அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 15 ஜூன், 2015

உணவுகள் அனைத்தையும் பரிசோதித்து

புதுடில்லி:சந்தைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகள் அனைத்தையும் பரிசோதித்து, அவற்றின் தரத்தை மதிப்பிடும்படி மாநில உணவு ஆணையர்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 



'நெஸ்லே' நிறுவனத்தின், 'மேகி' நுாடுல்ஸ் உணவு பொருளில், காரீயம் மற்றும் ரசாயன உப்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிசோதனையிலும் இது உறுதியானது.
சாப்பிட லாயக்கற்றவை இதையடுத்து, 'மேகி நுாடுல்ஸ் உட்பட, அந்த நிறுவனத்தின் ஒன்பது வகையான உணவு பொருட்கள் சாப்பிட லாயக்கற்றவை' எனக்கூறி, அவற்றை விற்பனை செய்ய, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாக தடை விதித்தது. 
இந்நிலையில், உணவு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
மாவு, குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டங் கள் உட்பட நுாற்றுக்கணக்கான உணவுப் பொருட்கள், பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. முறையான பதி வெண், அனுமதியின்றி இந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் தரத் தை அறிய 
வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, அனைத்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையர்கள் கூட்டம், இந்த மாத துவக்கத்தில் நடந்தது. இதில், சில அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. 

விரிவான அறிக்கை:

இந்த கூட்டத்தில், சந்தைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் மாதிரிகளையும் தர ஆய்வு செய்யும்படி, மாநில உணவு ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தரமற்ற உணவுப் பொருட்கள் தொடர்பாகஎடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 500 உணவுப் பொருட்களின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பரிசோதனை செய்வது தொடர்பாக, அனைத்து மாநில உணவு ஆணையர்களுக்கும் கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசு மசாலா பொடி, உப்பு, எண்ணெய், சிப்ஸ் வகை கள், குளிர்பானங்கள் உட்பட, 20க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதிக்கும் படி, தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மது, பான் மசாலா விற்பனை ஏன்? :

மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியுள்ளதாவது:உடல்நலத்துக்கு தீங்கு 
விளைவிக்கும் மது, பான் மசாலா போன்றவற்றின் விற்பனையையும் திரும்ப பெற வேண்டும்என, சிலர் கூறுகின்றனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரம் (விற்பனையை திரும்ப பெறுதல்) குறித்த விதிமுறைகளில் இதுகுறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

'மது குடிப்பது, பான் மசாலா உட்கொள்வது, உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும்' என்ற எச்சரிக்கை வாசகங்கள், அவற்றின் பாக்கெட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. எனவே, அவற்றின் விற்பனையை திரும்ப பெற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு, ஆணையம் தெரிவித்துள்ளது.

காம்ப்ளானுக்கும் வந்தது சிக்கல்:

'டிவி' சேனல்களில், 'நான் வளர்கிறேனே மம்மி' என்ற விளம்பரம் மிகவும் பிரபலம். காம்ப்ளான் எனப்படும், சத்து மாவு குறித்த விளம்பரம் தான் இது. 'இந்த சத்து மாவை பாலில் கலந்து குடித்தால், குழந்தைகள் உயரமாக வளர்வர்' என்கிறது, அந்த விளம்பரம். தற்போது, மேகி நுாடுல்சை தொடர்ந்து, இந்த காம்ப்ளானுக்கும் சிக்கல் வந்துள்ளது. 

உ.பி., மாநிலம், லக்னோவைச் சேர்ந்த தனிஷா ராய் சிங்கானியா என்பவர், நேற்று முன்தினம், தன் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, காம்ப்ளான் மாவை பாலில் கொட்டினார். அப்போது, காம்ப்ளானில் நுாற்றுக்கணக்கான சிறிய புழுக்கள் இறந்த நிலையில் கிடந்தன.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனிஷா, உ.பி., மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். 
இதையடுத்து, அந்த பாக்கெட்டில் இருந்த காம்ப்ளானை தர பரிசோதனைக்கு அனுப்ப, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக