ஊட்டி, ஆக. 24:
நுகர்வோர் விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே நுகர்வோர் கல்வியை பரப்பும் வண்ணம் கடந்த 2005ம் ஆண்டு முதல் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இதனை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் என்ற பெயரில் அனைத்து பள்ளிகளிலும் துவங்கி செயல்படுத்திட அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடையே நுகர் வோர் கல்வியை பரப்பிடும் வண்ணம் கடந்த 2005ம் ஆண்டு முதல் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
தற்போது இதனை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் என்ற பெயரில் அனைத்து பள்ளிகளிலும் துவங்கி செயல்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக கடந்த 13ம் தேதி அன்று முதன்மை கல்வி அலுவலர் தலைமை யில் அனைத்து பள்ளி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இன்னும் சில பள்ளிகள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்க எந்தவித விண்ணப்பமும் வழங்காமல் உள்ளனர்.
இதுவரை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்காத பள்ளிகள் விரைவில் துவங்க வேண்டும். பல பள்ளிகளில் துவங்கப்பட்டும் பல பள்ளிகள் முறையான கூட்டங்கள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தாமல் உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்த வேண்டும்.
குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்துதல், கூட்டங்கள் நடத்துதல் போன்ற ஆலோசனைகளை பெற 9489860250 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
நல்லதொரு தகவலை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்கு