அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 23 ஜூன், 2015

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்னய துறையின் சார்பான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்னய துறையின் சார்பான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் உதகை துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது,
கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்னய மாவட்ட அலுவலர் மரு.ரவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி வியாபாரிகள் பதிவு செய்ய கிராம புறங்களில் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடத்த வேண்டும்கிராமபுறங்கள் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் தடைச்செய்யப்பட்ட மற்றும் காலாவதியான உணவுகளை தமிழகத்திற்குள் விற்கும் நிலை உள்ளது,  எனவே இது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும்.  பல ஓட்டல்களில் சுடுதண்ணீர் வழங்க வேண்டும் வழங்கப்படும் உணவுகள் தரமான உணவுகளா என்பது குறித்து ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும் பல உணவுப்பொருட்களில் முறையான தகவல் இல்லாமல் பழைய உணவுப்பொருட்கள் முறுக்கு மிக்சர் பிரட் உள்ளிட்டவை பொட்டலமிட்டு விற்பனை செய்கின்றனர்உதகை மற்றும் கிராம புறங்களில் விற்பனை செய்யப்படும் பொட்டல டீக்களில் கலப்படம் அதிகமாக உள்ளது,  சாலையோர உணவகங்களில் தரம்சேர்க்கப்படும் நிறங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்,
பதிலளித்து பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி பேசும்போது தற்போது அவ்வப்போது ஆய்வுகள் மேற்க்கொள்ளபட்டு வருகின்றது,  ஊழியர்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பற்றாக்குறையால் அடிக்கடி ஆய்வு நடத்த இயலவில்லை.  எனினும் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் ஆய்வுகள் எடுத்து அனுப்பபட்டு வருகின்றது,  இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் என ​தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  தற்போது மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன,  3 வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  சாலையோர உணவகங்களுக்கு பல இடங்களில் சாக்கடைக்கு அருகில் உள்ளதுநகராட்சி நிர்வாகம் சுகாதாரமற்ற இடங்களில் கடைகள் அமைக்க அனுமதி வழங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,    தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் போது பிடிப்பட்டால் விற்பனையாளர் யாரிடம் கொள்முதல் செய்தாரோ அவருடைய பில் மற்றும் தகவல்கள் இருந்தால் விற்பனையாளர் சாட்சியாக இருப்பார்,  கொள்முதல் செய்ததற்கு ஆதாரம் இல்லை எனில் விற்பனை செய்தவரே அதற்கு முழு பொறுப்பாவார்.  விரைவில் அனைத்து பகுதியிலும் வியாபாரிகள் பதிவு செய்வதற்கு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  பல காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் உரிய கிடங்குகள் இன்றி முறையான பராமரிப்பு இல்லாததினால்  பாதுகாப்பு இல்லாமல்​ போகின்றதுபாக்கெட்டுகளில் தண்ணீர் அடைத்து விற்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை,  எனினும் பல பார்கள் மற்றும் கல்யான வீடுகள்கோவில் திருவிழாக்களில் இவை பயன்படுத்த படுகின்றது.  இவற்றை பயன்படுத்த கூடாது நெஸ்லே நிறுவன பொருட்கள் அனைத்தும் தற்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ப் படுகின்றது.  அதுபோல அனைத்து வகையான நூடுல்ஸ் வகைகளும் தற்போது ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது,  மக்களிடம் பாதுகாப்பான உணவு குறித்து விழிப்புணர்வு தேவை விழிப்புணர்வினால் மட்டுமே 80 சதவீத தரமற்ற உணவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்றார்
கூட்டத்தில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன்கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் உதகை தொகுதி நுகர்வோர் சங்க செயலாளர் தருமலிங்கம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார் சிவராஜ் அருன் அரிகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக