தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ் பெறப்படும் தகவல்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர், விண்ணப்பத்துக்கு 10 ரூபாயும், பெறும் தகவலில் பக்கத்துக்கு 2 ரூபாயும், 'சிடி' என்றால் 50 ரூபாயும் கட்ட வேண்டும்.
ஆவணங்களை நேரில் பார்க்க வேண்டும் என்றால், முதல் ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
ஆனால் அடுத்த ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் 5 ரூபாய் என்ற வீதத்தில் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, மே மாதம் 24ம் தேதி ஒரு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரருக்கு அளிக்கப்படும் தகவல்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் தவிர, கூடுதலாக கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது.
அப்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், கட்டணம் மற்றும் செலவு விதிகளின் படி, கட்டணத் தொகையை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக