மக்கள் இப்போதெல்லாம் கண்டதை நினைத்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தினை விட்டுவிட்டார்கள். வயது நாற்பதைக் கடந்த உடனேயே இந்த காயில் என்ன சத்து? அதனை வறுத்துச் சாப்பிடலாமா? இது பழமானால் சாப்பிட நல்லதா? அல்லது காயாக எடுத்துக் கொள்ளலாமா? என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் சரியான முழுமையான பதில்தான் யாருக்கும் கிடைக்கவில்லை. இணையத்தில் இது குறித்த தளம் ஒன்றை அண்மையில் பார்க்க நேர்ந்தது.
Still Tasty என்ற இந்த தளம் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது. இந்த தளத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு Keep It or Toss it என பெயரிடப் பட்டுள்ளது. இங்கு உணவுப் பொருள் ஒன்றை வைத்துப் பயன்படுத்தலாமா அல்லது தூக்கி எறிந்துவிடலாமா என்று பதில் அளிக்கப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், முட்டை, பால் உணவு, இறைச்சி, மீன், ஷெல் மீன், கொட்டை உணவுகள், தானிய உணவு, எண்ணெய், மூலிகைகள், தின்பண்டங்கள், இனிப்பு வகைகள், ரொட்டி என அனைத்து வகை உணவுப் பொருட்களையும் அடுக்கி விட்டு இறுதியாக குடிக்கும் திரவ உணவு வகைகளையும் சேர்த்து கருத்து தெரிவிக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட ஓர் உணவுப் பொருள் குறித்து அறிய வேண்டும் என்றால் இதில் உள்ள சர்ச் பாக்ஸில் அதனை டைப் செய்து என்டர் தட்டினால் அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன.
அடுத்ததாக உள்ள பிரிவு Your Question Is Answered என்பது. இதில் உணவுப் பாதுகாப்பு குறித்த பல கேள்விகள் தரப்பட்டு அதற்கான பதில்களும் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மீன் இறைச்சியை ப்ரீசரில் வைக்கலாமா? எந்த அளவு வெப்பத்தில் உணவுப் பொருள் ஒன்றை வறுத்து எடுக்கலாம்? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உங்கள் கேள்வி இங்குள்ள பட்டியலில் அடங்கவில்லை என்றால் உடனே உங்கள் கேள்வியை டைப் செய்து உங்கள் இமெயில் முகவரியையும் கொடுத்தால் உங்களுக்குப் பதில் அனுப்பப்படும்.
அடுத்த பிரிவு Shelf Talk எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உணவுப் பொருட்கள் குறித்த பல கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொருவரும் படித்தே ஆக வேண்டிய கட்டுரை என நான் கருதுவது Expiration Dates என்ற தலைப்பில் உள்ள கட்டுரையாகும். ஓர் உணவுப் பொருளின் பாதுகாப்பான நாள் தாண்டிவிட்டால் என்ன செய்வது? பரவாயில்லையா? அல்லது அதற்குப் பிறகும் சில நாட்கள் வைத்துக் கொள்ளலாமா? இந்த கேள்விகளுக்கு மட்டுமின்றி, இன்னும் சிலவற்றையும் தீவிரமாகக் கருதி ஆய்வு செய்து பல தகவல்களைத் தருகிறது. உணவுப் பொருளைப் பொறுத்த வகையில் பல்வேறு தேதிகளைப் பட்டியலிடுகிறது.
பழங்களை சுவையாக சாப்பிட வேண்டுமாயின் எத்தனை நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு பழத்திற்கும் கெடு நாட்களைத் தருகிறது. நம்மில் பலருக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள் குறித்தும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பது குறித்தும் பல சந்தேகங்கள் வரும். ஏறத்தாழ அவை அனைத்திற்கும் பதில் தரும் வகையில் உள்ள இந்த தளத்தினை அனைவரும் அடிக்கடி பார்த்து பயன்படுத்தி வருவது நம் வாழ்நாளின் அளவைக் கூட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக