மின்அழுத்தம்
குறைப்பாட்டிற்கு கூடலூர் 110 கேவி மின் நிலையம்
அமைத்தால்
மட்டுமே நிரந்தர தீர்வு
மின்சார வாரியத்தின்
சார்பான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு கோவை மண்டல தலைமை பொறியாளர் மனோகரன்
தலைமை தாங்கினார். மேற்பார்வை பொறியாளர் ஆல்தொரை
முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர்
பாதுகாப்பு மைய தலைவரும் மின் நுகர்வோர் குறை தீர் மன்ற உறுப்பினருமான
சிவசுப்பிரமணியம் பேசும்போது பந்தலூர்
- கூடலூர் பகுதியில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போரை உரிய ஆவணம் கொடுத்தாலும் அலைகழிப்பதகவும் விண்ணப்பதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக உரிய காலக்கொடுவுக்குள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மின் இணைப்பு பெற செலுத்த வேண்டிய கட்டணம் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான கட்டணம் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணம் குறித்த தகவல்கள் அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் ஒட்டப்பட வேண்டும். மின்நுகர்வோர் குறை தீர்மன்றம் குறித்த தகவல் அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், தேவாலா திருவள்ளூவர் நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் நீடிப்பதாக அப்பகுதி மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எருமாடு மணல்வயல் பகுதியிலும் பனஞ்சிறா பகுதியிலும் குறைந்த மின்அழுத்தம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து விரைவில் அப்பகுதி மின் அழுத்த குறைபாட்டினை சரிசெய்ய வேண்டும். புதிய மின் மீட்டரில் அதிக அளவு மின்அளவீடு காட்டுவதாக பரவலாக புகார்கள் வருகின்றது. பழைய மீட்டரில் சிலர் வீடுகளுக்கு 100 ரூபாய்க்குள் கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் ஏற்படுவதால் மின் மீட்டரில் குறைபாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். செம்பாலா மரப்பாலம் புளியம்பாரை பகுதியில் சிறு மழை மற்றும் காற்றில் மின் தடை ஏற்படுகின்றது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றது. மின் வினியோகம் பாதிக்கப்படுவதால் இரவு நேரங்களில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். இப்பகுதியில் மின் வழித்தடத்தில் மின் கம்பிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து சீரான மின் வினியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழித்தடத்தில் மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர பகுதிகளில் தற்போது பழைய மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுகின்றது. கிராம புற பகுதிகளில் ஏற்கனவே உள்ள பழைய கம்பிகள் மாற்ற வேண்டும். அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தடுக்க முடியும். மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது முன்கூட்டியே மக்களுக்கு செய்திதாள்களில் தகவல் தெரிவிக்கலாம் மின்தடைசெய்யும் நாளுக்கு முன்னதாக தகவல் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்..என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்
இதற்கு பதில் அளித்த தலைமை பொறியாளர்
மனோகரன் பேசும்போது மின்வாரியத்தில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டே
மின் இணைப்பு வழங்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே பந்தலூர் கூடலூர் பகுதியில்
நிலவும் நிலப்பிரச்சனையில் மின் இணைப்பு வழங்குவதே சிரமம் இந்நிலையில்
தற்போது யாணை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்ததில் தற்போது சென்னை நீதிமன்றம் மேலும்
நிபந்தனைகள் விதித்துள்ளது, இதனால் மின் இணைப்பு
வழங்குவதில் சிரமம் மற்றும் தாமதம் ஏற்படலாம்.
எனினும் தகுதியுள்ளவர்களுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் இணைப்பிற்கான கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள்
குறித்த தகவல்கள், மின் நுகர்வோர் குறை தீர் மன்ற தகவல்கள் குறித்து அறிவிப்பு பலகை
வைக்கப்பட்டுள்ளது. இல்லாத அலுவலகங்களில் வைக்க
நடவடிக்கை எடுக்கப்படும். தேவாலா, எருமாடு
மணல்வயல், பனஞ்சிறா உள்ளிட்ட மின் அழுத்த குறைபாடு உள்ள பகுதிகளுக்கு புதிய டிராண்ஸ்பார்ம்
அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மின் மீட்டர் துல்லியமான அளவை காட்டுவதால்
கட்டணம் அதிகம் காட்டுவதாக புகார்கள் வருகின்றது.
மின் கட்டணம் விகிதா சார அடிப்படையில் கட்டணம் அதிகரிக்கும் நிலை ஏற்படும். எனினும் ஆய்வுகள் மேற்க்கொள்ளப்படும். மக்கள்
மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். செம்பாலா மரப்பாலம் புளியம்பாறை பகுதியில்
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது
நகர பகுதிகளில் மேற்க்கொள்ளப்படும் மின் கம்பிகள் மாற்றபடுவதை போல விரைவில் கிராம பகுதிகளிலும்
மாற்ற முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றது.
மின் தடை குறித்து முதல்நாளில் செய்தி தாளில் தகவல் அளிக்கப்படுகின்றது, மின் அழுத்தம் குறைவாக இருக்கும் பகுதிகளில் புதிய
டிராண்ஸ்பார்ம் அமைக்கப்படுகின்றது, மின்அழுத்தம் குறைப்பாட்டிற்கு கூடலூர் 110
கேவி மின் நிலையம் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் அதற்கு உள்ளூர்
மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மின் கம்பங்கள் பழுது நீக்கும் வகையில் கூடுதல் மின்
கம்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பழுதான
மின் கம்பங்கள் மாற்றப்படும், மின் கட்டணம் செலுத்த பல வழிகளை மின்வாரியம் வசதி அளித்துள்ளது
அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம், அதுபோலா சில
கிராம பகுதியை சேர்ந்தவர்கள் மிக குறைந்த மின் கட்டணத்தினை செலுத்த ஒரு நாள் சம்பளத்தினை
இழக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுபோன்ற
சூழலை தவிர்க்க முன்பணமாக செலுத்தி வைத்தால் அதிலிருந்து மின் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும். முன்பணமாக செலுத்துவதற்கு அதிகபட்ச வட்டித்தொகை
6 சதவீதம் அளிக்கப்படுகின்றது. இதனால் மின்
கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படாமல் தடுத்து அபராதம் கட்டுவதையும் தடுக்கலாம். இத்திட்டதினை அனைத்து தரப்பினரும் தங்களுக்கு ஏற்ற
வகையில் முன்பணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் சிவராஜ், ஜெயபால், மற்றும் உதவி செயற்பொறியாளர்கள்
சிவக்குமார், ராஜேந்திரன் மற்றும் அங்கீகாரித்த நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களான கோத்தகிரி
நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி பசவராஜ், புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க
தலைவர் சாந்தராஜ், குன்னூர் நுகர்வோர் சங்க துணை தலைவர் ரமணி, உதகை நுகர்வோர் சங்க
செயலாளர் தருமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக