கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில், மூங்கில் காடுகளை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனித வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம், முதன்மை வனப்பாதுகாவலருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிகளவில் வனப்பகுதி உள்ளது; இயற்கையாக வளர்ந்த மூங்கில் மரங்கள், முதிர்ச்சியடைந்துள்ளன. மண்ணரிப்பை தடுப்பதிலும், மண் வளப்பாதுகாப்பில் முக்கியத்துவம் கொண்ட மூங்கில் மரங்கள், யானைகளுக்கு முக்கிய உணவாக உள்ள நிலையில், காய்ந்துள்ளதால், கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைகின்றன. எனவே, "பச்சை தங்கம்' என்ற பெயரைக் கொண்ட மூங்கில்களை அதிகளவு வளர்க்க, வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
அரிய வகை மூங்கில் வளர்ப்பில் மதுரை வன ஆராய்ச்சி மையம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை முட்கள் இல்லாத மூங்கில் இனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் தட்ப, வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அரிய வகை மரங்களை சோதனை ரீதியாக உற்பத்தி செய்து அவற்றை பயிரிட வினியோகிக்கும் பணியில் வன ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே கோவை அமராவதியில் மட்டும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது. பிறகு மதுரையில் துவங்கப்பட்டது. வன ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வேம்பரளி அருகே கிழுவை மலை, அழகர்கோவில் மலைகளுக்கு இடைப்பட்ட காப்பு காட்டில் 25 எக்டேர் பரப்பில் மரங்கள் உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பத்தாயிரம் அரிய வகை மரங்கள் நாற்றங்கால் அமைத்துள்ளனர். வேம்பு, மலைவேம்பு, காட்டு துளசி, சந்தனம், சவுக்கு, யூகலிப்டஸ், கொன்னை, புங்கை மரவகைகள் வளர்க்கப்படுகின்றன. வேர் இல்லாத மரங்களை "மிஸ்ட் ஸ்டாண்ட்' எனப்படும் கூடாரம் அமைத்து உற்பத்தி செய்கின்றனர்.
சவுக்கு, மூங்கில் போன்றவைகளின் குச்சிகளை வைத்து 22 நாட்கள் வரை பராமரிக்கின்றனர். அதில் வேர் பிடித்ததும் நாற்றாங்கால்களுக்கு மாற்றி விடுகின்றனர். சில மரங்களை "ஒட்டு' முறையில் உற்பத்தி செய்கின்றனர். இவைகளை மற்ற பகுதிகளிலுள்ள வனத்துறையினர் பெற்று அரசு காடுகள், ரோட்டோரங்களில் பயிரிடுகின்றனர். அரிய வகை மூங்கில்கள்: தற்போது பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்த முட்களில்லாத மூங்கில் இனங்களை வெளிமாநிலங்களில் இருந்து வரவழைத்துள்ளனர். திரிபுரா, நியூட்டன்ஸ், பால்கோவா, கேசுவரினா, ஜிங்குனியானா போன்ற மூங்கில்கள் நாற்றங்கால் அமைத்து பயிரிடப்பட்டுள்ளன.
வில்காரீஸ் என்ற மூங்கில் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. இந்த மையத்தை மேலும் விரிவுப்படுத்தினால் தென் மாவட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். காட்டு எருமைகள் அட்டகாசம்: இந்த காப்பு காட்டில் காட்டு எருமைகள், நரி, மயில்கள், ஒரிரு சிறுத்தைகள் உலாவுகின்றன. காட்டு எருமைக்கள் இரவில் காடுகளில் இருந்து ரோடுகளுக்கு வந்து விடுகின்றன. பகலில் குடிநீர் கிடைக்கா விட்டாலும் கீழே இறங்கி விடுகின்றன.
இந்த காட்டு எருமைகள் அடிக்கடி இந்த வன ஆராய்ச்சி மையத்தில் புகுந்து நாற்றங்கால்களை நாசப்படுத்தி விடுகின்றன. "காட்டு எருமைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. அவைகளை விரட்டினாலும் உடனடியாக நகராது. மேலும் கன்றுகளுடன் வரும் காட்டெருமைகள் அவ்வழியாக செல்பவர்களை தாக்கி விடுகின்றன. எனவே சூரியஒளி மின்வேலிகள் அமைத்து அவை வருவதை தடுக்க வேண்டும்,''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக