இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் குறிப்பிடத் தகுந்தவை
சட்டத்தின் முன்னே அனைவரும் சமமாக நடத்தப்படுவது. (Article 14-16)
தீண்டாமை ஒழிப்பு (Article 17)
ஒவ்வொருவருக்கும் தனி மனித சுதந்திரங்கள் (Article 19)-
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான (ஆயுதங்கள் இல்லாத) கூட்டம் நடத்தும் உரிமை. சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம், நாட்டின் எப்பகுதியிலும் வாழும் உரிமை, எந்த தொழிலிலும் ஈடுபட உரிமை.
மேலும் மக்களுக்கு சட்டங்களிலிருந்து வழங்கப் படும் பாதுகாப்புகள் (Article 20)
முன்தேதியிட்ட (கிரிமினல்) சட்டங்களால் அளிக்கப்படும் தண்டனைகளில் இருந்து பாதுகாப்பு. ஒரே குற்றத்திற்கு இருமுறை தண்டனையிலிருந்து பாதுகாப்பு குற்றம் சாட்டப்பட்டவரே அவருக்கு எதிரான சாட்சியம் அளிக்க வலியுறுத்தப் படுவதிலிருந்து பாதுகாப்பு
மக்களுக்கு அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் உரிமைகள் (Article 21)
எந்த ஒருவரையும் சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்க முடியும்.
முன்னெச்செரிக்கை கைதுகளில் இருந்து பாதுகாப்பு வழங்கும் உரிமைகள் (Article 22)
ஒருவர் கைது செய்யப் படும் போது கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப் பட வேண்டும். கைது செய்யப் பட்ட நபர் சட்ட ஆலோசனை பெற தடை செய்யக் கூடாது. கைது செய்யப் பட்ட நபர் 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தப்பட வேண்டும்.
இவை மட்டுமல்ல, சுரண்டப் படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உரிமை (Article 23)
சிறுவர்கள் ஆபத்தான வேலைகள் செய்வதை தடுக்கும் உரிமை (Article 24),
மத மற்றும் மொழி உரிமை மற்றும் சிறுபான்மையருக்கான சில உரிமைகள் (Article 25-30)
அனைத்தும் அரசியல் சாசனத்தால் வழங்கப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் விட மிக முக்கியமான உரிமை, மேலே குறிப்பிட்டுள்ள உரிமைகளை நடைமுறைப் படுத்த உச்ச/உயர் நீதிமன்றத்தை அணுகும் உரிமை (Article 32)
Article 19 இல் உள்ள உரிமைகள் அனைத்தும் எமெர்ஜென்சி காலங்களில் செயல் படாமல் போகும். சாதாரண காலங்களில், பொது நலன் மற்றும் அமைதி காக்கவும், நாட்டின் நலன், ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் காக்கவும், வெளிநாடுகளுடன் உள்ள உறவினை காக்கவும் மேலே சொன்ன உரிமைகள் மீது சில நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு.
அதே சமயம், கட்டுப்பாடுகள் நியாயமானவைதானா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் இடம் பெறாத சில மனித அடிப்படை உரிமைகளை கூட இனம் கண்டு (இந்தியா உலக மனித உரிமைகளின் சாசனத்தில் கையொப்பம் இட்டதின் அடிப்படையில்) அவற்றை நடைமுறை படுத்திய (மற்றும்) பேணிக் காத்த பெருமை உச்ச நீதி மன்றத்திற்கு உண்டு.
எனவே நண்பர்களே, குறிக்கோளும் அதை அடைவதற்கான பாதைகளும் நியாயமானவையாக இருக்கும் பட்சத்தில் நமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்து கொள்ள இந்திய அரசியல் அமைப்பு சாசனமும் நீதிமன்றங்களும் எப்போதும் துணை இருக்கும்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
பதிவாக்கித் தந்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...
பதிலளிநீக்கு