நாடு முழுவதும் மின்சார திருட்டு மற்றும் பரிமாற்றத்தின்போது ஏற்படும் மின்சார இழப்பு காரணமாக இந்திய அரசுக்கு கடந்த 2009-10 ஆண்டில் மட்டும் ரூ. 45 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பகிர்ந்து அளிப்பது போன்ற வற்றால் மொத்த இழப்பு உற்பத்தியில் 29 சதவீதம் ஆகும்.
9 ஆண்டுகளுக்கு முன்னதாக கடந்த 2001-ல் வெறும் 3 சதவீத அளவு மட்டுமே இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த தகவலை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த பத்தாண்டுகளை காட்டிலும் மின்சார இழப்பு என்பது அதிகரித்துவந்துள்ளது. ஆண்டு தோறும் இரண்டு மெகா திட்டங்கள் நடைபெற்றுவருகிறன்ன. அதன்மூலம் தலா 4 ஆயிரம் மொகாவாட் மின்சாரம் என 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகின்றன என கூறினார்.
விழாவில் தொடர்ந்து பேசிய மத்திய மின்துறை அமைச்சர் சுபோத்கான்சகாய் கூறுகையில் : மின்சார இழப்ப்பை பொறுத்தவரையில் கடந்த 2001-02-ல் 32.86 சதவீதத்தில் இருந்த 2003-04-ல் 34.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2008-09-ல் 28.44 சதவீதத்தில் இருந்து 2009-10-ல் 29 சதவீதமாக அதிகரித்துள்ளது. மாநில அளவில் ஜார்கண்ட் மாநிலம் 51 சதவீதம், மத்தியபிரதேசம் 45 சதவீதம், பீகார் மாநிலம் 40 சதவீத அளவிற்கு மின்சார இழப்பு ஏற்படுகிறது.
தனிமனிதன் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 704 யூனிட் முதல் 712 யூனிட்வரை தேவைப்படுகிறது. இதில் 29 சதவீதம் இழப்பு உட்பட ஆகும். ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் மேலும் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக