அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 28 ஜூன், 2010

உணவு பாதுகாப்பு' தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்

ஊட்டி : பொதிகை தொலைக்காட்சியில் நாளை (27ம் தேதி) பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை "உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் நடக்கும் கேள்வி நேரம் நிகழ்ச்சியில், நுகர்வோர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநில அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், நுகர்வோர் பாதுகாப்புத்துறை மாநில சேவை மையம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி பொதுமக்கள் தங்களது குறைகளை தொலைபேசி வாயிலாக தெரிவித்திடவும் அதன் மீது தீர்வு செய்திடவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இம்மையம் அதிக அளவில் நுகர்வோர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஏப்., 29ம் தேதி, "நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் விவசாயிகளின் உரிமைகள்' என்ற தலைப்பில் கேள்வி-நேரம் நிகழ்ச்சியை பொதிகை தொலைகாட்சியில் நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்தது.இதனை தொடர்ந்து வரும் 27ம் தேதி பொதிகை தொலைக்காட்சியில் பிற்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை "உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் கேள்வி நேரம், சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர், சென்னை மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அலுவலர், சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டுத்துறை அலுவலர், தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதி ஆகிய அலுவலர்களை கொண்டு நேரலை நிகழ்ச்சியாக நடத்தப்படவுள்
ளது.இந்நிகழ்ச்சியில், "பாதுகாப்பான உணவு' தொடர்பான ஆலோசனை பெற விரும்புவோர் , உள்ளூர் நேயர்கள் 17077, 6462 270, 94449 01011, 94449 01021, வெளியூர் நேயர்கள் 044 17073, 0091 44253 97010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக