அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 25 ஆகஸ்ட், 2012

கூடலூர் வனக்கோட்டத்தில் 11 ஆயிரத்து 200 ஏக்கர் சேர்ப்பு : தனி வனச்சரகமாகிறது ஓவேலி வனப்பகுதி

கூடலூர் : கூடலூர் வனக்கோட்டத்துக்கு கூடுதலாக 11 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, ஓவேலி பகுதியை தனி வனச் சரகமாக மாற்றும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டம் என்பது, கூடலூர், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு மற்றும் ஜீன்பூல் தாவர மையம் ஆகிய வனச் சரகங்களை கொண்டுள்ளது. இங்குள்ள வன நிலங்கள் பல வகை பிரிவுகளில் அழைக்கப்படுகிறது. இதில் பிரச்னை தீர்க்கப்படாத செக்ஷன்-17 நிலங்கள் அதிகளவில் உள்ளன.கூடலூரில் நிலம்பூர் கோவிலகத்தின் வசம் 80 ஆயிரத்து 88 ஏக்கர் ஜென்மம் நிலங்கள் இருந்தன. 1969ம் ஆண்டு மாநில அரசு "கூடலூர் ஜென்மம் ஒழிப்பு' சட்டத்தை கொண்டு வந்து, 1974ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி நிலம்பூர் ஜென்மம் நிலங்களை கையகப்படுத்தியது.இதில், 9,272 ஏக்கருக்கு பட்டாவும், 5,886 ஏக்கர் அரசு "அனாதினம்' வகையிலும், 12 ஆயிரத்து 928 ஏக்கரை வனமாகவும் மாற்றியது. குத்தகைதாரர் வசமிருந்த மீதமுள்ள 52 ஆயிரம் ஏக்கர் நிலத்தை செக்ஷன்-17 நிலமாக அறிவித்தது. இந்த நிலம் தொடர்பான பிரச்னை நிலுவையில் உள்ளது.செக்ஷன்-17 நிலத்திலுள்ள சிறு விவசாயிகள் பாதிக்காத வகையில்,நிலப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. இதனிடையே மத்திய அதிகார குழுவினர் பரிந்துரையின் படி, வருவாய் துறையினர் செக்ஷன்-17 நிலத்தில் வனப்பகுதி நிலங்களை கள ஆய்வு செய்து, ஓவேலி பகுதியில் 11 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்களை பிரிவு-53 ஆக மாற்றி, கூடலூர் வனக் கோட்டத்தில் ஒப்படைத்துள்ளனர்.வன கோட்டத்துக்கு கூடுதல் வனப் பகுதி ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, கூடலூர் வனச் சரகத்தை இரண்டாக பிரித்து, ஓவேலியை தனி வனச் சரகமாக மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஓவேலி பகுதியிலுள்ள சூண்டி, பார்வுட், எல்லமலை, பாரம் ஆகிய நான்கு காவல் பகுதிகளை ஓவேலி வனச் சரகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில், எல்லமலை, பாரம் காவல் பகுதிகளை இரண்டாக பிரித்து 6 காவல் பகுதிகளை கொண்டு வரைப்படம் உருவாக்கி, வனச் சரகர், வனவர், வனக்காப்பாளர்கள், வன காவலர்கள் பணியிடங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் விபரங்களை கோவை மண்டல வன பாதுகாப்பாளருக்கு அனுப்பியுள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. "கூடலூர் வன கோட்டத்துக்கு ஓவேலி பகுதியில் 11 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து வன பாதுகாப்பை பலப்படுத்தவே "ஓவேலி வனச் சரகம்' அமைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்,' என வனத்துறையினர் தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுத்து வருவதுடன், வன காவல் பகுதியை பலப்படுத்த துல்லியமாக நில அளவை செய்வதற்கான நடவடிக்கையும் வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக