புதுடில்லி:நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இன்று முதல், 'ரோமிங்' கட்டணமின்றி, அழைப்புகளை ஏற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., தலைமை மேலாண்மை இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா, நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
ரோமிங் கட்டணத்தை தவிர்க்க, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் பல சிம் கார்டுகளையும், ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் போன்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. வெளி மாநிலங்களுக்கு செல்லும் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், ரோமிங் கூடுதல் கட்டண பயமின்றி, தமக்கு வரும் மொபைல் போன் அழைப்புகளை ஏற்று, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.
இதன் மூலம், 'ஒரு தேசம்; ஒரு எண்' என்ற கனவு, நனவாகி உள்ளது. மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ஒப்புதல் பெற்று, இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அனுபம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக