்ச்சியே இன்று பூமியில் உள்ள உயிரியல் பல்வகைமைக்கு காரணமாகும். உயிரினங்களின் தோற்றம் அறிவியல் கூற்றுப்படி நிரூபிக்கப்படவில்லை எனினும் பூமி தோன்றிய பின் சில நூறு மில்லியன் ஆண்டுகளில் உயிர் தோன்றிவிட்டது என சில ஆதாரங்கள் கூறுகின்றன. 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் உயிரினங்கள் அனைத்தும் ஆர்க்கியா, பாக்டீரியா, ப்ரோடோசோன் மற்றும் ஒரு செல் உயிரினங்களாகவே இருந்தன.
பல்வகைமையின் சரித்திரத்தை நோக்கினால் பெனரோசோயிக் (இறுதி 540 மில்லியன் வருடங்கள்) காலகட்டத்தின் கேம்பிரியன் காலத்தில் - அனைத்து பல செய் உயிரினங்களும் தோன்றியுள்ளன. அதன் பின்னர் 400 மில்லியன் ஆண்டுகளில் உலக பல்வகைமை சிறிதளவு மாற்றங்களுடன் ஒவ்வோர் காலகாட்டத்திலும் அதிகமாக பல்வகைமை இழப்புகளுடன் தோன்றியுள்ளது.
இங்கு படத்தில் கானும் பலவகைமை பற்றிய தொல்லுயிர் எச்சத்தின் பதிவின்படி தற்போதுள்ள சில மில்லியன் வருடங்கள் தான் உலக சரித்திரத்தின் அதிக பட்ச பல்வகைமையை தெரிவிக்கின்றது. ஆயினும் அனைத்து வல்லுநர்களும் இக்கருத்தினை ஆமோதிப்பதில்லை ஏனெனில் தற்போதைய நிலவியல் பாகங்களினால் தொல்லுயிர் எச்சங்கள் அதிகளவு வேறுபாடுகளை கொண்டுள்ளது. சிலர் விவாதிப்பது என்னெவெனில் நவீன பல்வகைமைக்கும் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உள்ள பல்வகைமைக்கும் அதிகமாக வேறுபாடு இல்லை (அல்ராய் மற்றும் குழு 2001). தற்போதைய உலக பேரினங்களின் பல்வகைமை 2 மில்லியன் முதல் 100 மில்லியன் சிற்றினங்களாக வேறுபடுகின்றது. அதனில் சிறந்ததாக 13-14 மில்லியன் ஆகும்.
பல உயிரியல் வல்லுநர்கள் ஒப்புக்கொள்வது என்னவெனில் மனிதர்கள் தோன்றிய காலமே அதிகமாக அழிவுகள் தொடங்கியது எனவும் ஹோலோசீன் அழிவு நிகழ்வுகள் போன்றவை மனிதர்கள் சுற்றுப்புறத்தினை தாக்கியதால் உண்டாவது எனவும் கூறுகின்றனர். தற்போதுள்ள அழிவுகளின் அளவின்படி இன்னும் 100 வருடங்களில் பூமியில் உள்ள அதிகமமான உயிரினங்கள் அழிந்துவிடும். புதிய சிற்றனங்களும் அடிக்கடி கண்டுபிடித்த வண்ணம் உள்ளது (சராசரியாக ஒரு வருடத்தில் 5-10,000 புதிய சிற்றினங்கள் அதிகமாக பூச்சிகள்) இவை கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் பாகுபாடு செய்யப்படவில்லை (90 சதவிகிதம் ஆர்த்ரோபோடுகள் பாகுபாடு செய்யப்படவில்லை). நிலத்தின் பல்வகைமை வெப்ப மண்டல காடுகளில்தான் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. - பரிமாணம்பரிமாணம்நான்கு மில்லியன் வருடங்களாக ஏற்படும் பரிமான வளர்ச்சியே இன்று பூமியில் உள்ள உயிரியல் பல்வகைமைக்கு காரணமாகும். உயிரினங்களின் தோற்றம் அறிவியல் கூற்றுப்படி நிரூபிக்கப்படவில்லை எனினும் பூமி தோன்றிய பின் சில நூறு மில்லியன் ஆண்டுகளில் உயிர் தோன்றிவிட்டது என சில ஆதாரங்கள் கூறுகின்றன. 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் உயிரினங்கள் அனைத்தும் ஆர்க்கியா, பாக்டீரியா, ப்ரோடோசோன் மற்றும் ஒரு செல் உயிரினங்களாகவே இருந்தன.பல்வகைமையின் சரித்திரத்தை நோக்கினால் பெனரோசோயிக் (இறுதி 540 மில்லியன் வருடங்கள்) காலகட்டத்தின் கேம்பிரியன் காலத்தில் - அனைத்து பல செய் உயிரினங்களும் தோன்றியுள்ளன. அதன் பின்னர் 400 மில்லியன் ஆண்டுகளில் உலக பல்வகைமை சிறிதளவு மாற்றங்களுடன் ஒவ்வோர் காலகாட்டத்திலும் அதிகமாக பல்வகைமை இழப்புகளுடன் தோன்றியுள்ளது.
பெனரோசோயி காலகட்டத்தின் கடல் வாழ் தொல்லுயிர் எச்சத்தின் பல்வகைமை
இங்கு படத்தில் கானும் பலவகைமை பற்றிய தொல்லுயிர் எச்சத்தின் பதிவின்படி தற்போதுள்ள சில மில்லியன் வருடங்கள் தான் உலக சரித்திரத்தின் அதிக பட்ச பல்வகைமையை தெரிவிக்கின்றது. ஆயினும் அனைத்து வல்லுநர்களும் இக்கருத்தினை ஆமோதிப்பதில்லை ஏனெனில் தற்போதைய நிலவியல் பாகங்களினால் தொல்லுயிர் எச்சங்கள் அதிகளவு வேறுபாடுகளை கொண்டுள்ளது. சிலர் விவாதிப்பது என்னெவெனில் நவீன பல்வகைமைக்கும் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உள்ள பல்வகைமைக்கும் அதிகமாக வேறுபாடு இல்லை (அல்ராய் மற்றும் குழு 2001). தற்போதைய உலக பேரினங்களின் பல்வகைமை 2 மில்லியன் முதல் 100 மில்லியன் சிற்றினங்களாக வேறுபடுகின்றது. அதனில் சிறந்ததாக 13-14 மில்லியன் ஆகும்.
பல உயிரியல் வல்லுநர்கள் ஒப்புக்கொள்வது என்னவெனில் மனிதர்கள் தோன்றிய காலமே அதிகமாக அழிவுகள் தொடங்கியது எனவும் ஹோலோசீன் அழிவு நிகழ்வுகள் போன்றவை மனிதர்கள் சுற்றுப்புறத்தினை தாக்கியதால் உண்டாவது எனவும் கூறுகின்றனர். தற்போதுள்ள அழிவுகளின் அளவின்படி இன்னும் 100 வருடங்களில் பூமியில் உள்ள அதிகமமான உயிரினங்கள் அழிந்துவிடும்.
புதிய சிற்றனங்களும் அடிக்கடி கண்டுபிடித்த வண்ணம் உள்ளது (சராசரியாக ஒரு வருடத்தில் 5-10,000 புதிய சிற்றினங்கள் அதிகமாக பூச்சிகள்) இவை கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் பாகுபாடு செய்யப்படவில்லை (90 சதவிகிதம் ஆர்த்ரோபோடுகள் பாகுபாடு செய்யப்படவில்லை). நிலத்தின் பல்வகைமை வெப்ப மண்டல காடுகளில்தான் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது - மனிதர்களுக்கான பயன்கள்மனிதர்களுக்கான பயன்கள்
பல்வகைமையானது இயற்கை சூழிடத்தின் பல்வேறு செயல்கள் மற்றும் பணிகளுக்கு உறுதுணை புரிகிறது. சமூகத்திற்கு நன்மை பயக்கும் செயல்களில் சில காற்றின் தரம், சுற்றுச்சூழல் (உலகளவு மற்றும் உள்நாட்டின் கார்பன் சேகரிப்பு) நீர் தூய்மை, நோய் கட்டுப்பாடு, உயிரிமுறை பூச்சிகள் கட்டுப்பாடு மகரந்த சேகரிக்கை மற்றும் மண்அரிப்பு தடுப்பு ஆகியவையாகும். பல்வகைமையானது சூழிலடத்தின் ஒரு நிலையான தன்மையை பெற உதவுகிறது. இதன் மூலம் இச்சூழிலடங்கள் தங்களில் பணியை தடங்கலில்லாமல் செய்ய வழிவகுக்கிறது.
பொருட்கள் அல்லாத பயன்களாக ஆன்மீக மற்றும் பொழுதுபோக்கு அறிவுத்திறன் வளர்ச்சி மற்றும் கல்வி ஆகியவையும் சூழிலடத்திலிருந்து பெறப்படுகின்றது. பல்வகைமையானது சூழ்நிலைமையை வேதாந்தத்திற்கும் மையமாக விளங்குகிறது.
1. வேளாண்மை
பயிரின் வளர்ச்சியை அதிகப்படுத்த காட்டு இரகங்கள் மற்றும் உள்நாட்டு நில இரகங்கள் ஆகியவற்றில் மரபணு கூறின் மதிப்பு மிகவும் முக்கியமாகும். சில மரபணு கூறுகளில் இருந்து தருவிக்கப்பட்ட சில முக்கிய பயிர்கள் உருளைக்கிழங்கு மற்றும் காபி ஆகியவை ஆகும். கடந்த 250 வருடங்களாக பயிர் செடிகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது அவற்றின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு இரகங்களின் மரபணு பல்வகைமையை உபயோகித்ததே காரணமாகும். பசுமைக்புரட்சியின் காரணமாக கடந்த 50 வருடங்களில் ஏற்பட்டு இரட்டிப்பு பயிர் உற்பத்தியானது பல்வேறு பயனுள்ள மரபணு கூறுகளை உள்பயிர்பெருக்கம் மூலம் பயிர்களுக்குள் செலுத்தியதால் தான் ஏற்பட்டதாகும்.
பெல்ஜியத்தில் உள்ள வெப்பகால நிலங்கள்
முதன்மை பயிர் ஒரு நோயினால் தாக்கப்படும்பொழுது அதனிலிருந்து மீன்வதற்கு பயிர் பல்வகைமை உதவி செய்கிறது.
- ஐரிஷ் உருளைக்கிழங்கு கருகல் நோய் தாக்கிய 1846 ம் வருடம் மில்லியன் கணக்கில் மக்கள் இறந்ததும் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்ததும் ஏற்பட்டது. இந்நோய் தாக்கக்கூடிய இரு உருளைக்கிழங்கு இரகங்களை பயிரிட்டதே இதற்கு காரணமாகும்.
- 1970 ல் இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவிற்கு நெல் புல் தழைகுட்டை வைரஸ் நோய் பரவியது. 6273 இரகங்கள் இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாயின. ஒரு இந்திய இரகம் (1966 ம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது) இந்நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டிருந்ததால் அது பிரபலமாகி பின்னர் அந்த இரகமே வளர்க்கப்பட்டது.
- 1970 ம் வருடம் இலங்கை, ப்ரேசில் மற்றும் மத்திய அமெரிக்காவின் காபி தோட்டங்களில் காபி துரு நோய் தாக்கியது. எத்தியோபியாவில் ஒரு எதிர்ப்பு சக்தி கொண்ட இரகம் இதற்கு கண்டுபிடிக்கபட்டது.
மனிதர்களுக்கு தேவையான உணவினை பல்வகைமை அளிக்கின்றது. நமக்கு தேவையான சதவிகித உணவு 20 வகை பயிர் தாவரங்களிடமிருந்து கிடைக்கின்றது. இதனில் 40,000 வகைகளை மனிதர்கள் பல்வேறு முறையில் உபயோகிக்கின்றனர். தங்களது உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொள்ள இவைகளை நம்புகின்றனர் மனிதர்கள். தற்போதுள்ள இயற்கை அழிவுகளை கட்டுப்படுத்தினால் மனிதர்கள் இன்றும் இயற்கையின் உபயோகப்படுத்தாத திறன்களையும் அதிகரித்து உணவுப் பொருட்களையும் பெருக்கலாம்.
பிரேசிலில் உள்ள அமேசான் மழை காடுகள்
2. மனித ஆரோக்கியம்
பல்வகைமையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மனித ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் தற்போது சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. சுற்றுச்சூழல் மாற்றமும் அதனால் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய இடர்களும் பல்வகைமையுடன் தொடர்புடையவையாகும் (எ.கா. மக்கள் தொகை மாற்றம், நோய் பரவும் முறைகள், தூய தண்ணீர் தட்டுப்பாடு, வேளாண் பல்வகைமை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை). மனிதர்களின் உணவு மற்றும் சத்துக் குறைபாடு நோய்த் தாக்குதல் மருத்துவ துறை சமூக மற்றும் மன ஆரோக்கியம் ஆன்மீக நலன் ஆகியவை பல்வகைமையினால் தாக்கப்படுபவை. பல்வகைமையானது பேரழிவின் இடர்களை நீக்குவதோடு அல்லாமல் அதன் பின்னர் வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பல்வகைமையுடன் தொடர்புடைய முக்கியமான ஆரோக்கியம் சம்பந்தமானது மருந்துகளின் கண்டுபிடிப்பும் மருத்துவ ஆதாரங்களும் கிடைக்கப்பெறுதலே ஆகும். தற்போதுள்ள மருந்துகளில் ஒரு கணிசமான அளவு இயற்கையிலிருந்து நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பெறப்பட்டதாகும். சிவியன் மற்றும் பெர்ன்ஸ்டின் என்ற வல்லுநர்கள் கூறுகையில் ஐக்கிய அமெரிக்காவின் சந்தையில் உள்ள 50 சதவிகிதம் மருந்துகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும் என்கின்றனர். மேலும் உலக மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர் தங்களின் ஆரோக்கியத்திற்காக இயற்கையை சார்ந்தே உள்ளனர். (நவீன மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் உட்பட) அதிலும் புதிய மருந்துகள் ண்டுபிடிப்பிற்காக ஒரு சிறிய அளவு இயற்கை வகைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வளர்ந்து வரும் உயிர் அணுவியல் (biomics) துறையின் மூலம் சொல்லத்தக்க தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளோம்.
சந்தை நிலவரம் மற்றும் பல்லுயிர் அறிவியல் தரும் ஆதாரங்களின் மூலம் நிரூபிப்பது என்னவெனில் மருந்து தொழில் சாலைகளிடம் இருந்து 1980 ன் இடையில் இருந்த உற்பத்தி இல்லை என்பதும் அதற்குக் காரணம் அவை மரபணுவியல் மற்றும் செயற்கை வேதியியல் முறைகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் நாட்டம் செலுத்தியதே காரணமாகும். ஆயினும் அதில் எதிர்பார்த்த வெளியீடு கிடைக்கவில்லை. இதற்கிடையே இயற்கை பொருள் வேதியியலில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார மற்றும் ஆரோக்கிய பயன்கள் நன்கு கிட்டின. கடல் வாழ் சூழிடம் இதனில் மிகவும் ஆர்வம் தூண்டும் ஒன்றாகும். ஆயினும் கட்டுப்படுத்தாத உயிரியல் வளர்ச்சியும் சில சமயங்களில் அதிகளவு பயன்பாட்டினால் சூழிடத்தினை பாதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இதனால் பலவகைமை இழப்பு மற்றும் சமூக உரிமைகள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவையும் பாதிக்கப்படும் வாய்ப்புண்டு.
3. வியாபாரம் மற்றும் தொழிற்சாலை
தொழிற்சாலைகளுக்கு தேவையான அதிகமான பொருள்கள் உயிரியல் ஆதாரங்களிலிருந்தே எடுக்கப்படுகின்றன. இதனில் கட்டுமான பொருள்கள், நார்பொருள்கள், சாயங்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை அடங்கும். பல்வேறு உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களை நிலையாக உபயோகப்படுத்தும் முறைகளின் ஆராய்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் பல்வகைமை மற்றும் சூழிடம் பொருள்கள் மற்றும் பணிகள் ஆரோக்கியமான பொருளாதார வாழ்விற்கு வழிவகுக்கும்.
பல்வகைமையின் துணையினால் வியாபாரத்திற்கு ஏற்படும் நன்மைகள் இடத்திற்கு இடம் மாறுபடும். எனினும் ஆதாரங்களை பாதுகாப்பதில் (நீர் அளவு மற்றும் தரம், மரக்கட்டைகள், பேப்பர் மற்றும் அட்டைகள் உணவு மற்றும் மருந்து ஆதாரங்கள் போன்றவை) அவற்றின் முக்கியத்துவம் உலகளவில் உணரப்பட்டுள்ளது. ஆதலால் பல்வகைமையின் இழப்பு வியாபார வளர்ச்சிக்கு தடை செய்யும் ஒரு இடர் காரணியாகவும் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆபத்தாகவும் கருதப்படுகின்றது. குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் கூறும் அத்தகைய இடர்களை பற்றிய கட்டுரைகளை உலக ஆதார நிலையம் (world resource institute) தற்போது தொகுத்து வழங்கியுள்ளது.
4. பிற சூழிலியல் பணிகள்
பல்வகைமை பல சூழலியல் பணிகளை கண்களுக்கு புலப்படாத வகையில் செய்கின்றது. இந்த வளி மண்டலத்தின் வேதியியல் மற்றும் நீர் நிலைகளை ஒழுங்குபடுத்துவதில் பங்கு வகிக்கின்றது. பல்வகைமையானது நேரிடையாக நீர் தூய்மைபடுத்துதல் சத்துகளை மீன்சுழற்சி செய்து வளமான மண்ணை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. கட்டுப்பாடான சூழல்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி மனிதர்கள் சூழிடத்தினை தாங்களாகவே அமைத்துக்கொள்ள இயலாது என தெரிவித்துள்ளனர்.
(எ.கா) பூச்சி மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுவதை மனிதர்களால் போலியாக செயல்படுத்தும் பொழுது பில்லியன் டாலர்கள் செலவாகும்.
5. பொழுதுபோக்கு கலாச்சாரம் மற்றும் ரசனை அம்சங்கள்
பலர் பல்வகைமையிலிருந்து பொழுதுபோக்கு அம்சங்களான மலையேற்றம்,பறவைகள் காணுதல், மற்றும் இயற்கை எழிலை படிப்பது போன்றவற்றை மேற்கொள்வர். பல்வகைமையினால் இசையமைப்பாளர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஊக்கம் பெற்றுள்ளனர். கலாச்சார குழுக்கள் தங்களை இயற்கையின் ஒரு அங்கமாக நினைத்து கொண்டு உயிரினங்களுக்கு மரியாதை செலுத்துவர்.
பூங்கா அமைப்பு, மீன் தொட்டி வளர்ப்பு மற்றும் பட்டாம்பூச்சிகள் சேகரிப்பு போன்ற அனைத்தும் பல்வகைமையை சார்ந்தே உள்ளது. இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுத்தப்படுவது ஆயிரத்தில் பத்து வகை சிற்றினங்கள் மட்டுமே. மற்றவை முக்கிய பகுதியில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
கழுகு பாறை, ஒரிகன் மலையேற்றம்
இத்தகைய இயற்கை சூழலுக்கும் அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவானது மிகவும் புரிந்து கொள்ளப்படவில்லை, ஆயினும் பொது மக்கள் எப்பொழுதும் புதிய மற்றும் அரிய உயிரினங்களுக்கு மதிப்பு கொடுத்து அங்கீகரிப்பனர். தாவரவியல் பூங்கா (அ) மிருகக்காட்சி சாலைக்கு குடும்பத்துடன் செல்வது கல்வி நோக்குக்கு ஈடான பொழுதுபோக்கு அம்சமாகும்.
வேதாந்த முறைப்படி விவாதம் செய்தால் உயிரியல் பல்வகைமையானது தனக்குண்டான பொழுது போக்கு மற்றும் ஆன்மீக மதிப்பினை மனிதர்களுக்கும் தனக்கும் கொண்டுள்ளது. இந்த ஆலோசனையின் படி எடுத்துக்கொண்டால் வெப்ப மண்டல காடுகள் மற்றும் பிற சூழலியல் உண்மை நிலைகள போன்றவை முக்கியமான மருந்துகள் மற்றும் பொருட்களை கொண்டுள்ளதால் பாதுகாக்கப்படவேண்டியவை ஆகும். - தீங்கு விளைவிப்பவை பல்வகைமைக்கு தீங்கு விளைவிப்பவை
ஐக்கிய அமெரிக்காவின் : 1620, 1850 மற்றும் 1920 வரைப்படங்கள். கீழ்காணும் வரைப்படங்கள் வளமான காடுகள் இழப்பினை குறிக்கின்றன. சில காடுகள் மீண்டும் வளர்ந்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் உணவுப் பயிர்கள் உற்பத்தியாலும் முதலில் இருந்த 1620 ன் பரப்பளவினை நிறைவு செய்யவில்லை.
செழிப்பான காடுகளின் இழப்பையே இவ்வரை படங்கள் குறிக்கின்றன. மீண்டும் வளர்ந்தவை 1620 -இன் அளவினை பூர்த்தி செய்யவில்லை
கடந்த நூற்றாண்டில் உயிரியல் பல்வரகமையின் இழப்பு அதிகமாக காணப்பட்டது. சில ஆய்வுகள் கூறுவது யாதெனில் நாமறிந்த தாவரங்களில் எட்டில் ஒரு பாகம் அழிவை நோக்கியுள்ளது. சில கணக்கீடுகளின் படி ஒரு வருடத்தில் 1,40,000 சிற்றினங்கள் அழிந்து கொண்டுள்ளன. இந்த கணக்கீடு ஒரு நிலையில்லாத சூழலியல் நடைமுறைகளை வெளிப்படுத்துகின்றது. அனைத்து விஞ்ஞானிகளும் இத்தகைய இழப்பினை ஆமோதிக்கின்றனர். இந்த இழப்பு இதுவரையில் மனித வரலாற்றில் காணாத அளவு நூறு மடங்கு அதிகமாக உள்ளது.
உயிரியல் பலவகைமைக்கு தீங்குண்டாக்கும் காரணிகள் பலவாறாக வகுக்கப்பட்டுள்ளன. ஜேர்ட் டைமண்ட் என்பவர் “தீய காரணிகள் நான்கு” என வாழிடம் அழித்தல், அதிகமாக அழிவு, அறிமுகப்படுத்தப்படும் இரகங்கள் மற்றும் இரண்டாம் நிலை விரிவாக்கம் போன்றவற்றை குறிப்பிடுகின்றனர். எட்வர்ட் ஒ.வில்ஸன் என்பவர் ஆங்கிலத்தில் HIPPO (ஹிப்போ) என கூறுகின்றனர். அதாவது வாழிடம் அழித்தல் (H-Habitat destruction) அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள் (I-Invasive species), மாசுபாடு (P-Pollution), மனித மக்கள் தொகை அதிகரிப்பு (P-human over population), மற்றும் அதிகமான அறுவடை (O-Overharvesting) என ஐந்தினை குறிப்பிடுகின்றனர். தற்போது நடைமுறையில் பின்பற்றப்படுவது ஐ.யு.சி.என் (IUCN) வகைப்பாடு் கூறியுள்ள நேரிடை தீங்குகள் ஆகும். இதுவே சர்வதேச பாதுகாப்பு மையங்களான ஐக்கிய அமெரிக்கா இயற்கை பாதுகாப்பு மையம், உலக விலங்கினங்கள் நன்கொடை சர்வதேச பாதுகாப்புமையும் மற்றும் சர்வதேச பறவை வாழ் மையம் ஆகியவை கடைபிடிக்கும் முறைகள் ஆகும்.
1. வாழிடம் அழித்தல்
கி.பி.1000 முதல் கி.பி.2000 வரையில் அழிவிற்கு உண்டான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மனித நடவடிக்கையின் மூலம் ஏற்பட்டதே ஆகும். அங்கக ஆதாரங்களை மனிதர்கள் தங்கள் உணவில் சேர்த்து கொண்டது வெப்பமண்டல காடுகளின் அழிவிற்கு காரணமாகும். சிற்றனங்களின் அழிவு உணவிற்காகவோ அல்லது அவைகளின் வாழிடம் அழிக்கப்பட்டு விளை நிலங்கள் மற்றும் தோட்டங்களாகவோ மாற்றப்பட்டன. பூமியின் மொத்த உயிர் பொருள்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக மனிதர்கள் பயிர்கள் மற்றும் கால்நடைகள் உள்ளன. பூமியில் உள்ள பலவகைப்பட்ட உயிரினங்கள் குறைந்து கொண்டே வரும் பொழுது அதன் சூழிடம் தனது நிலைத்தன்மையை இழந்துவிடும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்வகைமை இழப்பிற்கான காரணிகள்: மக்கள் தொகை பெருக்கம் காடுகள் அழிவு, மாசுபாடு (காற்று மாசுபாடு, மண் மாசுபாடு, நீர் மாசுபாடு) மற்றும் பூமி வெப்பமடைதல் (அ) சூழ்நிலை மாற்றம். இவை அனைத்தும் மனித நடவடிக்கைகளால் வருவனவேயாகும். இவ்வனைத்து காரணிகளும் மக்கள் தொகை பெருக்கத்தால் வந்தாலும் பல்வகைமையை பாதிக்கும் ஒட்டு மொத்த தாக்கத்தை உண்டாக்குகிறது.
வாழிடத்தின் பரப்பளவு மற்றும் அங்கு வாழும் சிற்றினங்களின் எண்ணிக்கைக்கும் முறையான ஒரு தொடர்பு உண்டு. அதிக உடல் அளவு கொண்ட (சிற்றனங்களுக்கு குறைந்த வாழிடமும் அதே போல் தாழ்ந்த நிலநோக்கோடு (அ) காடுகள் (அ) பெருங்கடலில் வாழ்பவைகளுக்கும் குறைந்த வாழிடமும் கிடைக்கும். சிலர் உயிரியல் பலவகைமையின் இழப்பு சூழிடம் அழிவினால் ஏற்படாது எனவும் மும்முனை நிலைப்படுத்தப்பட்ட சூழிடம் (எ.கா காடுகளை அழித்து ஒரு பயிர் வளர்ப்பு முறை) மாற்றத்தினால் ஏற்படுவதே என்கின்றனர். பொருள் உரிமைகள் இல்லாத (அ) உயிரியல் ஆதாரங்களை அடையும் தடைகள் இல்லாத சில நாடுகளில் உயிரியல் பல்வகைமைகளின் இழப்பு இருக்கும். தேசிய அறிவியல் நிறுவனம், செப்டம்பர் 14, 2007 ல் நடத்திய ஆய்வின் படி உயிரியல் பல்வகைமை மற்றும் மரபணு பல்வகைமை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது எனவும், ஒரு சிற்றினத்தின் வேறுபாடு பல சிற்றினங்களுக்கு கிடையே உள்ள வேறுபாட்டிற்கு முக்கியம் எனவும் கூறியது. டாக்டர். ரிச்சர்ட் லிங்காவு கூறுகையில் இம்முறையில் ஒரு வகையை அகற்றினால் கூட அதன் சங்கிலி உடைந்து அதனால் சமூகத்தில் ஒரே சிற்றினம் பெருகிவிடும் என்கிறார்.
தற்போது அதிகமாக ஆபத்தில் உள்ள சூழிடம் நீர் நிலைகளில் உள்ளவைதான் . மில்லினியம் சூழிடம் ஆய்வு 2005 மற்றும் தூய நீர்நிலை விலங்கின வேறுபாடு ஆய்வு போன்ற திட்டப்பணிகள் மூலம் அதிகமான ஆபத்தை எதிர் கொள்வது தூய நீர்நிலை சூழிடம் என உறுதி செய்யப்பட்டது.
2. தாயகம் அல்லாத சிற்றினங்கள்
உலகெங்கிலும் உள்ள பல வகைப்பட்ட உயிரினங்கள் அதிகமாக ஒவ்வோர் இடத்திலும் அமைந்திருப்பது பிற உயிரினங்களிடம் இருந்த பிரித்து தடுத்து உள்ளதால் தான். அத்தகைய தடுப்புகள் நீண்ட ஆறுகள், கடல்கள், பெருங்கடல்கல், மலைகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவை தங்களுக்குள் ஏற்ற தாழ்வுகளுடன் அங்கு வாழும் உயிரினங்கள் பிற இடங்களுடன் கலந்துவிடாமல் தடுக்கின்றன. கண்டங்களுக்குள் தாழ்வு ஏற்பட்டால் ஒழிய இத்தகைய உயிரினங்கள் மேற்கூறிய தடைகளை தாண்டி செல்தல் இயலாது. ஆயினும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளில் ஒவ்வோர் இடத்திலிருந்தும் சிற்றினங்கள் மற்ற இடத்திற்கு இடம் பெயர்வது எளிதாகிவிட்டது. சரித்திரத்தில் கூறியுள்ளது போல் விலங்குகள் இடம் பெயர்வது நூற்றாண்டு கணக்கில் இல்லாமல் சில நாட்களிலேயே ஏற்படுகின்றது.
மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் தாயகம் அல்லாத சிற்றினங்களால் உயிரியல் பல்வகைமைக்கு ஆபத்து எற்படும். தாயகம் அல்லாத இரகங்கள் இங்கு சூழிலடத்தில் உள்ள தாயக இரகங்ககளை எதிர்த்து வாழ்வது சிரமமாகி அழிவை நோக்கி செல்கின்றன. தாயகம் அல்லாத உயிரினங்கள் இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள் (அ) ஆளுமை கொள்ளும் உயிரினங்களுக்கு இருக்கலாம். இவை தாயக உள்நாட்டு இரகங்களுக்கு தேவையான சத்துகள், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை ஆட்கொள்கின்றன. தாயகம் அல்லாத அறிமுக இரகங்கள் தங்கள் பரிமான பிண்ணனியாலும் புதிய சூழலில் போட்டியிட்டு நன்கு வளர்ந்து பரவி விடுகின்றனர். இத்தகைய சூழலில் அங்குள்ள தாயக இரகங்களின் வாழிடத்தை குறைத்துவிடுகின்றனர்.
மேற்கூறிய சூழ்நிலைகள் தொடருமானால் மனிதர்கள் பல்வேறு இடங்களிலிருந்து கொணரும் சில இரகங்கள் மட்டும் இவ்வுலகில் செழித்து வளர்ந்து எங்கும் வளரும் மேம்பட்ட இரகங்களாக உருவாகிவிடும். 2004 ம் வருடம் சர்வதேச வல்லுநர் குழு கணக்கீட்டு பூமி வெப்பமடைவதால் 2050 ம் வருடத்திற்குள் 10 சதவீத இரகங்கள் அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச பாதுகாப்பு மையத்தின் பிரத்யோக உயிரியல் பல்வகைமை அறிவியல் மையத்தில் உள்ள டாக்டர்.லீ ஷன்னா, கூறுகையில் நாம் சுற்றுச்சூழலின் தன்மையை மாற்ற வேண்டும். இல்லையெனில் பல சிற்றினங்கள் அழிந்துவிடும் என்கிறார்.
3. மரபனு மாசுபாடு
கட்டுப்படுத்தாத கலப்புயிர்தல் மூலம் அந்த இடத்திற்கு சொந்தமான தாயக இரகங்களில் மரபணு மாசுபாடு ஏற்படுகின்றது. அறிமுகப்படுத்தப்படும். உயிரினங்களால் தாயக உயிரினங்களில் சம அமைப்பான (அ) ஏற்கனவே உள்ள மரபியல் மாற்றம் ஏற்படுகின்றது. மனிதர்கள் தாங்கள் தேவைக்காக இடம்பெயரும் பொழுது (அ) வாழிடம் மாற்றம் ஏற்படும் பொழுது ஏற்படும் உட்கலப்பு (அ) கலப்புயிர்தல் மூலம் தாயக உயிரினங்கள் வகைகளும் கலக்கும் அரிதான வகைகளும் அதிகமாக உள்ள வகைகளும் கலக்கும் பொழுது இத்தகைய தாக்கம் மிகவும் ஆபத்தானது ஆகும். அதிகமாக உள்ள வகை அரிதானதுடன் கலந்து தனது மரபியல் அணுக்களை இழந்து வீரிய இரகங்கள் உருவாகி விடும். இத்தகைய நிலை தாயக வகைகளை முழுதாக அழித்துவிடும். வெளிப்புறத்தில் மட்டுமே ஆய்வுகள் செய்யாமல் இத்தகைய கலப்புயிர்தலில் உள்புறமும் மேற்கொள்வது சிறந்ததாகும். சில அளவிளான மரபணு மாற்றங்கள் பொதுவாக நடைபெறக்கூடியதாகும். இத்தகைய பரிமான வளர்ச்சியின் போது மரபணுக்கள் காரப்பாற்றமுடியாதது இயற்கைதான் ஆயினும் கலப்புயிர்தல் மற்றும் மறுகலப்பின் மூலம் ஏற்படும் இழப்பு தவிர்க்கமுடியாது.
4. கலப்புயிர்தல் மற்றும் மரபியல்
வேளாண்மை மற்றும் கால்நடை துறையில் பசுமைப் புரட்சியின் போது “புதிய வீரிய இரகங்களை” உருவாக்குவதற்கு கலப்புயிர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வளர்ந்தநாடுகளில் உருவாக்கப்பட்ட வீரிய இரகங்களின் விதைகள் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள உள்நாட்டு இரகங்களுடன் கலக்கச் செய்து அந்த சூழலுக்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட விதைகளை உருவாக்கப்பட்டன. அரசும் தொழிற்கூடங்களும் கலப்புயிர்தலை ஊக்குவித்தால் உள்நாட்டு இரகங்கள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கின. நோக்கத்துடன் மற்றும் நோக்கமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட பிற மகரந்த சேர்க்கை மற்றும் பிற கலப்புயிர்தல் போன்ற செயல்பாடுகள் உள்நாட்டு இரகங்களின் மரபணு இழப்பு மற்றும் மரபணு மாசுபாடு ஏற்பட காரணமாக இருந்தது.
மரபணு மாற்று உயிரினம் (genetically modified organism) என்பது மரபுப்பொறியியலின் மரபணு டிஎன்ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் மரபியல் கூறு மாற்றப்பட்டதாகும். மரபணு மாற்று உயிரினங்களே தற்பொழுது ஏற்படும் மரபணு மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாகும். இது காட்டு இரகங்கள் அல்லாமல் உள்நாட்டு இரகங்களினும் ஏற்படுகின்றது.
மரபணு இழப்பு மற்றும் மரபணு மாசுபாடு ஒரு குறிப்பிட்ட மரபியல் தோற்றத்தினை அழித்து மறைமுகமாக நமது உணவு பாதுகாப்பினை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறது. பல்வகையான மரபியல் பொருள் அழிந்துவிடுவதால் மேலும் நமது உணவுப்பயிர்கள் மற்றும் கால்நடைகளை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்றதாகவும் மாற்றுதல் கடினமாகும்.
5. சுற்றுச்சூழல் மாற்றம்:
பூமியின் உயிரியல் பல்வகைமை இழப்பிற்கு பூமி வெப்பமடைதல் முக்கிய காரணமாகும். உதாரணமாக பூமி தற்போதைய நிலையிலேயே வெப்பமடைந்து வருமானால் உயரியல் பல்வகைமையின் முக்கிய தளங்களாக கருதப்படும் பவளப்பாறைகள் இன்னும் 20 முதல் 40 ஆண்டுகளில் அழிந்துவிடும். - பேணி பாதுகாப்பவைபல்வகைமை இழப்பின்றி பாதுகாத்தல்
உலக அளவில் உயிரியல் பல்வகைமையின் இழப்பு ஏற்படும் இந்த 20 ம் நூற்றாண்டில், சூழலியல் வல்லுநர்கள், இயற்கை வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றோர் உயிரியல் பாதுகாப்பு பற்றிய விவரங்களை ஆராயத் தொடங்கியுள்ளனர். ஜான் முயர் என்பவர் பாதுகாப்பு நெறிமுறைக்கும், இழப்பின்றி பாதுகாக்கும் நெறிமுறைக்கும் உள்ள வேறுபாட்டை கூறுகின்றனர். இழப்பின்றி பாதுகாத்தல் என்பது மனித உபயோகம் (அ) மனித ஊடுருவில் இல்லாத பாதுகாப்பான பகுதிகளாகும். இழப்பின்றி பாதுகாக்கும் நெறிமுறைப்படி இயற்கை ஆதாரங்களின் உற்பத்தி மற்றும் மேலாண்மையின் மூலம் சிற்றினங்கள் சூழிடம், பரிமான வளர்ச்சி, மனித கலாச்சாரம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் பல்வகைமையை நிலையாக பேணுவதே பரிந்துரைக்கப்படுகிறது.
உயிரியல் பாதுகாப்பு வல்லுநர்கள் தற்போது நடைமுறையில் உள்ள பல்வகைமையின் தன்மைகளை கருத்தில் கொண்டு கூறுவதும், அறிவியலின் படி கூறுவதும், ‘ஹோலோசீன் இழப்பு காலம்’ அல்லது ‘ஆறாவது மொத்த இழப்பு காலம்’ என்னும் கூற்றே ஆகும். தொல்லுயிர் எச்சங்களின் பதிவேடுகள் படி இந்த ஆறாவது இழப்பானது அதன் முந்தைய ஐந்து இழப்புகளை காட்டிலும் அதிகம் என்கிறது. இத்தகைய இழப்புகளிலிருந்து மீள்வதற்கும் உயிரியல் பாதுகாப்பு வல்லுநர்கள் பல்வகைமையின் பாதுகாப்பிற்காகவும் சில நெறிமுறைகள், வரை முறைகள் மற்றும் செயல்பாடுகளை ஒரு செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். உயிரியல் பாதுகாப்பு என்பது, சூழலியல் சமூகவியல் கல்வி வல்லுநர்கள், நிலங்கள், அலுவலங்கள், அரசாங்கம், பல்கலை கழகங்கள், லாபநோக்கில்லாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிகின்றனர். பாதுகாப்பு செயல்திட்டங்களில் உலகு அளவில் முன்னுரை அளிக்கப்படுவது உயிரியல் பாதுகாப்பு திட்டங்கள். இவை பொதுக்கொள்கைகள் மற்றும் உள்ளூர் மண்டல உலக அளவினை சமூகங்கள் சூழிடங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பாதிக்கும் காரணிகளையும் உள்ளடக்கும் முறையில் வடிவமைக்கபட்டுள்ளது. உயிரியல் மற்றும் பல்வகைமை பாதுகாப்பு செயல்திட்டங்களானது, மனித நலம் மற்றும் உலக பொருளாதாரம் (சந்தை முதலீடுகள் உட்பட) மற்றும் சூழிட பணிகள் நிலைப்படும் வகையில் உருவா க்கப்பட்டுள்ளன. அச்செயல் திட்டத்தில் ஒன்று உயிரியல் பல்வகைமை வங்கி ஒன்றினை நிறுவி அதன் மூலம் அதற்கு நிதி ஒதுக்கீடு அளித்தல் ஆகும், உதாரணமாக ஆஸ்திரேலியா தாவர மேலாண்மை இத்தகைய ஒரு வங்கியே ஆகும் .
விலங்கினங்களை பாதுகாத்தல்
நுகர்வோர்
- முகப்பு
- நுகர்வோர் சட்டம்
- environment
- awarness programme photos
- NEWS
- மக்கள் ஆலோசனை மையம்
- கண் தானம்
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- consumer links
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
- cchep nilgiris
- NEAC
- ► 2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
- ▼ 2011 (184) ▼ January ► December
அன்புடன் வரவேற்கின்றோம்
you are welcome to our web page
எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்
Please give your GOOD IDEAS FOR DEVELOPING THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPSகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
வெள்ளி, 15 அக்டோபர், 2010
உயிரியல் பல் வகைமை(பயோடைவர்சிட்டி)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக