நீலகிரி மாவட்ட சுகாதார துறை சார்பான நுகர்வோர் காலாண்டு கூட்டம்
நீலகிரி மாவட்ட சுகாதார துறை சார்பான நுகர்வோர் காலாண்டு கூட்டம் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைப்பெற்றது, உதகையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு இணை இயக்குனர் தாவூத் பாத்திமா தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் ரவி முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது உதகை சேட் மருத்துவமனையில் கர்ப்பினி தாய்மார்கள் கடைசி நேரத்தில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்துவதாகவும், ஆனால் அதற்கான அறிக்கை உடனடியாக தராமல் காத்திருக்க சொல்வதும் கர்ப்பினி பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். நோயாளிகளிடம் அறுவை சிகிச்சை குறித்து நேரடியாக பேசுவதால் கர்ப்பினி பெண்கள் நோயாளிகள் மேலும் பயத்தை அதிகா¢க்கின்றது. இவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேட் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு மருத்துவர் வார்டிற்கு வந்து சிகிச்சை அளிப்பதில்லை. நோயாளிகளுக்கு டிஸ்சார்ஜ் சம்மரி உடனடியாக வழங்காமல் மாலையில் வழங்குவதால் நோயாளிகள் வீடுகளுக்கு செல்வதில் சிரம்மம் ஏற்படுகின்றது. பந்தலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. மருத்துவர்கள் நோயாளிகளிடம் கடுமையாக பேசுகின்றனர். சர்க்கரை நோய் குறித்து இரத்த பரிசோதனை செய்தால் அறிக்கை உடனடியாக வழங்கப்படுவதில்லை. பந்தலூரில் எக்ஸ்ரே எடுக்கபடுவ தில்லை. கூடலூர் அரசு மருந்தகம் சீரமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் மக்கள் உரிய முறைப்படி நடத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இணை இயக்குனர் (பொ) தாவூத் பாத்திமா பேசும்போது நோயாளிகளிடம் யார் கடுமையாக நடந்துகெண்டாலும் எழுத்து மூல புகார் பெறப்படும் சமயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப் படும். நோயாளிகள் டிஸ்சார்ஜ் மாலையில் தான் செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனினும் மலைப் பகுதியை கருத்தில் கொண்டு விரைவில் நோயாளிகளுக்கு டிஸ்சார்ஜ் அறிக்கை மற்றும் இதர ஏற்பாடுகளை செய்து கொடுக்க அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும். குழந்தைகள் கூச்சலின் போதும் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் சிகிச்சை அளிக்கப்பட இயலாத நிலையில் குழந்தைகள் சிறப்பு பிரிவு பகுதியில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படுகின்றது. 108 வாகனங்கள் தற்போது பல்வேறு சிரம்மங்களுக்கிடையே இயக்கும் நிலை உள்ளது. 108 ஆம்புலன்ஸ் அழைத்தாலும் வருவதற்கு 8 முதல் 12 மணி நேரம் வரை ஆகின்றது, இதனால் உதகை சேட் மருத்துவமனையில் இருந்து தாய்மார்கள் பிரசவத்திற்கு கொண்டு செல்ல இந்திய சிலுவை சங்கம் மூலம் குறைந்த கட்டணமாக 1000 வரை மட்டும் செலுத்தி கோவைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பந்தலூரில் தற்போது உள்நோயாளிகளுக்கு பால் ரொட்டி வழங்கப்படுகின்றது. உணவு சமைத்து வழங்க உரிய அனுமதி கிடைக்கப்பெறவில்லை. சர்க்கரை குறித்த பரிசோதனை அறிக்கை தாயர் செய்து கணினியில் பதிவு செய்து வழங்கப்பட வேண்டியுள்ளதால் பரிசோதனை அறிக்கை மாலையில் வழங்கப்படும். மரியாதை குறைவாக பேசும் மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களிடம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் மேற்படிப்பு முடித்த அறுவை சிகிச்சை நிபுனர்கள் மயக்க மருந்து நிபுனர்கள் வேலைக்கு வருவதில்லை. இதனால் மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக வேறு மருத்துவமனைக்கு பரிந்துறை செய்யப்படும் நிலை ஏற்படுகின்றது. தற்போது உதகையில் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. கூடலூர் குன்னூர் கோத்தகிரி அரசு மருத்துவ மனைகளில் சிடி ஸ்கேன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுத்து பயன்பெறலாம் மக்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள் புகழேந்தி, அறிவழகன், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன். புளுமவுன்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக