அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 8 ஜூன், 2015

மேகி நுாடுல்ஸ்களை தடை

கர்நாடகாவில் விற்பனையாகும் மேகி நுாடுல்ஸ்களை தடை செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, குடும்பம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.

சுகாதார துறை அமைச்சர் காதர், பெங்களூருவில், நிருபர்களிடம் கூறியதாவது:மக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து, மேகி நுாடுல்ஸ் மட்டுமின்றி வேறு நிறுவனங்களின் நுாடுல்ஸ்களும், ஆய்வு மையத்துக்கு சாம்பிள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மறு உத்தரவு வரும் வரை, மாநிலத்தின் அனைத்து பகுதியிலும், மேகி நுாடுல்ஸ் விற்பனை தடை செய்யப்படுகிறது. இருக்கும் சரக்குகளையும் திரும்பப் பெற, நெஸ்லே நிறுவனத்துக்கு உத்தரவிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தை மட்டும் குறிவைத்து, இம்முடிவு எடுக்கப்படவில்லை.

கடிதம்:கர்நாடகாவிலிருந்து, சி.எப்.டி.ஆர்.., - மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்படும் சாம்பிள்களை ஆய்வு செய்யுமாறு, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், சுகாதார துறை அமைச்சர் நட்டாவுக்கு கடிதம் எழுதவுள்ளேன். இதுகுறித்து, இங்குள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் விவாதிக்கவுள்ளேன்.

மார்க்கெட்டுகளில், மேகி நுாடுல்ஸ் விற்பனையாகாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு, உணவுத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கிடைத்தவுடன், சி.எப்.டி.ஆர்..,யிடம் அனுப்பி, விளக்கம் கேட்கப்படும். எனர்ஜி பானத்தை ஆய்வு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

காத்திருப்பு:இதுவரை, 24 மேகி சாம்பிள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், ஒரு நிறுவனம், தங்கள் பொருள் சரியாக உள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. இதை வைத்து, அனைத்தும் சரியாக உள்ளது என்று கூற முடியாது. மற்ற நிறுவனங்களிலிருந்து வரும் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

மாநிலத்திலுள்ள, மேகி நுாடுல்சின் நான்கு யூனிட்களில், மேகி தயாரிப்பை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை அரசின் உத்தரவை மீறி மாநிலத்தில் மேகி விற்கப்பட்டால்,
அந்நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கோல்கட்டா மத்திய உணவு ஆய்வு மையத்தில் கர்நாடகாகடந்த, 2014 டிச., 2ம் தேதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பின் படி, கோல்கட்டா மத்திய உணவு ஆய்வு மையத்தின் கீழ், கர்நாடகா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வருகிறது.

அது மட்டுமின்றி பீகார், கோவா, டில்லி, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், யூனியன் பிரதேசங்களான தத்ரா மற்றும் நகர் அவேலி, தாமன் மற்றும் டையு, புதுச்சேரி ஆகியவையும் வருவதாக, -மைசூரு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சிநிறுவனம், அறிக்கையில் கூறியுள்ளது.


புனே:மகாராஷ்டிரா, மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில அரசுகளும், 'மேகி' நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்துள்ளன.

'நெஸ்லே' தயாரிப்பான மேகி நுாடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயம், ரசாயன உப்பு ஆகியவை அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகம் உட்பட, ஆறு மாநிலங்களில் இந்த நுாடுல்ஸ் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய உணவு மற்றும் தர ஆணையமும், நாடு முழுவதும் இந்த நுாடுல்சை விற்பனை செய்ய, நேற்று முன்தினம் தடை விதித்தது.

'மேகி நுாடுல்ஸ் பாதுகாப்பானதே; அதை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் வராது' என, 'நெஸ்லே' நிறுவனம் உறுதி அளித்தாலும், உணவு மற்றும் தர ஆணையம் அதை ஏற்கவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிரா, மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில அரசுகளும், மேகி நுாடுல்சின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பின. இதில், மேகி நுாடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காரீயம், ரசாயன உப்பு ஆகியவை அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மூன்று மாநிலங்களிலும் மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய 'மேகி'யில் தான் ஆபத்து:சர்ச்சைக்குரிய, பாதுகாப்பற்ற இந்த மசாலா நுாடுல்ஸ், இந்தியாவிலுள்ள மேகி உற்பத்தி நிறுவனத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களுக்காகவே, இவை இந்தியாவில்இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

இந்தியாவில் மேகிக்கு எழுந்துள்ள தடையால் பீதிக்குள்ளான பிரிட்டன் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குள்ள மேகி நுாடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்துள்ளது.

அதில், இந்தியாவிலிருந்து இறக்குமதியான மேகி நுாடுல்ஸ்களில் மட்டுமே பிரச்னையிருப்பது தெரிய வந்தது. பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் பிற மேகி உணவு வகைகளில், எந்தப் பிரச்னையும் இல்லையென்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக