அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 10 ஜூன், 2010

அழியும் வனத்தால் கேள்விக்குறியாகும் வாழ்வு! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவலை

அழியும் வனத்தால் கேள்விக்குறியாகும் வாழ்வு! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவலை 






பந்தலூர் : "வனத்தை அழிப்பதால், சந்ததியினரின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது' என, விழிப்புணர்வு முகாமில் கவலை தெரிவிக்கப்பட்டது.














கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி கலாச்சார சுற்றுச்சூழல் சேவை அறக்கட்டளை, தேசிய பசுமைப்படை சார்பில், பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சித்தானந்த் தலைமை வகித்தார். நெல்லியாளம் நகரமன்றத் தலைவர் காசிலிங்கம், பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் ராஜாமணி முன்னிலை வகித்தனர்.


 மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""காற்று, நீர், உணவுப் பொருட்களை பயன்படுத்தும் மனித சமுதாயம், ஆடம்பர வாழ்வுக்காக இயற்கையை அழிக்கும் கொடூர எண்ணத்துக்கு மாறியுள்ளது. ரசாயன உர பயன்பாட்டால், உணவுப் பொருட்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் அதே வேளையில், நிலத்தின் விஷத்தன்மையும் அதிகரிக்கிறது. தாய்பாலில் கூட 7 சதவீதம் விஷத் தன்மையுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. மரங்கள் மட்டுமே ஆக்சிஜனை தந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொள்கிறது. உயிர்வாழ தேவையானவற்றை தந்து தேவையில்லாததை எடுத்துக் கொள்ளும் வனத்தை காப்பாற்ற மனிதர்கள் உறுதியேற்க வேண்டும்,'' என்றார்.








நீலகிரி கலாசார சுற்றுச்சூழல் சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) நிர்வாகி சிவதாஸ்




நீலகிரி கலாசார சுற்றுச்சூழல் சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) நிர்வாகி சிவதாஸ் பேசியதாவது: இயற்கையை அழிப்பதில் மனிதர்கள் பல்வேறு வழிகளை கையாள்கின்றனர். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துதல், தனது தேவைக்காக வனங்களை அழித்தல் போன்றவற்றால், எதிர்கால சந்ததியினரின் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது. இயற்கை வனத்தில் மரங்கள், செடிகொடிகள் மட்டுமின்றி அரிய வகை மூலிகைகளும் உள்ளடக்கியுள்ளது. மூலிகைச் செடிகள் அதிகரித்தால், அதிலிருந்து வெளியேறும் காற்று, மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களை கட்டுக்குள் கொண்டு வருகிறது. மண்ணரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்யவும், புல்வெளிகளையும், வனத்தீயை கட்டுப்படுத்தும் கற்றாழை போன்றவற்றை அதிகரிக்கவும் முன்வர வேண்டும். உலக அளவில் 2 சதவீத காடுகளே இந்தியாவில் உள்ளன. இயற்கை வளங்களை அதிகரித்து, எதிர்கால சந்ததியினர் வாழ்வு மேம்பட, இன்றைய சமுதாயத்தை சேர்ந்த நாம் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும். இவ்வாறு, சிவதாஸ் பேசினார்.
















மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது


இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.




 கவுன்சிலர்கள் சந்திரன், செல்வகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.














* அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளி நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் வசந்தமாலா தலைமை வகித்தார்; விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக