அன்புடன் வரவேற்கின்றோம்

you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 29 ஜூன், 2015

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சிறப்பு மோசடி

கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளதுஇதன் படி பல தனியார் பள்ளிகள் முறையாக மாணவர்களை சேர்க்கவில்லைஇதுகுறித்து முதன்மை கல்வி அலுவலக தகவலின்படி நுகர்வோர் அமைப்புகள் இதனை கண்காணிக்க கேட்டிருந்தனர்இதன்படி கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மைய தலைவர் சிவசுப்பிரமணியம், செயலாளர் கனேசன், துணை தலைவர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் தனிஸ்லாஸ் (பந்தலூர்), சத்தியசீலன் (நெலாக்கோட்டை), யோகேஸ்வரன், சிவநேசன் (கூடலூர்), மாரிமுத்து (உதகை), வீரபாண்டியன் (குன்னூர்உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்க்கொண்டனர்இதில் பல முறைகேடுகளில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டுள்ளது ​தெரிய வந்துள்ளது.
1. 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் பள்ளிகளில் ஒருசில பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைக்கு இலவச கல்விக்கான சீட்டு தருகின்றோம் ஆனால் கல்வி கட்டணத்தினை தற்போது செலுத்தி விடுங்கள் அரசு தங்கள் குழந்தைக்கான கல்வி கட்டணம் தரும்போது திரும்ப தருகின்றோம் என்று கூறி சேர்த்துள்ளனர்.
ஆனால் சட்டப்படி இலவச ஒதுக்கீட்டில் சேர்க்கும் மாணவர்களிடம் பெற்றோர்களிடம் எந்தவித கட்டணமும் பெற கூடாது என்று தெளிவாக கூறியுள்ளது குறிப்பிடதக்கது,
2. சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் குடியிருப்போருக்கு மட்டுமே இலவச சீட்டுகள் வழங்க முடியும் அதனால் இந்த எல்லைக்குள் 10 சதவீதம் முதல் 15 சதவீதத்தினரை மட்டும் சேர்த்துள்ளோம்அவ்வளவு பேர் தான் உள்ளனர் என கூறி மற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கின்றனர்.
ஆனால் மேற்படி சட்டத்தில் 25 சதவீதம் பள்ளியை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரம் வரை எடுக்கலாம் என கூறியுள்ளதுஎனினும் பள்ளிக்கு அருகில் உள்ளவர்கள் தகுதியுள்ளவர்கள் இல்லை எனில் விண்ணப்பம் பெற்று மற்ற பகுதியில் உள்ளவர்களையும் சேர்க்கலாம் எனவும் கண்டிப்பாக 25 சதவீதம் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு இலவச சேர்க்கை மேற்க்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது,
3. சில பள்ளிகளில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படித்த தகுதியற்ற ஆசிரியர்களை பணிக்கு நியமித்துள்ளனர்சட்டப்படி மாணவர்களை கல்வி கற்றுக்கொடுக்க அரசால் அங்கிகரிக்கப்பட்ட அரசால் அளிக்கப்படும் கல்வியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களை தான் நியமிக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடதக்கது,
4. பல பள்ளிகள் கடந்த ஆண்டு நாங்கள் 15 சதவீதம் சேர்த்துள்ளோம். இந்தாண்டு 10 சதவீதம் சேர்த்தால் போதுமானதுஎன கூறி கூடுதல் மாணவர்களை சேர்ப்பதில்லை எனவும் ​தெரியவருகின்றதுமேலும் அவர்கள் நடத்தும் அறக்கட்டளை மூலமாக படிக்க வைப்பதாக கூறி அரசின் இலவச திட்டத்திற்கும் அந்த மாணவர்களை கணக்கு காட்டுவதும் தெரியவருகின்றதுசில பள்ளிகள் தங்கள் பள்ளி வாகனத்தில் குழந்தைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்துவதாகவும், இலவச கல்வியில் சேரும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் பராமரிப்பாளர் (ஆயா) ஆகியோர் கட்டணம் தனியாக வசூலிப்பதாகவும் பெற்றோர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது,

மேலும் ஒரு சில பள்ளிகள் கீழ் தளங்களை கடைகள் நடத்த வாடகைக்கு விட்டுவிட்டு மாடிகளில் பாடங்களை நடத்த வகுப்புகளை அமைத்துள்ளனர்கும்பகோணம் தீவிபத்திற்கு பின் கல்வி துறை சார்பில் வெளியிட்ட ஆணையில் சிறு குழந்தைகள் தரை மட்ட வகுப்புகளில் தான் வகுப்பு நடத்த வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடதக்கது,
மேற்படி சம்பவங்கள் அடிப்படையில் விரைவில் அறிக்கை தயாரித்து கல்விதுறை அதிகாரிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் அறிக்கை அனுப்பபடும். சம்பந்த பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இது போன்ற குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும்.