ஊட்டி, ஆக. 20:
உரிய காலத்தில், தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் பஸ்சை இயக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் துறை ரீதியான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஊட்டி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பீட்டர் ஸ்டீபன் தலைமை வகித்தார்.
கூட லூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசுகையில்,
அமைப்பின் கோரிக்கையை ஏற்று கூடலூர் & ஊட்டி இடையிலான வழித்தட பேருந்துகள் சிலவற்றை சாதாரண பேருந்துகளாக மாற்றி கட்டணத்தை குறைத்ததும்,
ஊட்டி & கைகாட்டி வழித்தடத்தில் சில பேருந்துகளில் ரூ.1 அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை குறைத்து அனைத்து பேருந்திற்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயித்ததும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பல பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமல் உள்ளதால் மழை காலங்களில் பயணிக்கும் பயணி கள் சிரமமடைந்து வருகின்றனர். கிளை மேலாளர் உரிய ஆய்வு செய்து கண்ணாடி இல்லாத பஸ்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும்.
மழை காலங்களில் பஸ்கள் ஒழுகாமல் இருக்க அமைப்பின் வலியுறுத்தலுக்கு பின் தார் சீட்டுகள் ஒட்டப்பட்டா லும், கூரையின் பக்கவாட்டு பகுதிகளில் இருந்து மழை நீர் ஒழுகும் நிலை உள்ளது. அவற்றை சரி செய்ய வேண் டும்.
பல பஸ்களில் முதலு தவி பெட்டிகள் உரிய முறைப்படி இல்லாமல் உள்ளது.
மேலும் பஸ்களில் போக்குவரத்து கிளை அலுவலக தொலைபேசி எண்ணை எழுதி வைக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பஸ்கள் குறித்து தகவல்கள் அறிய தொலைபேசி இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கோட்ட மேலாளர் சண்முக வேலாயுதம் பேசியதாவது,
அனைத்து பஸ்களும் நுகர்வோர்ள் நலன் கருதி இயக்கப்படுகிறது.
உரிய காலங்களில் பஸ்கள் இயக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
விரைவில் புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கண்ணாடி இல்லாத பஸ்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு வருகிறது.
ஒழுகும் பஸ்களில் கூரையில் தார் சீட்டுகள் ஒட்டப்பட்டு வருகின்றது.
கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகாரின் பேரில் கூடலூர் கிளையில் உள்ள கழிப்பிட டெண்டர் ரத்து செய்யபட்டுள்ளது. புதிய டெண்டர் 22ம் தேதி விடப்படுகிறது.
பஸ்களில் முதலுதவி பெட்டிகள் உரிய முறையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பஸ்கள் இயக்கப்படும் போது விரைவு பஸ்கள் அனைத்தும் விரைவாக இயக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் ஊட்டி கோட்டத்திற்குட்பட்ட கிளை மேலாளர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் சார்பில் ராஜன், பசவராஜ், ஊட்டி வட்டார பொறுப்பாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பொது மேலாளரின் உதவியாளர் செய்திருந்தார்.
அனைத்து அடிப்படை வசதிகளுடன்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக