அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 11 ஜூன், 2015

ஜூன்-12: இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் -

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்ஜூன்-12: இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் - சிறப்பு பகிர்வு..
உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. வாசகர்களின் கவிதை தொகுப்பு..
*** நாளைக்கு பழங்கள் இன்றி தவிப்பீர்!! ***
10 வயது சிறுவனாகிய என்னை
என் முதலாளி 14 வயதுக்கு ஃபார்வர்டு செய்தார்!!
பள்ளி சென்று நோட்டு பேப்பரில்
எழுத நினைத்த எனக்கு
பேப்பர் போடும் வேலை கிடைத்தது!!
பள்ளி சேர்ந்து தேர்வு எழுத நினைத்த நண்பனும்
பணம்கட்ட முடியாமல் தேநீர் கடையில் கிளாஸ் கழுவினான்!!
தொல்லியல் படிக்க ஆசை
மண் வெட்டும் வேலை கிடைத்தது!!
ஏவுகணை அறிவியல் படிக்க ஆசை
பீச்சில் பொம்மை ராக்கெட் விற்கும் வேலை!!
கணினி பயில ஆசை
காயலாங்கடையில் எடுப்பு வேலை!!
சூப்பர் ஸ்டாராகவும் ஒரு ஆசை
சுண்டல் விற்கும் வேலை கிடைத்தது!!
அண்ணாச்சிக்கடை, பெட்ரொல் பங்க்
பீடி தொழிற்சாலை, சோடா கம்பெனி
என் முகவரிகள் மாறிய வண்ணம் இருக்கும்!!
தினக்கூலி என்ற என் பதவி மட்டும் மாறாமல் இருக்கும்!!
இந்தியாவின் கடைசி குழந்தை தொழிலாளனாய் 
நானே இருந்துவிடுகிறேன்
தயவுசெய்து பிஞ்சுகளை நசுக்கிவிடாதீர்!!
நாளைக்கு பழங்கள் இன்றி தவிப்பீர்!!
- ச.ஸ்ரீராம்படம்: பா.ஓவியா
---
*** ஒரு சாதனையாளரை இழக்கிறது!! ***
எழுதுங்கள் புதிய விதி,
மாறட்டும் 
மழலைகளின் 
தலை விதி!!
பென்சில் ஏந்தும் 
விரல்கள்,
இனி 
பாத்திரம் 
கழுவாமல் இருக்க,
புத்தக பை 
தூக்கும் தோள்கள்
இனி 
குப்பை மூட்டை
சுமக்காமல் இருக்க,
தாயின் மடியில்
தஞ்சம் அடைந்த
கண்மணிகள்
இனி
தெருக்களில் 
தவிக்காமல் இருக்க,
நாளைய தலைமுறை,
உணவு விடுதியில்
மேசை துடைக்காமல்
இருக்க,
எட்டுக்கு பத்து
ஷ்பானெர்
கொடுப்பதை தடுக்க,
எடுப்பாகவும், 
துடுப்பாகவும்
என் 
பாலகன் 
பரிதவிக்காமல்
இருக்க,
எழுதுங்கள் புதிய விதி,
மாறட்டும் 
மழலைகளின் 
தலை விதி!!
மனதில்
கொள்ளுங்கள்,
ஒவ்வொரு 
குழந்தை தொழிலாளி
உருவாகும் பொழுதும்,
நம் நாட்டின் 
எதிர்காலம்
இருளுகிறது!!
ஒரு 
சாதனையாளரை 
இழக்கிறது!!
- முத்துகுமார் மாணிக்கம்
-----
*** எனக்கென்ன என்று இருந்துவிடாதே... ***
எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்
எனக்கென்ன என்று இருந்துவிடாதே
நடக்கும் வழியில், கற்கள் இருக்கும், முற்கள் இருக்கும்
எனக்கென்ன என்று ஒதுங்கிவிடாதே
சிறு செடிகள் மீது சேற்று துளிகள் 
அழுக்காய் படிந்து மூச்சுத்திணறி வளர்வதுண்டு
சேற்றை அடித்தவன் யாரென கேட்டால்
செடிகள் கூற பதிலில்லை, சிரிப்பு மட்டும் பதிலாகும்
கரண்டியை எடுக்கும் சிறுமியை கொஞ்சம் 
மெல்ல அழைத்து, எழுதுகோலை கொடுத்து
அவள் ஆயுதமாக மாற்றிடுவோம்
தட்டை எடுக்கும் சிறுவனை கொஞ்சம் 
கட்டி அனைத்து, உயர் கல்வியை கொடுத்து 
நல்ல மனிதனாக உயர்த்திடுவோம்
வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை
தலையில் வைத்து தூக்கிப்போகும்
அறியா மக்களின் அறியாமையை விளக்கிடுவோம்
இலவசம்தானே கல்வியும் இங்கே
பார பெட்டியை இறக்கி, பிள்ளையை தூக்கி
கல்விக் கண்ணை திறந்திடுவோம்
துரிதவுலகில் பணம் மட்டும் மனமே
வந்தால் ஜெயமே என்ற 
புரிதலை கொஞ்சம் மாற்றிக்கொள்
நாளைய சமூகம் நன்கு வளர
அழியாச் செல்வம் கல்வி கற்க உதவுங்கள்
யாரோ வருவார், யாரோ செய்வார்
எனக்கென்ன என்று இருந்துவிடாதே
நாமே செய்வோம், நன்றே செய்வோம் - அதை
இன்றே செய்வோம் என்ற கொள்கையை
விதைத்து செயல்படுவோம்.
-தினேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக