அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டாக்டர் வருவதில்லை என குற்றச்சாட்டு
பந்தலூர் அருகே உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் பணிக்கு வராதது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையத்தின் தலைவர் சிவசுப்ரமணியம் சுகாதாரத்துறைஇணை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பந்தலூர் அடுத்துள்ள உப்பட்டியில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையம் உப்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆரம்ப சுகாதார நிலையமாக கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் கட்டுப்பாட்டில் உப்பட்டி, குந்தலாடி, நெல்லியாளம், அத்திமாநகர், தேவாலா, தேவாலா அட்டி, நாடுகாணி ஆகிய 7 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. உப்பட்டி, புஞ்சைவயல், ஒலிமடா, பொன்னானி, நெல்லியாளம், அத்திக்குன்னா, பெருங்கரை, சேலக்குன்னா, நெல்லியாளம் டான்டீ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியுள்ளனர். ஆனால், சுகாதார நிலையத்தின் டாக்டர் வாரத்தில் பல நாட்கள் இங்கு வருவதில்லை. இதனால், டாக்டர் இல்லாமல் சுகாதார நிலையத்திற்கு வரக்கூடிய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்துக்கொள்ள இயலாமலும், குழந்தைகளுக்கு பரிசோதனையின்றி தடுப்பூசி போடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி சுகாதார நிலையத்தில் தினமும் பணி நேரத்தில் டாக்டர் பணியாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களின் போராட்டத்தை தவிர்க்க இயலாத நிலை உருவாகும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக