புதுடில்லி:தொழிலாளர் நலச் சட்டங்களை எளிமையாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, இது தொடர்பான, 44 சட்டங்களை, நான்கு எளிமையான சட்டத் தொகுப்புகளாக குறைக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
நம் நாட்டில் தற்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் பழமையானவை. 'இந்த சட்டங் கள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை' என, பரவலாக கூறப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களுக்கும் இந்த சட்டங்கள், போதிய பயன் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அதிரடி நடவடிக்கை:இந்த சட்டங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, வேலைவாய்ப்புகளை குறைத்து, பொருளாதார வளர்ச்சியையும் குறைக்கும் வகையில் உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மத்தியில் பா.ஜ., அரசு பதவியேற்றதும், இந்த விஷயத்தில் அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு, தொழிலாளர் நலச் சட்டங்களை, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகை யில் எளிமைப்படுத்துவதற்கான நடைமுறைகள் துவங்கின.
சட்டத் தொகுப்பு:இந்நிலையில், தொழில் அமைப்புகள் சார்பில் டில்லி யில் நடந்த கருத்தரங்கில்,
மத்திய தொழிலாளர் நலத் துறை செயலர் சங்கர் அகர்வால் பேசியதாவது:தற்போது நம் நாட்டில், 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் பல, இந்த காலத்துக்கு ஏற்றதல்ல. இதில் சீர்திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இந்த, 44 சட்டங்களில் உள்ள முக்கியமான விஷயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள தேவையில்லாத, வழக்கொழிந்து போன விஷயங் கள் நீக்கப்பட்டு, நான்கு எளிமையான சட்டத் தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நியாயமான சம்பளம்:தொழில் தொடர்பு, கூலி, சமுதாய பாதுகாப்பு, பாதுகாப்பு ஆகிய நான்கு எளிமையான சட்டத் தொகுப்புகள் அடங்கியதாக தொழிலாளர் நலச் சட்டங்கள் மாற்றப்படும். இவற்றில், கூலி, தொழில் தொடர்பு ஆகியவை தொடர்பான சட்டத் தொகுப்புகள் தயாராகி விட்டன. மற்றவையும் விரைவில் தயாராகி விடும்.
இதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு தொழிற்சாலை அல்லது வியாபார தலத்தில் பணிபுரிந்தாலே, அந்த தொழிற்சாலை வருங்கால வைப்பு நிதி வரம்பிற்குள் வந்து விடும். இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின்படி, அனைத்து தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பளம் கிடைக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமானால், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அதற்கு தேவையான விஷயங்களும் இந்த சீர்திருத்தத்தில் இடம் பெறும்.
பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு, வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாத தும் முக்கிய காரணம். நிறுவனங்கள், தொழிலாளர்கள் ஆகிய இரண்டு தரப்புக்கும் பயனுள்ள வகையில் சீர்திருத்தம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்தாண்டு துவங்கியது
* தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தம் செய்யும் நடவடிக்கைகள், கடந்தாண்டு
அக்டோபரிலேயே துவங்கி விட்டன.
* இதன்படி, 'தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் கண்காணிப்பாளர், 72 மணி நேரத்துக்குள் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
* சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவது, இதன் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது.
* தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு பணி மாறினாலும், பழைய நிறுவனத்தில் பணியாற்றியபோது வழங்கப்பட்ட வருங்கால வைப்பு நிதியை மாற்றாமல் பயன்படுத்தலாம்.
* தொழிற்சாலைகள் துவங்குவதற்கான விதிமுறை கள், விண்ணப்பங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலமாகவே இந்த விண்ணப்பங்களை தொழிற்சாலைகள் சமர்ப்பிக்கலாம்.
தொழிலாளர், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுமே, தற்போது, அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக்கப்பட்டுள்ளன.
இணையதளம் மூலமாகவே இந்த விஷயங்களை அறிந்து கொள்ளவும், செயல்படுத்தவும் முடியும்.
சங்கர் அகர்வால், மத்திய தொழிலாளர் துறை செயலர்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக