ஊட்டி, மே மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, மசினகுடி சமுதாய நல அறக்கட்டளை சார்பில், மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் விஷ்ணு சங்கர் தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம், பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் மங்கை சுப்ரமணியம், சமுதாய நல அறக்கட்டளை ஜெர்மினா முன்னிலை வகித்தனர். ஊட்டி அரசு கண் மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமையில், கண் மருத்துவ உதவியாளர்கள் முத்துராஜ், நாகூர் கனி, ஸ்ரீதர் உட்பட குழுவினர், பங்கேற்ற 128 பேருக்கு பரிசோதித்தனர்.
கண்பார்வை, கண்ணழுத்தம், கண்புரை, கண்ணில் நீர் வடிதல் உட்பட பார்வை குறைபாடுகளுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்கினர்; கண்புரை அறுவை சிகிச்சைக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை, மருத்துவம், மருந்துகள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக