ஊட்டி:ஊட்டி ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி மையத்தில், அரசு உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பயிற்சி நிலைய முதலவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனிதவள பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்
குடிமக்கள் நுகர்வோர் மன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம்,
நுகர்வோர் ஏமாற்றங்களை தவிர்க்க விழிப்புணர்வு அவசியமாவதால், விளம்பரங்களை தவிர்த்து தரமான பொருட்களை மட்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும்
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், "பால் தற்@பாது பல்வேறு தனியார் நிறுவனங்களின் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் ரசாயன பாலாக உள்ளது. எனவே, இவற்றை தவிர்க்க தரமான பாலை மட்டும் பயன்படுத்த வேண்டும்; ,' என கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆசிரியர் பயிற்சி மைய மாணவ, மாணவியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக