லஞ்சத்தை ஒழிக்க கடுமையான சட்டங்கள் இருக்கின்ற போதிலும் லஞ்சம் வாங்குவோரின் மனமாற்றமே லஞ்சத்தை ஒழிக்கும். கல்வி அறிவை நாம் வளர்த்துக் கொண்டால் லஞ்சத்திலிருந்து விடுபடலாம்
இன்றைய சூழலில் நாட்டில் லஞ்சம் ஒழிய பெரிதும் தேவைப்படுவது சட்டமா? அல்லது மனமாற்றமா? நாட்டில் பணம் கொடுத்தால் வேலைமுடிந்துவிடும் என்ற மனநிலையும், எந்த சட்டமாக இருந்தாலும் தப்பிவிடலாம் என்ற போக்கும் இருக்கிறது. கும்பகோணம் பள்ளி தீவிபத்து, போலி மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை மீடியாக்கள் படம்பிடித்துக் காட்டின.இந்தியன், முதல்வன், அந்நியன், ரமணா போன்ற படங்கள் லஞ்ச ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. ஆனாலும் இந்தப் படங்களை பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்கும் சூழல்தான் இருந்தது. லஞ்சம் வாங்குபவர்கள் பின்னால் ஏற்படும் விளைவுகளை அறிந்து மனநிலை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டால் பணிபுரிபவர்கள் லஞ்சம் வாங்குவதைத் தவிர்க்க முடியும். மேலும் கல்வி அறிவும், லஞ்சம் பற்றிய விழிப்புணர்வும், மனமாற்றமும் இருந்தால் லஞ்ச ஊழலில் இருந்து நாட்டை மீட்க முடியும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக