கூடலூர்: கூடலூர் நந்தட்டியில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நந்தட்டி ஊராட்சி பள்ளி பி.டி.ஏ., சார்பில், கூடலூர் நந்தட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி வரவேற்றார். கூடலூர் ஜென்ம நிலம் தனித்துணை தாசில்தார் இன்னாசிமுத்து துவக்கி வைத்தார். டாக்டர்.ஜெயராமன் தலைமையில் மருத்துவக் குழுவினர், பங்கேற்றவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பி.டி.ஏ., தலைவர் முருகன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, பள்ளி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக