அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

தட்பவெட்ப நிலையால் ரயில் பாதையில் விரிசல் ஏற்படுவதைவிட, ரயில் பெட்டி கழிவறைகளில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவுகளால், தண்டவாளங்கள் துருப்பிடித்து விரிசல் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க, ரயில் பெட்டிகளில் கழிவறைகளின் கீழ் பகுதிகள் மாற்றியமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஸ் போக்குவரத்தைவிட, ரயில் போக்குவரத்து பாதுகாப்பானது என்பதால், அதிகமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயில் பாதையில் அடிக்கடி நடக்கும் விரிசல்களாலும், ரயில்கள் திடீரென தடம் புரண்டு விடுவதாலும் ரயிலில் பயணம் செய்ய பயணிகள் பயப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் பாதை பராமரிப்பு, பயணிகள் ரயில் போக்குவரத்து, சரக்கு ரயில் போக்குவரத்து, பயணிகள் பெட்டிகள் மற்றும் சரக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு ஆகியன தனித் தனிப்பிரிவுகளாக உள்ளன. இதில், ஏதாவது ஒரு பிரிவில் தவறு ஏற்பட்டாலும், அதற்கு மற்ற பிரிவும் காரணம் என்று குறை கூறப்படும் நிலையும் உள்ளது. இதில், சரக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு, சுமை அளவு மற்றும் தண்டவாள விரிசல் குறித்து அவ்வப்போது ரயில்வேயிக்குள்ளேயே பிரச்னைகள் நடப்பதும் பிறகு சரி செய்யப்படும் நிலையும் உள்ளது. ரயில் போக்குவரத்து குறைவாக உள்ள பாதைகளில் "52 கேஜி' தண்டவாளங்களும், அதிகம் போக்குவரத்து உள்ள பாதைகளில் "60 கேஜி' தண்டவாளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையேயும், சென்னை சென்ட்ரல்-கூடூர் மற்றும் சென்னை சென்ட்ரல்-சேலம் இடையே "60 கேஜி' தண்டவாளமும், தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே "52 கேஜி' தண்டவாளமும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2009-2010ம் ஆண்டில் தெற்கு ரயில்வே பாதைகளில், 388 இடங்களில் தண்டவாள விரிசல் மற்றும் வெல்டிங் விரிசல் ஏற்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 198 இடங்களில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் மற்றும் வெல்டிங் இணைப்பில் விரிசல் ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே ரயில் பாதை பாதுகாப்பு தலைமை அதிகாரி டேனி தாமஸ் கூறியதாவது: தென் மாநிலங்களில் தட்ப வெட்ப நிலையால் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவது குறைவாகத்தான் உள்ளது. குளிர்காலத்தில் தண்டவாளம் சுருங்குவதால் விரிசல்கள் ஏற்படுவதாலும், பாதையில் மழை நீர் தேங்குவதாலும் தண்டவாளங்களில் பாதிப்பு ஏற்படுவதும் உண்டு. ரயில் பாதைகளை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள பாதைகளில் விரிசல்களை கண்காணிக்க மாதம் ஒரு முறையும், போக்குவரத்து குறைவான பாதைகளில் மாதம் இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. "52 கேஜ்' ரயில் தண்டவாளம் பயன்படுத்தப்பட்ட பாதையில் 52.5 கோடி டன் போக்குவரத்தும், "60 கேஜ்' தண்டவாளம் பயன்படுத்தப்பட்ட பாதையில் 80 கோடி டன் வரையும் கடந்து செல்லும் வரையிலும் தண்டவாளத்தின் உறுதித்தன்மை நிலைத்திருக்கும். தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் பாதைகளில் இந்த அளவை எட்டுவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்றாலும், ரயில் கழிவறைகளிலிருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள் மற்றும் தண்ணீர் தண்டவாளப்பகுதிகளில் கொட்டுவதால், தண்டவாளத்தின் உட்புறப்பகுதி துருப்பிடித்து வீணாகி பலம் இழக்கிறது. இதனாலும் தண்டவாள விரிசல் ஏற்படுகிறது.

விழுப்புரம்-திருச்சி-மதுரை-விருதுநகர் பகுதிகளில் ரயில் பாதையில் இதுபோன்ற இடர்பாடு அதிகம் உள்ளது. இதனால், விழுப்புரம்-திருச்சி இடையே 162 கி.மீ., தூரம் பாதையில், இதுவரை 52 கி.மீ., தூரம் தண்டவாளம் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. மற்ற பகுதிகளில் தண்டவாளம் வரும் ஆண்டு மாற்றியமைக்கப்படும். திண்டுக்கல்-மதுரை இடையே 45 கி.மீ., தூரம் தண்டவாளம் கடந்த ஆண்டு புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மதுரை-விருதுநகர்-மணியாச்சி இடையே பல பகுதிகளில் தண்டவாளம் துருப்பிடித்ததால் பாதிப்பு இருந்தது. தண்டவாளம் மாற்றப்படாவிட்டால் பாதிப்பு ஏற்படும் என்ற இடங்களை தேர்வு செய்து 20 கி.மீ., தூரம் புதிய தண்டவாளம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 52 கி.மீ., தூரம் தண்டவாளம் மாற்றப்பட உள்ளது. வரும் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், மதுரை-விருதுநகர் இடையே மேலும் 60 கி.மீ., தூரம் புதிய தண்டவாளம் பொருத்துவதற்கு நிதி வழங்கக் கோரி அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

ரயில்வே லெவல் கிராசிங் பகுதிகளில் இடர்பாடு ஏற்பட்டுவிடாமலிருக்க உயர்ரக "காஸ்ட் மாங்கனீஸ் ஸ்டீல்' பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நீண்ட காலம் உழைக்கக் கூடியது. கழிவறை கழிவுகளால் தண்டவாளத்தில் துருப்பிடிக்காமல் தடுக்க, தெற்கு ரயில்வேயில் 60 சதவீதம் பெட்டிகளில் கழிவறைகளின் கீழ் பகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் கீழே கொட்டாத வகையில் நவீன கழிப்பறை பெட்டிகள் கேட்டும், ரயில்வே அமைச்சகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டேனி தாமஸ் கூறினார்.

ரயில் போக்குவரத்தையொட்டி சோதனை செய்ய ஏற்பாடு: ரயில் போக்குவரத்து எண்ணிக்கையையொட்டி, ரயில் பாதைகள், "ஏ-ரூட், "பி- ரூட் மற்றும் "டி-ரூட்' என கணக்கிடப்பட்டு பராமரிப்பு பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சென்ட்ரல்-கூடுர் "ஏ-ரூட்', எழும்பூர்-திண்டுக்கல் "பி-ரூட்', திண்டுக்கல்-திருவனந்தபுரம் "டி- ரூட்' பிரிவில் வருகிறது. இதில் "ஏ' ரூட் பிரிவை கண்காணிக்க மாதம் ஒரு முறை "டிராக் ரிக்கார்டிங் கார்' மூலம் பாதை சோதனை செய்யப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தின் மேற்பகுதியில் சிறிய சிதறல்கள் மற்றும் பாதிப்புகளை சரி செய்ய கிரைண்டிங் செய் வதற்கு இந்தியாவில் ரயில்வேக்கு முதல் முறையாக இரண்டு கிரைண்டிங் மிஷின் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதில் ஒன்று, தென் மாநில ரயில் பாதைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக